சொன்னா ஆச்சரியப்படுவீங்க வாழைப்பழம் போட்டு பூரி செஞ்சு பாருங்க ஒரு பூரி கூட மிச்சமே ஆகாது! சுவையான பனானா பூரி எப்படி ஈஸியா செய்யலாம்?

banana-poori
- Advertisement -

பொதுவாக பூரி என்றாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். பூரி செஞ்சு கொடுங்க என்று கேட்டு அடம் பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. அந்த வகையில் இந்த வாழைப்பழ பூரி குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களையும் ஈர்க்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை. சுவையான இனிப்பு வாழைப்பழ பூரி இப்படி செய்து கொடுங்க, தொட்டுக்கக் கூட தேவையில்லை, அப்படியே சாப்பிடலாம். அந்த அளவிற்கு அசத்தலான டேஸ்டியான இந்த வாழைப்பழ பூரி எப்படி ஈசியாக தயாரிக்கப் போகிறோம்? என்பதை இனி பார்ப்போம்.

வாழைப்பழ பூரி செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒன்றரை கப், வாழைப்பழம் – ஒன்று, சர்க்கரை – 2 ஸ்பூன், தயிர் – ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன், சமையல் எண்ணெய் – தேவையான அளவு, ஆப்ப சோடா – கால் ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன்.

- Advertisement -

வாழைப்பழ பூரி செய்முறை விளக்கம்:
வாழைப்பழ பூரி செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாழைப்பழத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் வாசனைக்கு ஏலக்காய் தூள் ஒரு ஸ்பூன், சர்க்கரை மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து நைசாக ஸ்மூத்தி போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றரை கப் அளவிற்கு கோதுமை மாவை சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் ஆப்ப சோடா மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். கைகளால் நன்கு கலந்து விட்ட பின்பு நீங்கள் அரைத்து வைத்துள்ள ஸ்மூத்தி வாழைப்பழ கலவையை அதனுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பிசைய வேண்டும். கோதுமை மாவு கெட்டியாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்த பின்பு மூடி போட்டு அரைமணி நேரம் ஊற விட்டு விடுங்கள். அரை மணி நேரத்திற்கு பிறகு நன்கு ஊறிய மாவை ஒரு முறை நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பூரிக்கு உருட்டுவது போல வட்டமாக பூரி கட்டையில் வைத்து திரட்டுங்கள். மாவு வட்டமாக உங்களால் திரட்ட முடியவில்லை என்றால், ஒரு முனை கூர்மையுள்ள டிபன் பாக்ஸ் மூடி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மாவில் மீது கவிழ்த்தி வைத்தால் ரவுண்ட் ஷேப் உங்களுக்கு கிடைக்கும். சுற்றியுள்ள மீதமுள்ள மாவை எடுத்து விடுங்கள். அவ்வளவுதான் இப்படி எல்லா மாவையும் நீங்கள் வட்டமாக தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு கொதித்த பிறகு மீடியம் ஃப்ளேமில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒவ்வொரு பூரி மாவையும் போட்டு அரை நிமிடம் நன்கு வேக விடுங்கள். ஒருபுறம் வேகும் பொழுதே நீங்கள் சுற்றியுள்ள எண்ணெயை எடுத்து அதன் மீது கரண்டியால் தெளித்து விட்டால் பூரி உப்பலாக வரும். பிறகு அடுத்த அரை நிமிடம் திருப்பி போடுங்கள். இப்படி ஒரே நிமிடத்தில் சூப்பராக பூரி ரெண்டு புறமும் சிவக்க புசுபுசு என்று உப்பி வெந்து உங்களுக்கு கிடைக்கும். ரொம்பவே சுவையான இந்த வாழைப்பழ பூரி குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கப் போகிறது. நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்திடுங்க.

- Advertisement -