வாழைப்பழம் இருக்கா உங்க வீட்ல சட்டுனு இந்த கேக் செஞ்சு பாருங்க! ஓவன் கூட வேணாங்க!

cake4
- Advertisement -

குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடும் ஒரு ஸ்வீட் ரெசிபி பற்றிதான் தெரிந்து கொள்ள போகின்றோம். வாழைப்பழம் மற்றும் முட்டை வைத்து செய்யப்போகும் இந்த ரெசிபி குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிகிறது. முட்டையில் வைட்டமின் டி இருப்பதால் உடலில் எலும்பு மற்றும் பற்கள் உறுதியாவதற்கு துணை புரிகிறது. வாழைப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ, பி, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது. குழந்தைகள் எடை குறைவாக இருந்தாலும் கூட இந்த உணவினை சமைத்து கொடுக்க நல்ல மாற்றம் கிடைக்கும். வாருங்கள் இந்த ஆரோக்கியம் மிக்க ரெசிபியை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

banana1

தேவையான பொருள்கள்:
பழுத்த வாழைப்பழங்கள் – 4, முட்டை – 2, பால் – ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், வெனிலா எசன்ஸ் – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
வாழைப்பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொண்டு, அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஒரு கப் பால், முக்கால் கப் சர்க்கரை இவை மூன்றையும் கட்டிகள் இல்லாமல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்த விழுதில் ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

cake3

பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்றாக சூடு படுத்த வேண்டும். சிறிது நேரத்தில் சர்க்கரை உருக ஆரம்பிக்கும். இதனை நன்றாக கலந்து விட சிறிது நேரத்தில் சாக்லேட் நிறத்தில் இருக்கும் கேரமில்லாக மாறிவிடும்.

- Advertisement -

கேரமெல் சூடாக இருக்கும் பொழுதே அடிப்புறம் தட்டையான ஒரு அலுமினிய பாத்திரத்தில் ஊற்றி, கேரமெல் பாத்திரத்தினுள் நன்றாக பரவலாக இருக்குமாறு செய்ய, பாத்திரத்தை சுற்றி விட வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள வாழைப்பழ முட்டை கலவையை இதனுள் ஊற்றி வைக்க வேண்டும். இந்த கலவை பாத்திரத்தினுள் காற்று இடைவெளி இல்லாமல் செட்டாக பாத்திரத்தை நன்றாக தட்டிவிட வேண்டும்.

அடுப்பின் மீது ஒரு குக்கரை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதன் மீது ஒரு ஸ்டாண்டை வைக்க வேண்டும். பிறகு தயார் செய்து வைத்துள்ள அலுமினியப் பாத்திரத்தை ஸ்டாண்டின் மீது வைத்து ஒரு தட்டு போட்டு மூடி, குக்கரையும் மூடி வைக்க வேண்டும். குக்கர் 6 அல்லது 7 விசில் வரும் வரை நன்றாக வேக விட வேண்டும்.

cake

பிறகு குக்கர் பிரஷர் போனதும் குக்கரை திறந்து பாத்திரத்தை வெளியே எடுத்து சிறிது நேரம் ஆற விட வேண்டும். பின்னர் அதன் ஓரங்களை கத்தியை பயன்படுத்தி லேசாக கீரிவிட்டு அலுமினியப் பாத்திரத்தை ஒரு தட்டின் மீது தலைகீழாக கவிழ்த்து லேசாக அதன் அடிப்பகுதியை தட்டிவிட்டால் வாழைப்பழ ஸ்வீட்டி தட்டில் அழகாக வந்து விடும்.

cake2

இந்த ஆரோக்கியமான ஸ்வீட்டினை திடீரென வீட்டிற்கு விருந்தாளிகள் வரும்பொழுதும், குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸாகவும் செய்து கொடுங்கள். உங்களுக்கு பாராட்டு கிடைப்பது நிச்சயம் உறுதி. ஏனெனில் இந்த வாழைப்பழ ஸ்வீட்டின் சுவை நாவில் கரையும் அளவிற்கு அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -