விஷமாய் மாறி நிற்கும் பைரவர் சிலை – பிரசாதத்தில் கூட விஷமேறும் மாயம்

bairavar2

போகர் என்னும் சித்தரால் செய்யப்பட்ட பழனி முருகன் சிலை நவபாஷாணங்களால் ஆனது என்பது நாம் அறிந்ததே. ஆனால் அந்த சிலையை செய்வதற்கு முன்பாகவே கொடிய விஷமுள்ள பொருட்களை கொண்டு போகர் மற்றொரு சிலையை செய்திருக்கிறார். அந்த சிலை இன்றுவரை விஷத்தன்மையோடே இருக்கிறது. வாருங்கள் இது குறித்து பார்ப்போம்.

temple

 

சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது பெரிச்சிக் கோயில் சுகந்தவனேஸ்வரர் ஆலயம். இங்குள்ள பைரவர் சிலை தான் இன்றுவரை விஷத்தன்மையோடே காணப்படுகிறது.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக இந்த பகுதிக்கு வந்த போகர் தவம் செய்ய நினைத்தபோது தான் செய்யும் தவத்திற்கு எந்த ஒரு இடையூறும் வந்துவிட கூடாது என்பதற்காக நவபாஷாணங்களை கொண்டு ஒரு பைரவர் சிலையை வடித்து அதை வழிபட்டார் என்று கூறப்படுகிறது.

bairavar

- Advertisement -

 

சிலகாலங்களுக்கு பிறகு அந்த இடத்தில் இருந்து புறப்பட்ட போகர் தான் வடித்த சிலையில் இருந்த விஷத்தன்மையை முறிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அந்த சிலையில் இன்று வரை விஷம் நீடிக்கிறது.

bogar-sidhar

 

இங்குள்ள பைரவருக்கு அபிஷேகம் செய்யும் நீரிலும் சார்த்தும் வடமாலையிலும் கூட விஷமேருகிறது. இதனால் நீரும் வடமாலையும் நீல நிறமாக மாறுகிறது. ஆகையால் தீர்த்தமோ வடமாலையோ இங்க பிரசாதமாக தருவது கிடையாது. பைரவருக்கு சாத்தப்படும் வடமாலையை சந்நிதிக்கு மேலே போட்டு விடுகிறார்கள். அந்த வடமாலையை எந்த ஒரு உயிரினமும் இதுவரை உண்டது கிடையாது.

இதையும் காணலாமே:
சிவனுக்கு நடக்கும் வினோதமான திருநீறு அபிஷேகம் – வீடியோ

இந்த பைரவர் சிலையை போகர் தான் செய்தார் என்பதற்கு வலு சேர்க்கும் வகையில், பைரவருக்கு பின்புறம் தீபாராதனை காட்டும் சமயத்தில், முன்புறத்தில் பழனி ஆண்டவரின் உருவத்தில் காட்சியளிக்கார் பைரவர்.