பணவரவிற்கு தடையாக இருக்கும் எப்படிப்பட்ட, கண்ணுக்குத் தெரியாத தோஷமும் தெறித்து ஓடும். இந்த ஒரு சிறிய முடிச்சை பார்த்தால்!

cash-badam

பணக்காரர்களுக்கு அதிகப்படியான பணம் மேலும் மேலும் சேர்ந்து கொண்டே இருக்கின்றது. ஏழையாக இருப்பவர்கள் மேலும் மேலும் ஏழையாகிக் கொண்டே இருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் நடப்பது இதுதான். யாராலும் மறுக்க முடியாத உண்மை. என்ன செய்வது? பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர் ஆவதற்கு அவர்கள் பெற்று வந்த வரமும் காரணமில்லை. ஏழை மேலும் மேலும் ஏழையாதற்கு அவர்கள் வாங்கிய சாபமும் காரணம் இல்லை. பணக்காரராக இருப்பதும், ஏழையாக இருப்பதும் அவரவர் கையில்தான் இருக்கின்றது. நாம் நினைத்தால் நம்மால் நிச்சயமாக பணக்காரராக முடியும் என்ற தன்னம்பிக்கை முதலில் நம் மனதில் வரவேண்டும். தன்னம்பிக்கையோடு முயற்சி எடுக்கும் பட்சத்தில், தொடர்ந்து பல தோல்விகளை சந்திக்க நேரிட்டாலும் அதை எல்லாம் தாண்டி வரும்போது தான் நமக்கு வெற்றி கிடைக்கும்.

money

நம்முடைய கையில் பணம் தங்காமல் இருப்பதற்கு கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ தோஷங்கள் காரணமாக இருக்கலாம். ஜாதகரீதியாக தோஷங்கள், பூர்வ புண்ணிய தோஷங்கள் இப்படி பல தோஷங்கள் உள்ளது. அதைப்பற்றி எல்லாம் கவலையே படாதீங்க! பணம் வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மனதில் விதையுங்கள்! நம்முடைய முன்னோர்கள் சொல்லுவார்கள், எந்த ஒரு விஷயத்தையும், மூன்று நாட்கள் தொடர்ந்து ஒருசேர, ஒரு சிந்தனையாக நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அது நடந்துவிடும் என்று. மூன்று நாட்கள் ஒரே ஒரு நினைப்பை மட்டும் மனதில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் கஷ்டம் தான்! நீங்கள் வேண்டுமென்றால், சோதனை பண்ணி பாருங்கள்.

எந்த ஒரு விஷயத்தை தொடர்ந்து நினைக்கிறீர்களோ அது கட்டாயம் நடந்துவிடும். அப்படிதான் பணமும். ‘பணம் என்னிடமெல்லாம் வராது!’ அப்படின்னு நினைச்சிட்டு இருந்தா, வராமல் போய்விடும். ‘பணம் வரும். பணம் என்னிடம் வரும்.’ என்று நினைத்துக் கொண்டே இருந்தால் வந்துவிடும். இவ்வளவுதாங்க!

money

சில பேருக்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும். ஆனால் வீண் விரயம் ஆகிக்கொண்டே இருக்கும். சேமிப்பு என்று ஒரு ரூபாய் கூட எடுத்து வைக்கவே முடியாது. சில பேர் சேமித்து வைப்பார்கள். அதைக் கொண்டுபோய் மருத்துவமனையில் கொட்டுவார்கள். ஒருசிலரால் மட்டும்தான் பணத்தை சேமித்து, அதை வீண் விரயம் செய்யாமல் சந்தோஷத்திற்காக அனுபவிக்கும் சூழ்நிலை அமையும். நம்முடைய வாழ்க்கையை நாமும் சந்தோஷமாக மாற்றிக்கொள்ள, நம் கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க, ஒரு சிறிய பரிகாரத்தை செய்தாலே போதும். அது என்ன பரிகாரம் என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று காலை, உங்கள் வீட்டில் வழக்கம் போல் பூஜையை முடித்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையில் ஏற்றும் தீபத்தை மட்டும் அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அன்றைய தினம் மதியம், ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை இருக்கக்கூடிய சூத்திர ஓரையில் தான் இந்த பரிகாரத்தை செய்யப் போகிறீர்கள். பரிகாரத்தை செய்து முடிக்கும் வரை காலையில் ஏற்றிய தீபத்தில் மட்டும் குளிர விடாமல் பார்த்துக் கொண்டால் போதும்.

Badam benefits in Tamil

வெள்ளிக்கிழமை மதியம் சுக்கிர ஓரையில், அதாவது மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் மூன்று பாதாமை உங்களது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று பாதாமும் கையில் இருந்தபடியே இரு கைகளையும் சேர்த்து சுக்கிர பகவானை மனதார நினைத்து ‘ஓம் சுக்ராய நமஹ’. என்ற மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும்.

அதன்பின்பு குலதெய்வத்தையும், சுக்கிர பகவானையும் மனதார வேண்டிக்கொண்டு, ஒரு பச்சை வண்ண துணியில் இந்த பாதாம் பருப்பை வைத்து, பச்சை நிற நூலில் கட்டி நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். இந்த சுக்கிர ஓரையிலேயே, பணப் பெட்டியில் வைக்க வேண்டும்.

sukran

பணம் சேராமல் இருப்பதற்கு கண்ணுக்குத் தெரியாத எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி. அது உங்களை விட்டு காணாமல் போய்விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மூன்று மாதங்கள் கழித்து இதேபோல் மற்றொரு வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் அந்த பாதாம் பருப்பை மாற்றிக்கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். பலன் அடைய முடியும். எக்காரணத்தைக் கொண்டும் பணம் சம்பாதிக்கும் உங்களது முயற்சியை மட்டும் கை விடாதீர்கள். எதுக்காக தெரியுமா பரிகாரம் செய்ய சொல்றாங்க? ‘பரிகாரம் செஞ்சுட்டோம்! இனிமே எந்த பிரச்சனையும் வராது. என்று  உங்களுக்குள் ஒரு மன நிம்மதி வரும். அந்த நிம்மதியை போதுங்க! பணமும் தானா உங்ககிட்ட வந்து சேர்ந்துவிடும். அப்போ! பரிகாரம் எல்லாம் பொய்யா, என்ற விதண்டாவாத கேள்வியை எழுப்பாதீர்கள். “மந்திரம் கால் மதி முக்கால்”.

இதையும் படிக்கலாமே
குலதெய்வ வேண்டுதல் விரதம்! வியாழக்கிழமை தோறும் இப்படி விரதம் இருந்தால், 14-வது வாரம் நிச்சயம் நம்பமுடியாத அதிசயம் நடக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam sera pariharam. Panam athigam vara Tamil. Panam eppadi serum. Panam athikarikka Tamil.