சூரிய பகவானால் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷம் இருந்தாலும் எவ்வளவு முயற்சி செய்தும் அரசாங்க வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களும் சூரிய பகவானின் அருளை பெறுவதற்கு ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சப்தமி திதி என்பது சூரிய பகவானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் நாம் சூரிய பகவானை எந்த முறையில் வழிபாடு செய்ய சூரிய பகவானால் ஏற்பட்ட கிரக தோஷங்கள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சூரிய பகவானுக்குரிய கிழமை ஞாயிற்றுக்கிழமை. சூரிய பகவானுக்குரிய திதியாக திகழக் கூடியது சப்தமி திதி. இன்று ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சப்தமி திதியாக இருப்பதால் இதை நாம் பானு சப்தமி என்று கூறுகிறோம். இந்த நாளில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடும் அதிக அளவில் பலனை தருவதாக இருக்கும். அதிலும் குறிப்பாக சூரிய பகவானோடு தொடர்புடைய எந்த ஒரு வழிப்பாடும் பரிகாரமும் அவருடைய பரிபூரணமான அருளை பெறச் செய்யும். ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவானின் ஆதிக்கம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு உயர் பதவிகள் கிடைப்பதற்கும், அரசாங்கம் தொடர்பான வேலைகள் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதே சமயம் ஆரோக்கியமான வாழ்க்கையும் அமையும். அப்படிப்பட்ட சிறப்பான அனுகூலத்தை பெறுவதற்கு சூரிய வழிபாடு என்பது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
பொதுவாகவே தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாடு என்பது நல்ல பலனை தரும். இன்று சப்தமி திதியோடு வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவில் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நமக்கு தெரிந்த முறையில் சூரிய பகவானை நாம் வழிபாடு செய்தாலே போதும். 12 முறை சூரிய பகவானை பார்த்து வணங்குவதும் சூரிய பகவானுக்குரிய ஆதித்ரய ஹ்ருதயம் ஸ்லோகத்தை கூறுவதும் மிகவும் சிறப்பாக திகழ்கிறது.
இதோடு மட்டுமல்லாமல் அருகில் இருக்கும் நவகிரக ஆலயத்திற்கு சென்று சூரிய பகவானுக்கு முன்பாக கோதுமையை பரப்பி அதற்கு மேல் 12 அகல் விளக்குகளை கிழக்கு திசை பார்த்தவாறு தீபமேற்றி வழிபாடு செய்வதன் மூலமும் சூரிய பகவானின் அருளை பெற முடியும். இதோடு மட்டுமல்லாமல் 1 1/4 கிலோ கோதுமை, ஒரு சிவப்பு நிற பேஷ்டி அல்லது துண்டு, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், சிவப்பு நிற மலர்கள், 101 ரூபாய் காணிக்கை போன்றவற்றை கோவிலில் வேலை செய்யக்கூடிய அர்ச்சகருக்கு கொடுத்து அவரிடமிருந்து ஆசிர்வாதத்தை பெறுவதன் மூலமும் சூரிய பகவானால் ஏற்பட்ட கிரக தோஷங்கள் விலகும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர வன்னி விநாயகர் பரிகாரம்
சூரிய பகவானுக்கு உரிய பானு சப்தமி நாளான இன்று இந்த எளிமையான சூரிய வழிபாட்டை மேற்கொள்பவர்களுடைய வாழ்க்கையில் சூரிய பகவானால் பலவிதமான நன்மைகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.