அட, இந்த பாதாம் மிக்ஸ் பவுடரை கடையிலிருந்து வாங்கிதான், பாலில் கலந்து குடிப்பிங்களா? இனி நீங்களே உங்க கையால, இந்த பாதாம் பவுடரை, வீட்டிலேயே அரைச்சுக்கோங்களே!

badam-milk
- Advertisement -

பாதாம் பால் என்றாலே பெரும்பாலும் அதை கடைகளில் தான் குடிப்போம். அப்படி இல்லை என்றால், பாதாம் மிக்ஸ் பவுடரை கடையிலிருந்து வாங்கி, அந்த பவுடரை, பாலில் கலந்து குடிப்போம். இதில் எந்த அளவிற்கு முழுமையாக பாதாமின் சத்து நிறைந்திருக்கிறது என்பது நமக்கு தெரியாது. அதுமட்டுமல்லாமல் கடைகளில் இருந்து வாங்கும் பாதாம் மிக்ஸ் பவுடரில், பிரிசர்வேட்டிவ் அதிகம். நம்முடைய கையாலேயே பாதாமை வாங்கி வறுத்து பொடிசெய்து, இப்படி பக்குவமாக அரைத்து, ஸ்டோர் செஞ்சு குடுத்து பாருங்க! ஒரு மாசத்துக்குள்ள நீங்க புசுபுசுன்னு அழகா, பளபளப்பா, மாறிடுவீங்க. ஆரோக்கியமான பாதாம் பவுடர் எப்படி செய்வது இப்பவே தெரிஞ்சுக்கலாமா?

badam-powder

பாதாம் மிக்ஸ் பவுடர் தயாரிக்க தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு – 200 கிராம், முந்திரி பருப்பு – 10, பிஸ்தா – 10, ஏலக்காய் – 4, உங்களுடைய வீட்டில் குங்குமப்பூ இருந்தால் அது ஒரு சிட்டிகை, இல்லை என்றால் குங்குமப்பூவை தவிர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை – 200 கிராம் அளவு, நீங்கள் சர்க்கரையின் அளவை குறைவாக சாப்பிடுவீர்கள் என்றால், அதற்கு ஏற்றார்போல் 150 கிராம் அளவு சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் ஆரோக்கியமாக இந்த பாதாம் பாலை செய்ய, கடைகளில் விற்கும் பாலிஷ் போடாத சர்க்கரையையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது நாட்டு சர்க்கரை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து நன்றாக சூடான பின்பு, அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும். அதன் பின்பு தயாராக இருக்கும் பாதாம் முந்திரி பிஸ்தா இந்த மூன்று பொருட்களையும் சூடான கடாயில் போட்டு வறுத்துவிட வேண்டும். இறுதியாக அந்த சூட்டில் 4 ஏலக்காய் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். மொத்தமாக 5 நிமிடங்கள் வரை வழிபட்டால் போதும். இந்த கலவையை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

Badam benefits in Tamil

அடுத்தபடியாக ஒரு பெரிய மிக்ஸி ஜாரில், முதலில் சர்க்கரையை போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு தயாராக வைத்திருக்கும் இந்த பருப்பு வகைகளை சேர்த்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மிகவும் மொழுமொழுவென்று இந்த மாவை அரைத்தால், பாதாம் பருப்பில் இருந்து எண்ணெய் வெளிவந்து கொஞ்சம் பிசுபிசுப்புத் தன்மை ஆகிவிடும். ஓரளவிற்கு ரவை பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பாதாம் மிக்ஸ் பவுடரை காய்ந்த கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சூடான பாலில் 1 டேபிள் ஸ்பூன் அளவு இந்த பாதாம் பவுடரை கலந்து இரவு நேரங்களில் குடித்து வந்தால், உங்களது எலும்புகள் வலிமை பெறும். உடல் ஆரோக்கியம் பெறும். தோல் சுருக்கம் நீங்கி, என்றும் இளமையாக இருப்பதற்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு தினமும் இதை குடித்து வரலாம்.

badam-powder1

தேவைப்பட்டால் இந்த பவுடரை நீங்கள் பாலில் கலந்து குடிக்கும் போது, ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் சேர்த்து கலந்து குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த பாதாம் ஹெல்த் டிரிங்க் மிகவும் அவசியம் தேவை. ஆண்களும் குடிக்கலாம். தவறு கிடையாது. இந்த பாதாம் பாலை ஃப்ரிட்ஜில் வைத்து, கூல்ட்ரிங்க்ஸ் ஆகவும் குடிக்கலாம். அது உங்களுடைய விருப்பம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால், உங்களுடைய வீட்டில் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். பாதாம் பருப்பு விலை அதிகம் என்று நினைக்காதீர்கள். இதில் சத்தும் சற்று அதிகம் தான் உள்ளது.

இதையும் படிக்கலாமே
ரேஷன் அரிசியில் எப்டிங்க ஹோட்டல் தோசை வரும்? மொறுமொறுன்னு தோசை ஹோட்டலில் சுடுவது போலவே வரும். அது எப்படின்னு நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -