இந்த ‘ரூபாய் நோட்டு’ மட்டும் உங்களிடம் இருந்தால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்! பணக்காரனாக முதல் தகுதி என்ன தெரியுமா?

cash-temple

எவ்வளவு நம்மிடம் பணம் எவ்வளவு இருந்தாலும் அதனை செலவு செய்வதற்கு முதலில் தைரியம் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இதை செய்தால் செலவாகிவிடுமோ! அதை செய்தால் செலவாகிவிடும், என்று கணக்கு பார்த்து நீங்கள் செலவு செய்பவர்களாக இருந்தால், நிச்சயமாக உங்களிடம் பணம் சேரவே சேராது. நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்? என்பது முக்கியமே அல்ல. அதை எப்படி செலவு செய்கிறீர்கள்? என்பதை பொறுத்து தான் பணம் மேலும் மேலும் உங்களிடம் வரும் என்பது தான் பணத்திற்கு இருக்கும் மிகப்பெரிய சூட்சமம்.

money

இதனை பண ஈர்ப்பு விதி என்று கூறுவார்கள். இந்த விதியை தெரிந்தவர்கள் உலகில் பணக்காரர்களாக தான் இருப்பார்கள். அது போல் புத பகவானுக்கு உரிய பச்சை நிறத்தை பணத்துடன் இது போல் வைத்திருந்தால் போதும், பண மழை உங்களுக்கு தாராளமாக கொட்டும் என்பதும் இதிலிருக்கும் சூட்சமம் ஆகும். சரி அதைப் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படித்து வாருங்கள்.

பணத்திற்கு இருக்கும் மதிப்பு வேறு எதற்காவது இருக்கிறதா? என்பதை நீங்களே சற்று சிந்தியுங்கள். பணம், பணமாக மட்டும் செயல்படுவதில்லை. பணம் தான் அனைத்துமாக இந்த பிரபஞ்சத்தில் மறைமுக பொருளாக செயல்பட்டு வருகிறது. அதனால் தான் இதற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரம், உத்தியோகம் என்று பணத்தை ஈட்டி வருமானத்தை அதிகரிக்க வேண்டிய இடத்தில் புத பகவான் இருக்கிறார். அவருக்கு உகந்த நிறமாக பச்சை நிறம் இருப்பதால் பச்சை நிறத்தை உங்களுடன் எப்பொழுதும் ஏதாவது ஒரு ரூபத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

green-kumkum1

பச்சை நிற திலகம் தினமும் அணிந்து கொண்டு வருமானம் செய்ய சென்றால் பணம் அதிகமாக உங்களிடம் வரும் என்ற ஒரு தாந்த்ரீகம் இருக்கிறது. நாம் முன்னர் அதிகமாக பயன்படுத்திய மற்றும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஐந்து ரூபாய் நோட்டு, பச்சை நிறத்தில் இருக்கும். ரூபாய் நோட்டு என்பது மகாலட்சுமியை குறிக்கிறது. அது பச்சை நிறத்தில் இருப்பதால் புதபகவானையும் சேர்த்து குறிக்கிறது. ஆக இந்த பச்சை நிறத்தில் இருக்கும் ஐந்து ரூபாய் நோட்டை உங்களிடம் வைத்துக் கொண்டால் நிச்சயமாக பணமழை பொழியும் என்பது சூட்சமம்.

- Advertisement -

நீங்கள் பணம் வைக்கும் கல்லாப்பெட்டி, மணி பர்ஸ், வீட்டிலிருக்கும் பணப்பெட்டி, தொழில் ஸ்தாபனத்தில் இருக்கும் பணம் வைக்கும் இடம் என்று எங்கெல்லாம் பணம் வைக்கிறீர்களோ அங்கெல்லாம் இந்த ஐந்து ரூபாய் பச்சை நோட்டை வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக பணம் அதிகம் சேரும். பணம் ஈர்ப்பதற்கு பயன்படக்கூடிய லவங்கப்பட்டை, கிராம்பு, பச்சை கற்பூரம் இந்த மூன்றையும் ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து இந்த ஐந்து ரூபாய் நோட்டு உடன் சேர்த்து வையுங்கள். இன்னும் அதிக பலன் கிடைக்கும்.

5-rupee-note

நாம் பணக்காரனாக முதல் தகுதியாக இருப்பது, பணத்தை செலவு செய்வது தான். நல்ல விஷயங்களுக்காக தாராளமாக பணத்தை சற்றும் சிந்திக்காமல் செலவு செய்ய வேண்டும். யோசித்துக் கொண்டே இருந்தால் ஒரு விஷயத்தையும் நம்மால் செய்து சாதிக்க முடியாது. நம்மிடம் பணம் இல்லையே, இருக்கின்ற பணத்தையும் செலவு செய்து விட்டால் என்ன செய்வது? என்று யோசித்து யோசித்து வரும் வாய்ப்புகளை எல்லாம் விட்டு விட்டால் நீங்கள் பணக்காரன் ஆக முடியவே முடியாது.

money

கோவிலுக்கு சென்றால் இறைவனுக்கு செய்வதில் கஞ்சத்தனம் காட்டவே கூடாது. இறைவனுக்கு தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யுங்கள். உங்களிடம் 100 ரூபாய் இருந்தால் அதில் பத்து ரூபாய்க்கு கற்பூரம் வாங்கி கொளுத்தும் அதை விட, நூறு ரூபாய்க்கும் மனமார அர்ச்சனை செய்து பாருங்கள். பணம் உங்களிடம் தானாகவே வந்து சேரும் என்கிற சூட்சமத்தை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
மாங்கல்ய விருத்தி ஏற்பட வீட்டில் அன்றாட பூஜையை முடித்ததும் இப்படி செய்து பாருங்கள்! கணவருக்கு தீர்க்காயுள் கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.