- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகரும்புள்ளி மறைய பாதாம் டிப்ஸ்

கரும்புள்ளி மறைய பாதாம் டிப்ஸ்

- Advertisement -

நம் முகத்தில் இருக்கக் கூடிய கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் ஆகியவற்றை நீக்குவதற்கு அதிகம் இனி சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. 10 நிமிடத்தில் ரொம்பவும் சுலபமாக அதுவாகவே வெளியில் வரும்படி செய்து விடலாம். நம் முகம் பளபளவென கண்ணாடி போல பளிச்சென்று ஜொலிக்க, சருமத்தை முதலில் மென்மையாக்க இவற்றை செய்ய வேண்டும். கரும்புள்ளி மற்றும் வெண்புள்ளிகளை அகற்றுவதற்கு பாதம் எப்படி உதவி செய்கிறது? என்னும் அழகு குறிப்பு சார்ந்த தகவலைத் தான் இந்த பகுதியின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நம் சருமத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் உற்று நோக்கினால் ரொம்பவும் சின்ன சின்னதாக வெண் புள்ளிகள் வேரோடு ஒன்றிக் கொண்டு இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஆங்காங்கே கரும்புள்ளிகளும் தென்படும். இவற்றை நீக்கும் பொழுது, அது சரும துவாரங்களுக்குள் இருந்து வேருடன் வெளியில் வருவதை பார்க்க முடியும். இந்த கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் இல்லாமல் நம் சருமத்தை தொட்டுப் பார்த்தால் அவ்வளவு மென்மையாக இருக்கும்.

- Advertisement -

மென்மையாக இருக்கும் நம் சருமத்தை கரடு முரடாக கடினமாக ஆக்குவது இந்த கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் தான். இதனை ரொம்ப எளிதாக சிரமப்படாமல் அகற்றுவது எப்படி? என்பதை தான் இந்த பாதாம் நமக்கு சொல்லப் போகிறது. அதற்கு ரெண்டு பாதாம் எடுத்துக் கொள்ளுங்கள். அதை கேஸ் ஸ்டவ்வின் மீது அடுப்பை பற்ற வைத்து நெருப்பில் படும்படி வையுங்கள். பாதாமில் எண்ணெய் தன்மை இருப்பதால் எளிதாக தீ பற்றி எரியும்.

பற்றி எரியும் நெருப்பில் பாதாம் எரிந்து கருக ஆரம்பிக்கும். கருகிய பாதாமை எடுத்து உரலில் போட்டு நன்கு இடித்து பவுடர் ஆக்கிக் கொள்ளுங்கள். இந்த பவுடருடன் சிறிதளவு ஜெலட்டின் சேர்க்க வேண்டும். ஜெலட்டின் என்பது விலங்கின் உறுப்புகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு மூலக்கூறு ஆகும். இந்த ஜெலட்டின் உணவு தயாரிப்புகளிலும், அழகு பொருட்கள் தயாரிப்புகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

- Advertisement -

ஜெலட்டின் சேர்க்கும் பொழுது அது தோலுடன் சேர்த்து இறுக்கமாக பிடித்துக் கொள்ளும். ஜெலட்டின் சேர்த்ததும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்பு அடுப்பில் இதனை வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பாதாம் பவுடருடன் ஜெலட்டின் சேர்ந்து கரைய ஆரம்பிக்கும். நுரைத்து கரைந்து கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து வெதுவெதுப்பாக ஆறவிடுங்கள். வெதுவெதுப்பாக ஆனதும் அப்படியே எடுத்து மூக்கு மற்றும் மூக்கு இடுக்குகளில் எல்லாம் நன்கு தடவி கொள்ள வேண்டும். உதட்டிற்கு கீழே இருக்கும் பகுதிகளிலும் தடவிக் கொள்ளுங்கள். வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் இருக்கும் கண்ணம், நெற்றி, தாடை போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் தடவி காயவிட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
வெள்ளிக்கிழமை முருகன் வழிபாடு

கண்கள், உதடுகள், புருவங்கள் ஆகிய இடங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். நன்கு காய்ந்து தோல் போல ஆனதும் அப்படியே உரித்து எடுத்தால் வெண் புள்ளிகள், கரும்புள்ளிகளுடன் சேர்ந்து உரிந்து வந்துவிடும். பத்து நிமிடத்தில் நன்கு காய்ந்து தோல் இருக ஆரம்பித்து விடும். அவ்வளவுதான் பத்தே நிமிடத்தில் எல்லா விதமான சரும பிரச்சனைகளும் தீர்ந்தது போல், முகம் கண்ணாடி போல ஜொலிப்பதை நீங்கள் பார்க்கலாம். எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தலாம். சுலபமானது மற்றும் பக்க விளைவுகள் இல்லாதது என்பதால் தாராளமாக ஆண்கள், பெண்கள் இருப்பாளரும் இதனை பயன்படுத்தி பலன் பெறலாம்.

சற்று முன்