பைரவருக்கு 9 வாரங்கள் இந்த முறைப்படி, இந்த தீபத்தை, இந்த நேரத்தில், இப்படி ஏற்றி வந்தால், கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினையும் காணாமல் போகும்.

bairavar

கடன் பிரச்சனையிலிருந்து விடுபட பலவகையான பரிகாரங்களை, பல முறைகளில் நாம் பார்த்திருந்தாலும் பைரவருக்கு உகந்த பரிகாரமான, இந்த பரிகாரத்தை, இந்த முறைப்படி 9 வாரங்கள் தொடர்ந்து ஏற்றி பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சினைக்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம். இந்த பைரவர் வழிபாட்டை, அந்த காலத்தில் அரசர்கள் தான் செய்து வந்தார்கள் என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டும். ராஜபோக வாழ்க்கையில் சரிவு ஏற்படாமல் இருக்க, ராஜ வாழ்க்கை தக்கவைத்துக் கொள்ள பைரவர் வழிபாடு, அன்று அவர்களுக்கு கை கொடுத்தது.

kaala bairavar

காலப்போக்கில், இப்போது இந்த பைரவர் வழிபாட்டை எல்லாம், சாதாரணமாக சராசரி வாழ்க்கையை வாழும் நாமும், செய்து வரும் பட்சத்தில், நமக்கு ராஜபோக வாழ்க்கை கிடைக்கவில்லை என்றாலும், கடன் இல்லாத வாழ்க்கை கிடைத்து, கஷ்டங்கள் தீர்ந்து நிம்மதியான வாழ்க்கையை பெற முடியும். சரி, பரிகாரத்தை பார்த்துவிடுவோம். செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணிக்கு கால பைரவர் சன்னதி இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

சிறிய காட்டன் சிகப்பு துணியையும், 27 மிளகையும் நீங்கள் வீட்டிலிருந்து கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள். கோவிலில் இந்த இரண்டு பொருட்களையும் கொண்டுபோய், கோவிலில் அமர்ந்து, 27 நட்சத்திரங்களின் பெயரை உச்சரித்து ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிளகை அந்த சிவப்புத் துணியில் வைத்து, சிறியதாக முடிச்சுப்போட்டு இரண்டு புதிய மண் அகல் விளக்கில் இந்த முடிச்சுகளை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவது தான் சரியான முறை.

milagu-deepam

இந்த சிவப்பு நிற துணியில் மிளகு தீபத்தை நாம் இதற்கு முன்பு ஏற்றி இருப்போம். ஆனால் 27 என்ற எண்ணிக்கையில் வைத்து, 27 என்ற நட்சத்திர பெயர்களை சில பேர் சொல்லி இருக்க மாட்டார்கள். நட்சத்திரத்தின் பெயர்களை உச்சரித்து மிளகு தீபம் ஏற்றுவது நமக்கு உடனடி பலனைத் தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

கோவிலில் இந்த தீபம் மேற்கு திசையை பார்த்தவாறு எரிய வேண்டும். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு சூரியன் உதயமாகும் போது இந்த தீபத்தை ஏற்றுவது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். யாரும் சந்திராஷ்டம நாளிலும் செவ்வாய்க்கிழமை தினத்திலும் கடன் வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளாதீர்கள். திருப்பி கொடுப்பதில் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

27-natchathram

தொடர்ந்து செவ்வாய்கிழமைகளில் 9 வாரங்கள் இந்த தீபத்தை ஏற்றி வாருங்கள். இதோடு சேர்த்து கடனை திருப்பிக் கொடுக்கும் முயற்சியை கைவிடாமல் மேற்கொள்ள வேண்டும். உங்களால் முடிந்த பிரசாதத்தை, இரண்டு முந்திரிப்பருப்பை மட்டுமாவது அந்த கால பைரவருக்கு தீபம் ஏற்றும்போது நிவேதனமாக வைக்க வேண்டும். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்த பலர், கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதையும் படிக்கலாமே
நீங்கள் பயன்படுத்தும் துணிகளை இப்படி செய்தால் பெரும் தரித்திரம் வந்து சேரும். தவறியும் இந்த தவறை வீட்டில் செய்யாதீர்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.