பாதாம் பிசின் பயன்கள்

badham-pisin

நம் நாட்டில் தோன்றிய சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் மருத்துவ முறைகளில் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சனைகள், நோய்களுக்கு தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இரு மருத்துவ முறைகளிலும் அக்காலம் தொட்டே சில மரங்களில் வடிகின்ற பிசின் போன்றவையும் மருந்தாக பயன்படும் என கூறப்பட்டிருக்கிறது. அப்படி நமது நாட்டின் வடக்கு பகுதியில் அதிகம் விளையும் ஒரு மரம் தான் “பாதாம் பருப்பு மரம்” அல்லது “வாதுமை மரம்”. இம்மரத்தில் இருந்து கிடைக்கின்ற பாதாம் பருப்பை போலவே, அதிலிருந்து கிடைக்கும் “பாதாம் பிசின்” பல உடல் நோய்கள், குறைபாடுகளை சரிசெய்ய கூடியவை அந்த பாதாம் பிசின் செய்யும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Badam benefits in Tamil

பாதாம் பிசின் பயன்கள்

தாதுக்கள்
உடலுக்கு எந்தளவு வைட்டமின் சத்துகள் முக்கியமோ அதே அளவு மினரல் எனப்படும் தாதுக்களும் மிகவும் அவசியமாகும் இந்த தாதுக்கள் உடலின் எலும்புகள், தோல் போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு மகனும் முக்கியமானதாகும். தாதுக்கள் அதிகமுள்ள பாதம் பிசினை அதிகம் சாப்பிட்டு வர உடலின் தாது தேவை பூர்த்தியாகும் .

உடல் சூடு

நமது நாட்டில் பெரும்பாலான காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சிலருக்கு உடல் சூடு அதிகமாகி அவதியுறுகின்றனர். அதிலும் சிலருக்கு உடல் சூடு அதிகமாகி விடுவதால் உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதாம் பிசினை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து அது கோந்து போன்று ஆன பிறகு சாப்பிட உடல் சூடு தணியும்.

- Advertisement -

அசிடிட்டி

சிலருக்கு அளவிற்கு அதிகமான உணவை சாப்பிடுவதாலும், இரவில் நெடு நேரம் கழித்து உணவு சாப்பிடுவதாலும் நெஞ்செரிச்சல், அசிடிட்டி எனப்படும் வயிற்றில் செரிமான அமிலங்களில் ஏற்றத்தாழ்வால் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருப்பது போன்றவை ஏற்படுகிறது. இப்படியான சமயங்களில் பாதாம் பிசினை ஊற வைத்து, சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்றவை நீங்கும்.

உடல் எடை கூட, குறைக்க

பாதாம் பிசினுக்கு அதிகளவு இருக்கும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும், குறைவான எடை கொண்டவர்கள் எடை கூடவும் செய்யும் ஒரு சிறப்பு ஆற்றல் இருக்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை அருந்த வேண்டும். உடல் எடை கூட விரும்புவார்கள் கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட வேண்டும்.

உடல் நலம்

நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலம் தேறி வரும் நபர்கள் மற்றும் தற்போதும் நோயால் அவதிப்பட்டு வரும் நபர்கள் பாதாம் பிசினை நீரில் ஊற வைத்து வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நோயால் உடல் இழந்த பலத்தை மீண்டும் உடலுக்கு தரும். நீண்ட கால நோயை போக்குவதற்குண்டான நோயெதிர்ப்பு சக்தியையும் பெருக்கும்.

பேதி

அதிக வெப்பமிகுந்த கோடைகாலங்கல், கோடைகாலம் முடிந்து பருவ மழை தொடங்கும் மாதங்கள் போன்ற பருவ மாற்றக்காலங்களிலும், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதாலும் வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்தி தொடர் பேதி சிலருக்கும் உண்டாகிறது. இந்த சமயத்தில் தண்ணீரில் ஊறவைத்த பாதாம் பிசினை சிறிதளவு உட்கொண்டு வருவதால் தொடர்ந்து ஏற்படும் பேதி நிற்கும்.

சிறுநீரக பிரச்சனைகள்

கோடைகாலங்களில் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு சிலருக்கு நீர் சுருக்கு ஏற்படுகிறது. மேலும் சிறுநீரக பைகளில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் சரியாக கழிக்க முடியாத நிலையும் உண்டாகிறது. ஊற வைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும். கோடைகாலங்களில் ஏற்படும் நீர்வறட்சி மற்றும் நீர் சுருக்கு போன்றவை நீங்கும்.

ஆண்மை குறைபாடுகள்

வெப்பம் அதிகம் நிறைந்த இடங்களில் பணிபுரிவதாலும், இறுக்கமான கால்சட்டைகள்(பாண்ட்) அணிவதாலும் உஷ்ணம் அதிகமாகி இன்று ஆண்கள் பலருக்கும் அவர்களின் விந்து நீர்த்து போய் விடுகிறது. தினமும் இரவு இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து பருகி வந்தால் உடலின் உஷ்ணம் தணிந்து, நரம்புகள் வலுப்பெற்று விந்து கெட்டிப்படும். மலட்டுத்தன்மை இருந்தாலும் அது நீங்கும்.

பெண்கள்

புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் வலு அதிகம் தேவைப்படுகிறது. வட இந்தியாவில் பல காலமாகவே புதிதாக குழந்தை பெண்களுக்கு பாதாம் பிசின் அதிகம் கலந்த லட்டு இனிப்புகளை வழங்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. அவற்றை சாப்பிடும் பெண்களுக்கு உடலின் எலும்புகள் வலுப்பெறுகிறது மற்றும் கருப்பையில் குழந்தை பிறந்த பிறகும் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

புண்கள்

வெட்டு காயங்கள், மற்றும் தீயினால் ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்கு சற்று நாளாகும். இக்காயங்களை குணப்படுத்த நவீன மருந்துகளை பயன்படுத்தினாலும் அவ்வப்போது தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பிசினை சிறிது உள்ளங்கையில் எடுத்து, நன்றாக குழைத்து புண்கள், காயங்களின் மீது தடவி வந்தால் அவை சீக்கிரத்தில் ஆறும்.

இதையும் படிக்கலாமே:
மணத்தக்காளி கீரை பயன்கள்

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Badam pisin benefits in Tamil or Badam pisin health benefits in Tamil or Badam pisin uses in Tamil. It is also called as Badam pisin paynagal in Tamil or Badam pisin nanmaigal in Tamil language.