முகம் முழுவதும் சொரசொரன்னு இருக்கா? சும்மா சாஃப்டாக பட்டுப் போல தொட்டுப் பார்த்தால் பளபளன்னு இருக்க தூக்கி போடும் வாழைப்பழ தோல் போதுமே!

banana-peel-shining-face
- Advertisement -

முகம் முழுவதும் கரடு முரடாக, மேடு பள்ளங்கள் மற்றும் சொரசொரப்பு தன்மையுடன் இருந்தால் நமக்கு நம்மை பார்ப்பதற்கே ஒரு விதமான எரிச்சல் உண்டாகும். நம்முடைய முகமும் பட்டுப் போல பளிச்சென பளிங்கு போல இருப்பதற்கு இந்த வாழைப்பழ தோல் எப்படி எல்லாம் பயன்படும்ன்னு தெரிஞ்சா, இனி வாழைப்பழ தோலை கூட விட்டு வைக்க மாட்டீங்க. பட்டு போன்ற சருமம் பெற செய்ய வேண்டியது என்ன? என்பதை இனி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஒருவருக்கு தன்னம்பிக்கையை கொடுக்கக் கூடியது அவர்களுடைய முக அம்சமும் ஆகும். நம்முடைய முகம் பிரகாசமாக ஜொலித்தால் இயல்பாகவே நமக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. நல்ல சுறுசுறுப்புடன் நம்மை இருக்கவும் வைக்கிறது எனவே மிருதுவான சருமத்தை எளிதாக அடைவதற்கு வேண்டாம் என்று தூக்கி போடும் இந்த வாழைப்பழ தோலை என்ன செய்யலாம்?

- Advertisement -

வாழைப்பழ தோலில் இருக்கும் அதிகப்படியான விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நம்முடைய சருமத்தில் விரைவாக வினைபுரிந்து இழந்த பொலிவை மீட்டுக் கொடுக்கிறது. மேலும் சருமத்தை முதிர்விலிருந்து தக்க வைத்து இளமையுடன் இருப்பதற்கு உதவி புரிகிறது. இளமையான தோற்றத்துடன், ஆரோக்கியமான சருமம் பெறுவதற்கு ஒரு வாழைப்பழத்தின் உடைய தோலை எடுத்துக் கொள்ளுங்கள். வாழைப்பழ தோலின் உட்பகுதியில் இருக்கும் கொஞ்சம் சதை பகுதியை ஒரு கூர்மையான கத்தி அல்லது ஸ்பூன் பயன்படுத்தி வழித்து எடுங்கள்.

இந்தக் கூழ் உடன் கொஞ்சம் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி மாவு நமக்கு ஸ்கிரப்பர் போல முகத்தில் செயல்படும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி, வெண்புள்ளி போன்றவை நீங்கி சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறிவிடும். வாழைப்பழ தோலில் இருந்து எடுக்கப்பட்ட இந்த கூலும், அரிசி மாவும் சரிசமமான அளவில் இருக்க வேண்டும். இதனுடன் கொஞ்சம் பால் அல்லது பன்னீர் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளுங்கள். பின்னர் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் முதலில் கொஞ்சம் போல் தடவி மசாஜ் செய்வது போல செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதனால் முகத்தில் இருக்கும் மாசு, மருக்கள், அழுக்குகள் போன்றவை வெளியில் வந்துவிடும். குறைந்தபட்சம் ஐந்தில் இருந்து பத்து நிமிடத்திற்கு இது போல நன்கு மசாஜ் செய்து பின்னர் ஒரு சுத்தமான காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்து எடுங்கள். முகத்தை தண்ணீர் ஊற்றி கழுவ கூடாது. பிறகு ஒரு ஐந்து நிமிடம் இடைவெளி விட்டுவிட்டு மீண்டும் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். பிறகு இது நன்கு உலர்ந்து இறுகும் வரை காத்திருக்க வேண்டும். ஒரு 20 லிருந்து 25 நிமிடத்திற்குள் நன்கு காய்ந்து உலர்ந்து விடும்.

முகம் இறுக்கமான ஒரு உணர்வை பெறும் அந்த சமயத்தில் நீங்கள் முகத்தை ஒரு ஈர துணியால் நன்கு துடைத்து எடுக்க வேண்டும். நன்கு துடைத்து எடுத்த பின்பு மாய்ஸ்ரைசர் லோஷன் ஏதாவது ஒன்றை முகத்தில் தடவி கொள்ளுங்கள். அப்போது தான் முகம் எரிச்சல், வீக்கம் போன்றவற்றை ஏற்பட விடாமல் தடுக்கும். இதை அடிக்கடி செய்யக்கூடாது. வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து பாருங்கள் போதும். விரைவிலேயே உங்களுடைய முகம் சொரசொரன்னு இல்லாமல் நல்லதொரு ஆரோக்கியமான சருமமாக பளிங்கு போல ஜொலிக்கும்.

- Advertisement -