நீங்கள் பயன்படுத்தும் துணிகளை இப்படி செய்தால் பெரும் தரித்திரம் வந்து சேரும். தவறியும் இந்த தவறை வீட்டில் செய்யாதீர்கள்!

clothes-lakshmi
- Advertisement -

நாம் அன்றாடம் உடுத்தும் உடைகள் நம்முடைய கர்மாவை ஈர்த்து வைத்துக் கொள்ளும் என்று கூறுவார்கள். அதனால் தான் ஒருவர் பயன்படுத்திய துணியை இன்னொருவர் பயன்படுத்துவது அவ்வளவு நல்லதல்ல என்று சொல்வதும் உண்டு. ஒரு சில வீடுகளில் துணிமணிகளை கண்ணா பின்னாவென்று அங்காங்கே போட்டு வைத்திருப்பார்கள். நாம் உடுத்தும் துணிமணிகளில் செய்யும் இந்த தவறு வீட்டிற்கு பெரும் தரித்திரத்தை சேர்க்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதைப் பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவின் மூலம் பார்ப்போம்.

நீங்கள் ஒரு நாள் குளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அது பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு நாள் உடுத்திய துணியை மறுநாளும் போட்டுக் கொண்டிருப்பது வீட்டிற்கு தரித்திரத்தை சேர்க்கும். எந்த சூழ்நிலையிலும் முந்தைய நாள் உடுத்திய உடையை மறுநாள் துவைக்காமல் போடவே கூடாது.

- Advertisement -

காய வைத்த துணியை உடனே மடித்து வைத்து விட வேண்டும். சிலர் இரண்டு நாள் ஆனாலும் அதனை மடித்து வைக்காமல் அப்படியே கட்டில் மேல் போட்டு வைப்பது, நாற்காலி மேல் போட்டு வைப்பது என்று குவித்து வைத்திருப்பார்கள். இது போல் நீங்கள் செய்தால் நிச்சயம் அந்த வீட்டில் பணவரவு குறையும். பணம் வருவதில் ஏதாவது ஒரு தடை வந்து கொண்டே இருக்கும். இதெல்லாம் மகாலட்சுமிக்கு பிடிக்காத செயல்கள். இந்த செயல்களை செய்தால் வீட்டில் மகாலட்சுமி எப்படி தங்குவாள்?

dress-on-bed

காய்ந்த துணிமணிகளை மடித்து வைக்காமல் இப்படி ஒரு இடத்தில் குவித்து மொத்தமாக வைத்திருந்தால் அது தரித்திரத்தை சேர்க்கும். அதிலேயே கால் வைத்து படுப்பது, குதித்து விளையாடுவது போன்ற செயல்களை செய்யும் பொழுது அங்கு தரித்திர நிலை உண்டாகிறது. அதனால் தான் கையோடு அதனை மடித்து, வைக்க வேண்டிய இடத்தில் அழகாக அடுக்கி வைத்து விட வேண்டும். துணிமணிகளை மடித்து அழகாக பீரோவில் அல்லது செல்ஃப்களில் வைக்க வேண்டும்.

- Advertisement -

அப்படி அல்லாமல் சிலர் என்ன செய்வார்கள் என்றால்! மடிக்க கூட மாட்டார்கள், உடைகளை அப்படியே போட்டு அழுத்தி விடுவார்கள். துணிமணிகளை மடிக்காமல் அப்படியே கொண்டு போய் பீரோவில் அழுத்துவது, செல்ஃப்களில் அழுத்துவது என்று செய்தால் அந்த வீட்டில் தொடர் பிரச்சனைகள் நிச்சயமாக நிகழும். ஒரு பிரச்சனை போனால், இன்னொரு பிரச்சனை ரெடியாக காத்திருக்கும். நீங்கள் இந்த தவறை மாற்றி பாருங்கள், உங்களுடைய பிரச்சனைகளும் குறைய வாய்ப்பிருக்கிறது.

dress-on-self

நீங்கள் சீராக நேர்த்தியாக தான் மடிக்க வேண்டும் என்கிற அவசியம் ஒன்றுமில்லை. எப்படி வேண்டுமானாலும் மடிக்கலாம் ஆனால் மடிக்க வேண்டும் என்பது நியதி. யாராவது நம் வீட்டிற்குள் வரும் பொழுது இப்படி துணிமணிகளை மொத்தமாக குவித்து வைத்திருப்பதை பார்த்தால் அங்கு அவர்கள் முகம் சுழிக்கும் படியாக இருந்து விடக் கூடாது. என்ன இப்படி போட்டு வைத்திருக்கிறார்கள்? என்று அவர்கள் கூறி விட்டால் போதும். அந்த வீட்டில் தரித்திரம் வந்துவிடும்.

- Advertisement -

dress-in bero

ஒரு துணியை எடுக்க, பத்து துணிமணிகளை கலைத்து போடுவது கண்டிப்பாக செய்யக்கூடாத செயல் ஆகும். இப்படி செய்வதால் தான் மீண்டும் மீண்டும் மடித்து வைக்க முடியாமல் மொத்தமாக வைத்து விட வேண்டியது வருகிறது. பீரோ, செல்ஃப் முழுவதுமாக துணிகளை அழுத்தி வைத்திருப்பது வறுமையை உண்டாக்கும். மற்றவர்களின் பார்வை படும் படியாக செல்ஃப்களில் இப்படி மடிக்காமல் அமுத்தி வைத்திருந்தாலும் அந்த வீட்டில் நிம்மதியே இருக்காது.

burning-clothes

அது போல் கிழிந்த துணி மணிகளை வீட்டில் வைத்திருக்க கூடாது. உங்களுக்கு தேவையில்லை என்று தோன்றுகிற உடையை வெளியில் கொண்டு போய் எரித்து விட வேண்டும். அது சில நாட்களுக்குப் பிறகு ஒரு மாதிரியான வாசனையை உண்டாக்கிவிடும். அந்த வாசம் வீட்டில் இருந்தால் நிச்சயம் அந்த வீட்டில் தரித்திரம் நிலைக்கும். எனவே வேண்டாத துணிமணிகளை அவ்வப்போது அப்புறப்படுத்தி விடுங்கள் அது தான் வீட்டில் சுபீட்சத்தை நிலைத்து நிற்கச் செய்யும்.

இதையும் படிக்கலாமே
நாளை போகி அன்று, இந்த வழிபாட்டை செய்ய மறக்காதீர்கள். குலதெய்வ குற்றமாகிவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -