- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெள்ளிக்கிழமை முருகன் வழிபாடு

வெள்ளிக்கிழமை முருகன் வழிபாடு

- Advertisement -

முருகனுக்கு செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி, கிருத்திகை திதி இந்த நாட்கள்தான் உகந்த நாட்களாக சொல்லப்படுகிறது. அது என்ன வெள்ளிக்கிழமை முருகனுக்கு பிடித்த வழிபாடு. இதுவரை கேள்விப்படாத வழிபாடாக இருக்கிறதே. உங்களுக்கு முருகனை பிடிக்குமா. அப்போது முருகனுக்கு பிடித்த சில விஷயங்களையும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு. முருகனுக்கு பிடித்தமான இந்த விஷயத்தை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை மாலை இந்த விஷயங்களை எல்லாம் உங்கள் வீட்டு பூஜை அறையில் பின்பற்றினால், நீங்கள் முருகனுக்கு பிடித்த பக்தனாக மாறிவிடலாம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை முருகன் வழிபாடு

முருகனுக்கு என்ன ரொம்ப பிடிக்கும். முருகனுடைய அம்மா பராசக்தியை ரொம்ப ரொம்ப பிடிக்கும். பராசக்திக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை. சுக்கிர பகவானை வசியம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை. இந்த நாளில் முருகனை நினைத்து பின் சொல்லக்கூடிய வழிபாட்டை செய்து பாருங்கள். அம்பாளின் அருளும் கிடைக்கும். சுக்கிரனின் அருளும் கிடைக்கும். முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும். எப்படி ஒரே கல்லில் மூன்று மாங்காய்.

வாசம் நிறைந்த சுத்தமான குங்குமம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தண்ணீர் அல்லது பன்னீர் ஊற்றி கரைத்து இந்த குங்குமத்தை தொட்டு வீட்டில் திரிசூலம் மற்றும் வேல் வரைய வேண்டும். மனப்பலகையில் வரைந்தாலும் சரி, அல்லது அலமாரியின் மீது வரைந்தாலும் சரி, அல்லது தரையிலேயே வளர்ந்தாலும் சரி.

- Advertisement -

உங்கள் வீட்டு பூஜை அறையில் எது சௌகரியமாக இருக்குமோ, அந்த இடத்தில் திரிசூலத்தையும் வேலையும் குங்குமத்தால் வரைந்து விட்டு, பூஜையறையில் விளக்கு ஏற்றி பராசக்தியையும் முருகப்பெருமானையும் மனம் உருகி வேண்டுதல் வையுங்கள். “ஓம் சக்தி பராசக்தி ! வேல் வேல் வெற்றிவேல் !” இந்த 2 மந்திரத்தையும் சொல்லி வேண்டிய வரங்களை எல்லாம் இறைவனிடம் கேட்டுப் பாருங்கள். கேட்டதெல்லாம் உடனே கிடைக்கும்.

குறிப்பாக உங்களுடைய மன பயமானது நீங்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளும் போது எந்த தடுமாற்றமும் ஏற்படாது. வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். உயர் பதவிகள் கிடைக்கும். வாழ்க்கையில் சுகபோகத்தை அனுபவிப்பதற்கு உண்டான அத்தனை சந்தர்ப்பங்களும் உங்களை வந்து சேரும். அத்தனை சக்தி வாய்ந்த வழிபாடு இது. மிக மிக சுலபமான எளிய வழிபாடு. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை என்றால் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வீர்கள்.

இதையும் படிக்கலாமே: சியாமளா நவராத்திரி மந்திரம்.

ஒரு வாரம் மேல் சொன்ன வழிபாட்டையும் செய்து பாருங்கள். வாழ்வில் வரும் மாற்றங்களை கண்டு வியப்படையும் அளவுக்கு, நன்மைகள் வந்து குவியும் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த எளிமையான வழிபாடு அனைத்து முருகர் பக்தர்களுக்கும் சமர்ப்பணம். அனைத்து பராசக்தி பக்தர்களுக்கும் சமர்ப்பணம் என்ற இந்த தகவல் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்