பைரவர் துதி

swarna-bairavar-1

பொறாமை என்பது மனிதர்களுக்கே உரிய ஒரு குணமாக இருக்கிறது. திருக்குறளில் வள்ளுவரும் இந்த பொறாமை குணத்தின் கேடுகளை விளக்கியிருக்கிறார். இன்று ஒரு நபர் எத்தகைய செல்வம் மற்றும் இன்பங்களை பெற்றாலும், அது கிடைக்க பெறாதவர்கள் அவர்கள் மீது பொறாமை கொள்கின்றனர். இது கண்திருஷ்டியாக மாறுகிறது. இதனால் நமது உடல் நலம் பாதிக்கப்படுகிறது, மனக்கவலை அதிகரிக்கிறது. இது போன்ற பாதிப்புகள் நமக்கு ஏற்படாமல் இருக்கவும், நவக்கிரகங்களால் நன்மை அடையவும் கூறவேண்டிய பைரவரின் துதி இதோ.
bairavar

பைரவர் துதி

கறையணி கண்டதத் தம்மான் கருத்தினிலே தோணினானை
மறையணி பூணுவானை மழுவொரு சூலத் தானை
குறையணி அகந்தையாளர் குணத்தினை அடக்குவானை

சிறையறுவடுகன் தாளைச் சிந்தையில் வாழ்த்துவோமே!
திருவுறைச் சொல்லு மாகித் தெறிமனம் பொருளு மாகி
வருபொருட் செல்வம் ஞானம் வளர்புகழ் தானேயாகிப்

பெருவினை அகல நாளும் பிதற்றுவார் உள்ளே தோன்றும்
திருவினை வயிரவ தேவை திருந்தடி வாழ்த்துவோமே!
புலரிதன் கதிர்களாகிப் புவிக்கெலாம் ஒளியானானை

மலரினை மலர்த்துவானை உலகெலாம் ஆகி வேறாய்
உயிருடன் ஒன்றுவானை நிலமதில் வயிரவன் தாள்
நினைந்து நாம் வாழ்த்துவோமே!

காக்கும் கடவுளான பைரவரின் புகழ் பாடி இயற்றப்பட்ட துதி இது. அமாவாசை அன்று காலை அல்லது மாலை வேளையிலும், வாரத்தின் எந்த கிழமையிலும் வரும் ராகு காலத்தின் போது பைரவரின் சந்நிதியில் பஞ்சதீப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, இத்துதியை 9 முறை அல்லது 27 முறை கூறி வழிபடுவதால் எப்படிப்பட்ட கண்திருஷ்டிகளும் நீங்கும். நமக்கு ஏற்படும் வீணான மனக்கவலைகள் நீங்கும். துஷ்ட சக்திகள் நம்மையும், நம்மை சார்ந்தவர்கள் மற்றும் நமது இல்லத்தை அணுகாது. அது பைரவர் நவகிரகங்களை தன்னகத்தே கொண்டவர் என்பதால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களின் தாக்கம் குறைந்து வாழ்வில் நல்லதொரு முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

kaala bairavar

நாம் விழிப்புணர்வோடு இருக்கும் போது நம்மை எந்த ஒரு தீமையும் அணுக முடியாது. ஆனால் மனிதர்களாகிய நாம் எல்லோருமே எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்போம் என்று கூறுவதிற்கில்லை. நாம் வணங்காவிட்டாலும் நம்மை காப்பவர் இறைவன் ஆவார். நமது சைவ மத புராணங்களின் படி சிவனின் ஒரு வடிவமாக தோன்றிவர் பைரவ மூர்த்தி. மனிதர்களுக்கு நண்பனாக இருக்கும் நாயை தனது வாகனமாக கொண்டிருக்கிறார் இவர். பைரவரை துதித்திப்பதால் நம்மை எந்த வகையான தீவினைகளும் அண்டாது.

இதையும் படிக்கலாமே:
கருமாரியம்மன் 108 போற்றி

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Bairavar thuthi in Tamil or Bhairavar thuthi in Tamil. This is also called Bairavar slogam in Tamil or Bairavar mantra in Tamil.