கிரிக்கெட் : பண்ட் போட்டியில் விளையாடினால் நான் காசு கொடுத்து கூட கிரிக்கெட் பார்க்க தயார் – கில்கிறிஸ்ட்

gilchrist

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் அணி 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணித்தரப்பில் புஜாரா 193 ரன்களை குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக இளம் வீரர் பண்ட் 159* ரன்களை குவித்து களத்தில் இருந்தார்.

pujara

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சஹா மற்றும் கார்த்திக் ஆகியோரின் காயம் காரணமாக இளம் வீரரான பண்ட்-க்கு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு டெஸ்ட் இதனை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டார் பண்ட். அவர் அடித்த முதல் ரன்னே சிக்ஸர் தான். அதன் பிறகு இங்கிலாந்தில் கடைசி டெஸ்டில் சதமடித்தார்.

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரிலும் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். நான்காவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இவர் அடித்த சதத்தை கண்ட முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் கூறியதாவது :

pant

உலகின் எந்த மூலையில் ரிஷப் பண்ட் விளையாடினாலும் நான் அங்கு சென்று காசு கொடுத்து கூட அவரது ஆட்டத்தினை பார்ப்பேன் என்று ஆஸ்திரேலிய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பண்ட் பேட்டிங் திறன் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அவரின் இந்த ஆட்டம் நிச்சயம் எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் அச்சமடையவைக்கும் என்றும் கூறினார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் கேப்டன் பாண்டிங் பண்ட் குறித்து புகழ்ந்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

கிரிக்கெட் : டைவ் அடித்து கேட்ச் பிடித்த ராகுல் அவுட் இல்லை என்று அவரே கூறிய நேர்மையான செயல் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்