பைரவரை இப்படியும் வழிபடலாமா? பைரவர் வழிபாடு பற்றிய தெரியாத தகவல்கள்! செல்வம் கொழிக்க பைரவரை எப்படி வணங்கலாம்?

swarna-bairava-gold

சிவ சொரூபமாக விளங்கும் பைரவர் 64 வடிவங்களில் விளங்குகிறார். எம்பெருமான் ஈசனுக்கும் 64 வடிவங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பைரவ அம்சம் ஆகும். கலியுகத்தின் காக்கும் கடவுளாக விளங்குபவர் காலபைரவர் ஆவார். கால பைரவரை வணங்கினால் மன பயம் நீங்கி தைரியம் பிறக்கும். எந்த ஒரு துஷ்ட சக்திகளும் நம்மை நெருங்காது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பைரவரை எப்படி வழிபடலாம்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Moondram pirai

பைரவருக்கு உகந்த கிழமை ‘தேய்பிறை அஷ்டமி’ ஆகும். தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில் பைரவரை வழிபட எத்தகைய துன்பங்களும் எளிதாக தீரும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. நாயை வாகனமாகக் கொண்ட பைரவர் பக்தர்களுடைய வேண்டுதலுக்கு உடனே ஓடோடி வந்து அருள் புரிவார். நாயை விட நன்றியுள்ள பிராணி இவ்வுலகில் இல்லை. நாய் மனிதனுக்கு என்றென்றும் சிறந்த காவலனாக இருந்து வருகிறது. அதே போல பைரவரை வணங்குபவர்களுக்கு அவர் காவல் தெய்வமாக இருந்து பக்தர்களை காப்பாற்றுவார் என்பது ஐதீகம்.

திருவாவடுதுறை ஆதீன நூலகத்தில் பைரவர் தொடர்பான நூல்கள், அவரை வழிபடும் முறைகள் நிறையவே குறிப்பிட்டுள்ளன. பைரவர் சன்னிதியில் எப்பொழுதும் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். பைரவர் வழிபாடு செய்யும் பொழுது கட்டாயம் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகச் சிறந்த பலன்களை கொடுக்கும். எல்லா கடவுளுக்கும் ஒரே மாதிரியான எண்ணையை பயன்படுத்தி தீபம் ஏற்றக்கூடாது. அவரவர்களுக்கு உகந்த எண்ணெய்யை ஏற்றும் பொழுது அதற்குரிய பலன்களும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

vadai-malai-hanuman

அனுமனுக்கு வடை மாலை சாற்றுவது போல பைரவருக்கு வடை மாலை சாற்றுவது வழக்கம். பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட்டு வந்தால் எந்த ஒரு துர்தேவதைகளும் உங்களை அண்டாது. திருஷ்டி தோஷங்கள் யாவும் விலகி ஓடிவிடும். உங்களுடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் தடைக்கற்களை தகர்த்து எரிய பைரவருக்கு அஷ்டமி திதிகளில் வடை மாலை சாற்றி வழிபடலாம். காசியில் காலபைரவர் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கின்றது. இக்கோவிலில் ஆதிசங்கரர் பைரவர் அஷ்டகம் பாடி மேலும் சிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. புகழ்பெற்ற இத்திருத்தலத்திற்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று வந்தால் தோஷங்கள் யாவும் விலகும், மேலும் அவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது.

சனீஸ்வரருக்கு குருவாக விளங்கும் காலபைரவர் சனி தோஷங்களையும் நீக்க வல்லவர். ஜாதகருக்கு சனியினால் ஏற்படும் பாதிப்புகள் விலக பைரவருக்கு கோவிலில் எள் தீபமேற்றி வழிபட்டு வரலாம். குருவின் அருள் பெற்றால் சீடரால் நம்மை என்ன செய்ய முடியும்? ஆகவே சனி பாதிப்புகள், சனி தோஷங்கள் இருப்பவர்கள் சனி பரிகாரமாக கால பைரவரை வணங்குவது சிறப்பான பலன்களை கொடுக்கும். சனி பகவான் மட்டுமல்ல! நவக்கிரகங்களுக்கும் அதிபதியாக இருக்கும் கால பைரவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் அத்தனையும் விலகும்.

lingam-vilva-archanai

சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வது போல பைரவருக்கும் வில்வ அர்ச்சனை செய்து அவருடைய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும். கடன் தொல்லை, பகைவர்கள் தொல்லை, வறுமை நீங்க, செல்வம் செழிக்க 64 பைரவர்களில் உங்களுக்கு தெரிந்த பைரவர்களை வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். கடன் தீர மிளகு தீபம் ஏற்றலாம். செவ்வரளி மலர்களை சாற்றி பைரவ அஷ்டகம் வாசித்தால் தீர பிணிகளும், தீராத துன்பங்களும் தொலையும். இப்படி அதீத சிறப்புகள் கொண்ட பைரவரை நாமும் வணங்கி பயன் பெறுவோம்.