ரேஷன் அரிசியில் எப்டிங்க ஹோட்டல் தோசை வரும்? மொறுமொறுன்னு தோசை ஹோட்டலில் சுடுவது போலவே வரும். அது எப்படின்னு நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

ration-rice-dosa
- Advertisement -

பொதுவாகவே ரேஷன் அரிசியில் இதெல்லாம் வருமா? என்கிற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கும். ஆனால் பெரும்பாலும் மக்கள் ரேஷன் அரிசியில் பல உணவு வகைகளை செய்து கொண்டும், சாப்பிட்டு கொண்டும் தான் இருக்கிறார்கள். ரேஷன் அரிசியில் இட்லி பஞ்சு போல சூப்பராக வரும். அதே போல தோசையும் மெத்தென்று அருமையாக வந்து விடும். ஆனால் ஹோட்டலில் தருவது போல் மொறுமொறுவென்று மெல்லிய தோசை வருமா? வரும். அதை எப்படி செய்வது என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

crispy-dosa

தோசை மாவு அரைக்க தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டேபிள் ஸ்பூன், பச்சரிசி – அரை கப், புழுங்கல் அரிசி – 11/2 கப், உளுந்து – 1/2 கப், வெள்ளை அவல் – 50 கிராம், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனி தனியாக இரண்டிலிருந்து மூன்று முறை தண்ணீர் ஊற்றி நன்கு அலசிக் கொள்ளுங்கள். பின் பருப்பு வகைகளுடன் அரிசியையும், உளுந்தை மட்டும் தனியாகவும் நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். நீங்கள் தோசை ஊற்றும் பொழுது அவல் சேர்த்தால் போதும். அதனால் இப்போது இவற்றுடன் ஊற வைக்கத் தேவையில்லை.

aval

இவைகளை குறைந்தது மூன்று மணி நேரமாவது ஊற வையுங்கள். பின்னர் அரிசி பருப்பு வகைகளை தனியாகவும், உளுந்தை மட்டும் தனியாகவும் கிரைண்டரில் நன்கு ஆட்டி எடுக்கவும். புழுங்கல் அரிசிக்கு பதிலாக இட்லி அரிசியும் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு வித்தியாசமான முறை எல்லாம் இல்லை. நீங்கள் உங்கள் வீட்டில் எப்படி இட்லி, தோசை மாவு அரைப்பீர்கள்? அதே போல் அரைத்தால் போதுமானது.

- Advertisement -

பின்னர் தேவையான அளவிற்கு மாவில் உப்பு சேர்த்து கைகளால் நன்கு கலந்து விடவும். ஒரு எட்டு மணி நேரம் அளவிற்கு அப்படியே புளிக்க விட்டு விட வேண்டும். பின்னர் மறுநாள் காலையில் 50 கிராம் அளவிற்கு வெள்ளை அவல் எடுத்துக் கொண்டு ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து மிக்ஸி ஜாரில் நைசாக அரைக்க வேண்டும். இந்த கலவையையும் மாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகளை சேர்த்திருப்பதால் மாவில் அவல் சேர்க்கவில்லை என்றால் தோசை நன்றாக வராது. அவல் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். அதனை தவிர்த்து விடாதீர்கள்.

gothumai-dosa

அவ்வளவு தாங்க! இப்போது இந்த மாவில் மட்டும் ஹோட்டலில் சுடுவது போல் மெல்லியதாக தோசை சுட்டு பாருங்கள். அருமையாக வெந்து வரும். ஒரு பக்கம் மட்டுமே வேக விட வேண்டும். தப்பி தவறியும் திருப்பி போடக்கூடாது. அப்பறம் ஹோட்டல் தோசை போல் இருக்காது. இதில் சேர்க்கப்பட்டுள்ள அத்தனை பொருட்களும் நீங்கள் ரேஷனில் இருந்து வாங்கி வந்த பருப்பு மற்றும் அரிசி வகைகளை வைத்து செய்யலாம். அதிக விலை கொடுத்து கடையில் வாங்க வேண்டிய அவசியம் கூட இல்லை.

- Advertisement -

dosai

தேவையான பொருட்களும், அளவுகளும் மட்டும் சரியாக சேர்த்து மாவு மட்டும் அரைத்துக் கொள்ளுங்கள் போதும். இதனுடன் காரச் சட்னி வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையாக இருக்கும். வீட்டில் இருக்கும் யாரும் இவற்றை ரேஷன் பொருட்களை கொண்டு செய்ததாக கண்டுபிடிக்க கூட முடியாது. நீங்களும் ஒரு முறை செய்து பார்த்து அசத்தி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
சுவையான பூண்டு சாதம் செய்வது இவ்வளவு ஈஸியா? ஆரோக்கியமான இந்த பூண்டு சாதத்தை செய்ய வெறும் 10 நிமிடம் போதுமே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -