பைரவர் தீப பரிகாரம்

Bairavar Deepam for Pariharam in Tamil
- Advertisement -

மிகவும் ஆற்றல் வாய்ந்த தெய்வங்களில் ஒருவராக இருப்பவர் பைரவ மூர்த்தி. பைரவர் வழிபாடு என்பது தற்போது அனைவராலும் பரவலாக பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் பைரவரின் அருளை பெற உதவும் பைரவ தீப பரிகாரம் (Bairavar Deepam for Pariharam in Tamil) குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

பைரவர் தீபம் பரிகார முறை

வாழ்நாள் முழுவதும் பொருளாதார கஷ்ட நிலையை அனுபவிப்பவர்களும், எவ்வளவு வருமானம் ஈட்டினாலும் அடிக்கடி வீண் பண விரயங்களால் அவதிப்படுபவர்களும், கீழ்க்கண்ட சொர்ணாகர்ஷண பைரவர் தீப பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -

ஒரு நல்ல நாளில் புதிய சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வாங்கி வந்து வீட்டின் பூஜை அறையில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பார்க்கும் வகையில் அந்த படத்தை வைக்க வேண்டும். எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற வளர்பிறை அஷ்டமி தினத்தன்று அந்த சொர்ணாகர்ஷண பைரவர் படத்திற்கு, மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து, செவ்வரளி அல்லது பொன்னரளி மலர்களை சமர்ப்பித்து, செவ்வாழைப் பழங்களை நைவேத்தியம் வைத்து படத்திற்கு முன்பாக சிறிய அளவிலான ஒரு செம்பு அல்லது பித்தளை விளக்கில் பசு நெய் ஊற்றி, மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்றி, அந்த தீபத்தில் சில டைமண்ட் கற்கண்டுகளை போட்டுக்கொள்ள வேண்டும்.

பிறகு உங்கள் பூஜை அறையில் அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகத்தை துதிக்க வேண்டும். பிறகு சொர்ணாகர்ஷண பைரவர் படத்திற்கு தீப, தூப ஆராதனைகளை காட்டி முடித்த பிறகு, நைவேத்தியம் வைத்த வாழைப்பழங்களை வீட்டில் உள்ளவர்கள் பிரசாதமாக சாப்பிட வேண்டும். மேற்சொன்ன முறையில் சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களின் வாழ்வில் சீரான பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும்.

- Advertisement -

பைரவர் சனி பகவானுக்கு குரு ஆகிறார். எனவே பைரவரை வழிபடுபவர்களுக்கு சனி கிரகத்தால் ஏற்படுகின்ற பாதிப்புகளின் தீவிரத் தன்மை குறையும்.

எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற ஒரு சனிக்கிழமை தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, உணவு ஏதும் உண்ணாமல், உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற சிவன் கோயிலில் இருக்கின்ற பைரவ மூர்த்தி சன்னதிக்கு சென்று, பைரவருக்கு புதிதான மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு நவகிரக சந்நிதிக்கு வந்து சனி பகவானுக்கு ஒரு மண் அகல் விளக்கில் நீல நிற திரி இட்டு, சிறிதளவு கருப்பு எள் அந்த விளக்கில் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி ஒன்பது முறை நவகிரகங்களை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் சனி கிரகத்தால் ஏற்படுகின்ற சனி கிரக தோஷத்தின் தீவிர தன்மை குறைந்து பாதகமான பலன்கள் ஏற்படாமல் தடுக்கும்.

பைரவர் வழிபாடுபாட்டிற்குரிய மிக சிறப்பான தினமாக ஒவ்வொரு மாதமும் வருகின்ற தேய்பிறை அஷ்டமி தினம் வருகிறது. இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தில் உங்கள் ஊரில் இருக்கின்ற பைரவர் கோயில் அல்லது பைரவர் சன்னதிக்கு சென்று, பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய், நல்லெண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களை எடுத்து ஒவ்வொரு அகல் விளக்குகளிலும் மேற்சொன்ன ஒவ்வொரு வகையான எண்ணெயை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: விரைவில் திருமண யோகத்தை கொடுக்கும் கல்யாண பரிகாரம்

பகிரவருக்கு பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் வாழ்வில் ஏற்படுகின்ற எத்தகைய கஷ்டங்களும் நீங்கும். இழந்த சொத்துக்களை திரும்ப பெறலாம். நேரடி, மறைமுக எதிரிகள் அழிவர். நாம் விரும்பும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறும்.

- Advertisement -