- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்என்னது! கறை படிந்த பாத்ரூமை சுத்தப்படுத்த கல் இருந்தா போதுமா? ஆமாங்க பாத்ரூமை சுத்தப்படுத்த இனி...

என்னது! கறை படிந்த பாத்ரூமை சுத்தப்படுத்த கல் இருந்தா போதுமா? ஆமாங்க பாத்ரூமை சுத்தப்படுத்த இனி அதிக விலை கொடுத்து எதையும் வாங்க வேண்டாம் இந்த கல் இருந்தா பாத்ரூம் பளிச்சுன்னு புதுசு மாதிரி மாறிடும்.

- Advertisement -

வீட்டு வேலைகளிலே மிகப்பெரிய என்றால் அது பாத்ரூமை சுத்தப்படுத்தும் வேலை என்றே சொல்லலாம். ஏனெனில் இதை தினமும் சுத்தமே செய்து கொண்டிருந்தால் கூட ஆங்காங்கே கறைகள் பிடித்து கொள்ளும். அதை நாம் கவனிக்காமல் விட்டு விட்டால் விடாப்பிடியான கறையாக மாறி சுத்தம் செய்ய பெரும் பாட ஆகி விடும். அதனாலயே இந்த பாத்ரூமை சுத்தப்படுத்த அதிக விலை கொடுத்து லிக்விட், பவுடர் போன்றவற்றை வாங்கி வைப்போம். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இது போல எந்த ஒரு பொருளையும் கடையில் காசு கொடுத்து வாங்காமல் எளிமையான முறையில் எப்படி சுத்தப்படுத்துவது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை சுத்தப்படுத்த
இந்த முறையில் நாம் பாத்ரூமை சுத்தப்படுத்த முதலில் ஒரு பழைய பிளாஸ்டிக் பாட்டில் மூடியுடன் உள்ளதை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக சமையலுக்கு பயன்படுத்தும் தூள் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கால் கப் வினிகரை ஊற்றி விடுங்கள். இது இரண்டையும் நன்றாக கலந்த பிறகு நாம் துணி துவைக்க பயன்படுத்தும் லிக்விட் அல்லது சோப்பு பவுடர் எதுவாக இருந்தாலும் கொஞ்சமாக சேர்த்து குலுக்கி கொள்ளுங்கள். இதில் தண்ணீர் ஊற்ற கூடாது.

- Advertisement -

அடுத்து இப்போது நாம் இதில் சேர்க்கப்படும் அந்த பொருள் தான் மிகவும் முக்கியமானது. அது வேறு ஒன்றும் இல்லை செங்கல் தான். பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் ஒன்று இரண்டு செங்கல் ஆவது இருக்கும் அல்லது வீட்டின் அருகிலாவது இருக்கும். இந்த செங்கலை கொண்டு வந்து சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்த பிறகு நன்றாக நுணுக்கி பவுடர் ஆக்கிக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு இப்படி கிடைக்கவில்லை என்றால் செங்கல் பொடி வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த செங்கல் பொடி ஒரு கப் அளவிற்கு கொஞ்சம் கணிசமாகவே எடுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் அந்த லிக்விட் பாட்டிலில் போட்டு நன்றாக குலுக்கி ஒரு அரை மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். இது நன்றாக ஊறி நல்ல காவி நிறத்தில் ஒரு லிக்விட் உங்களுக்கு கிடைத்து விடும். இந்த லிக்யூட்டை உங்க வீட்டு பாத்ரூமில் கறை படிந்த டைல்ஸ் பீங்கான் போன்றவற்றில் ஊற்றி பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

இது பத்து நிமிடத்திற்கு நன்றாக ஊறிய பிறகு சுத்தப்படுத்த பயன்படுத்தும் பிரஷ் அல்லது துடைப்பம் வைத்து தேய்த்து விடுங்கள். இப்போதும் தண்ணீர் ஊற்றக் கூடாது இதில் செங்கல் கலந்திருப்பதால் கொஞ்சம் நறநறப்பு தன்மை இருக்கும். எனவே இதை வைத்து தேய்க்கும் போது அழுக்கு கறைகள் எல்லாம் சுத்தமாக நீங்கி விடும். அதன் பிறகு தண்ணீர் ஊற்றி அலசி விடுங்கள் பாத்ரூம் பளிச்சென்று மாறி விடும். அதுமட்டுமின்றி இதில் உப்பு, வினிகர் எல்லாம் சேர்த்து இருப்பதால் பாத்ரூமில் கரப்பான் பூச்சி வேறு பூச்சித்தொல்லையும் இருக்காது. பாத்ரூம் நல்ல ஒரு நறுமணத்துடன் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பாட்டி காலத்து பழைய கரி பிடிச்ச பாத்திரத்தை கூட புதுசு போல பளப்பளன்னு மாத்த இதோ இந்த சூப்பர் ஐடியாவை ட்ரை பண்ணுங்க.

இந்த முறையில் சுத்தப்படுத்துவதால் இருக்கும் இன்னொரு பயன் இப்படி சுத்தம் செய்யும் பாத்ரூமில் அடிக்கடி கறை பிடிக்காது. ஒரு வேளை நீண்ட நாட்களாக பிடித்த விடபிடியான கறையாக இருந்தாலும் இதை ஒரு முறை ஊற்றி சுத்தப்படுத்தினாலே போதும் பளிச்சென்று மாறி விடும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்