வீட்டிலேயே தித்திப்பான பாதுஷா செய்யும் எளிய முறை

baathusha

பாதுஷா என்பது ஒரு இனிப்பு வகையாகும். இதனை சுலபமாக வீட்டிலே செய்யலாம். அனைத்து விசேஷங்களிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு இனிப்பு வகை இதுவாகும். பொதுவாக அனைத்து பண்டிகை நாட்களிலும் இதனை நாம் வீட்டில் செய்து உறவினருக்கு குடுப்பது வழக்கம். இதனை எவ்வாறு வீட்டில் எளிமையாக செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

bathusa_1

பாதுஷா செய்ய தேவையான பொருட்கள்:

மைதாமாவு – 200 கிராம்
ஆப்ப சோடா – 1 டீஸ்பூன்
வெண்ணைய் – 10 கிராம்
சக்கரை – 3/4 கப்
ஏலக்காய்த்தூள் – 1/4 ஸ்பூன்

பாதுஷா செய்முறை:

ஒரு கின்னத்தில் மைதாமாவு, ஆப்ப சோடா மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சரியான பதத்தில் பிசைந்து அதனை 10 நிமிடங்கள் வரை உலர வைக்கவும்.

bathusa_2

- Advertisement -

பிறகு, ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி சக்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து சக்கரை பாகினை தயார் செய்து கொள்ளுங்கள். சக்கரை பாகு தயாரானதும் உலரவைத்த பாதுஷா மாவினை மீண்டும் கடாயில் போட்டு பாதுஷா மூழ்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி அதனை மிதமான சூட்டில் நன்றாக வேகவிடவும்.

bathusa_4

பாதுஷா வெந்தவுடன் நாம் ஏற்கனவே தயார் செய்துள்ள சக்கரை பாகு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்தால் சுவையான பாதுஷா தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 20 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
பிஸிபேளாபாத் செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Badusha recipe in Tamil. It is also called as Badusha seimurai or Badusha seivathu eppadi in Tamil or Badusha preparation in Tamil.