வீட்டிலேயே சுவையான கர்நாடக பிஸிபேளாபாத் செய்யும் முறை

bisibelabath
- Advertisement -

பிஸிபேளாபாத் என்பது வடமாநிலங்களில் அதிகமாக உண்ணப்படும் ஒரு உணவு வகையாகவும், குழந்தைகளுக்கு பிடித்த மற்றும் ஆரோக்கியமான உணவாக உள்ளது. நம்மூரில் புளிசாதம், சாம்பார் சாதம் செய்வது போன்று இந்த பிஸிபேளாபாத் உணவு கர்நாடக மாநிலத்தில் இது மிகவும் பிரசித்தம். இப்போது இந்த பதிவில் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

bisi_2

பிஸிபேளாபாத் செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

சாப்பாடு அரிசி – 3/4 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
கடலை பருப்பு – 1டேபிள் ஸ்பூன்
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1டீஸ்பூன்
சோம்பு – 1டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
துருவிய தேங்காய் – சிறிதளவு
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
சின்னவெங்காயம் – 12
கேரட் – சிறிதளவு
பீன்ஸ்- சிறிதளவு
கத்தரிக்காய் – சிறிதளவு
முருங்கைக்காய் – சிறிதளவு
வாழைக்காய் – சிறிதளவு
உருளைக்கிழங்கு – சிறிதளவு
பச்சை பட்டாணி – தேவையான அளவு
தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு
புளித்தண்ணி – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு

பிஸிபேளாபாத் செய்முறை:

முதலில் அரிசி மற்றும் துவரம்பருப்பு சேர்த்து ஒரு குக்கரில் வைத்துதேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரை விடவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, மல்லி , மிளகு, உளுத்தம்பருப்பு, சோம்பு , சீரகம், காய்ந்தமிளகாய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்கவும்.

- Advertisement -

bisi_3

பிறகு வறுத்த இந்த பொருட்களை ஒரு மிக்சியில் போட்டு அரைத்து மசாலா தயார் செய்து வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் மஞ்சள்தூள், பச்சைமிளகாய் மற்றும் சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

bisi_4

பிறகு நறுக்கிய அணைத்து காய்கறிகளையும் அதில் போட்டு தேவையான அளவு உப்பு மற்றும் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பிறகு அதில் குக்கரில் வைத்த சாப்பாடு சேர்த்து நன்றாக கிளறி அதனுடன் சிறிதளவு புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும் . பிஸிபேளாபாத் நன்றாக வெந்த நிலையில் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பிஸிபேளாபாத் தாயார்.

- Advertisement -

சமைக்க ஆகும் நேரம் – 45 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
சுவையான முறுக்கு செய்வது எப்படி

இது போன்று பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Bisibelabath recipe in Tamil. It is also called as Bisibelabath seimurai or Bisibelabath seivathu eppadi in Tamil or Bisibelabath preparation in Tamil.

- Advertisement -