சென்னையில் அரச மரத்தில் சுயம்புவாக தோன்றிய விநாயகர்! இவரை வணங்கினால் 6 வாரத்தில் நினைத்தது நினைத்தபடியே நடக்கும் தெரியுமா?

vinayagar-arasamaram
- Advertisement -

புராண காலத்திலிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்கள் பிரசித்தி பெற்று விளங்கினாலும், சென்னையிலேயே இருக்கும் பல கோவில்களும் அதன் அதிசயத்தை தருவதில் குறைந்து போய்விடவில்லை. இங்குள்ள பல கோவில்கள், புதிதாக முளைத்தவை அல்ல. அவைகளும் பல்வேறு அற்புதங்களை தன்னுள்ளே கொண்டு அமைதியாக எழுந்தருளி இருக்கிறது. அந்த வகையில் சென்னை வடபழனியில் இருக்கும் இந்த கோவில் வியப்பிற்குரிய வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. அப்படி அது என்ன கோவில்? அதில் இருக்கும் அதிசயங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

bala-vinayagar-vadapalani

சென்னை வடபழனியில் அமைந்துள்ள பால விநாயகர் திருக்கோவில் பலரும் அறிந்த கோவிலாக இருந்தாலும். சிலருக்கு இதைப்பற்றிய தகவல்கள் தெரியாமல் இருக்கலாம். இக்கோவிலின் அதிசயத்தை கேட்கும் பொழுதே மெய்சிலிர்க்கும் வண்ணம் இருக்கும். 1983 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சாதாரண விநாயகர், இன்று அரசமரத்தில் சுயம்பு மூர்த்தியாக, தன்னுடன் 21 வடிவங்களை சுயம்புவாக நிறுத்திக் கொண்டு பக்தர்களுக்கு அருள் புரியும் கலியுகக் கடவுளாக விளங்குகிறார்.

- Advertisement -

பொதுவாக கோவில்களில் இருக்கும் அரச மரத்தை பகல் பொழுதில் மட்டுமே வலம் வருவது வழக்கம். ஆனால் இங்கிருக்கும் ஸ்தல விருட்சமான அரசமரத்தை எப்பொழுதும் வலம் வந்து பக்தர்கள் வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இந்த அரசமரத்தில் 21 விநாயகர்களும், தென்முகக் கடவுள், லட்சுமி நாராயணன், துர்கை போன்ற தெய்வங்களும், சக்கர வியூக அமைப்பில் தேவியர்களுடன், முருகனும் வீற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

arasa-maram

பல்வேறு பிரார்த்தனைகளுடன் வேண்டுதல்கள் வைத்திருப்பவர்கள், இந்த அரச மரத்திற்கு வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்து நேர்த்திக் கடனை தினந்தோறும் செலுத்துகின்றனர். மேலும் இந்த அரசமரத்தை ஞாயிற்று கிழமையில், ராகு கால வேளையில், அதாவது மாலை நேரத்தில் நாலரை மணி முதல் ஆறு மணி வரையிலான ராகு காலத்தில், கையில் ஆறு எலுமிச்சை பழங்களை ஏந்திக் கொண்டு வலம் வருவதால் மனதில் நினைத்தது எல்லாம் அப்படியே நடக்கும் என்கிறது தலபுராணம்.

- Advertisement -

1983-இல் குடியரசு தினம் அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு தலவிருட்சமாக அப்போது இந்த அரச மரம் இருந்தது. 16 ஆண்டுகள் கடந்து, ஆலயத்தை விரிவாக நினைத்த பக்தர்கள், அந்த அரச மரத்தை அகற்ற முடிவெடுத்தார்கள். குறித்த நாளில் அதனை அகற்ற முடியாமல் பல்வேறு சோதனைகளை சந்தித்தார்கள். இறுதியில் மரத்தில் சுயம்புவாக தன்னைத் தானே வெளிப்படுத்திய விநாயகப் பெருமானை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்து நின்றார்கள். அப்போது தான் பக்தர்களுக்கு அந்த மரத்தில் தான் குடி இருப்பதை உணர்த்தினார் விநாயகப் பெருமான்.

arasa-maram1

இதனை மேலும் மெய்ப்பிக்கும் விதமாக ஒவ்வொரு விநாயகராக 16 வடிவங்கள் மரத்தை சுற்றிலும் தோன்றியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இன்று இந்த தளத்தில் மேலும் ஒவ்வொன்றாக அதிகரித்து 21 சுயம்பு மூர்த்தங்கள் தோன்றி நம்மை புல்லரிக்க வைக்கிறது. இதனைப் பார்ப்பதற்கு கட்டாயம் ஒரு முறையாவது அனைவரும் செல்ல வேண்டும். இந்த கணபதியை வேண்டியவர்களுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கும். நினைத்ததெல்லாம் அப்படியே நடக்கும் என்று பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது. நாமும் அவரை வணங்கி வழிபடுவோம்.

இதையும் படிக்கலாமே
இந்த ‘ரூபாய் நோட்டு’ மட்டும் உங்களிடம் இருந்தால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்! பணக்காரனாக முதல் தகுதி என்ன தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -