பாட்டி காலத்து பழைய கரி பிடிச்ச பாத்திரத்தை கூட புதுசு போல பளப்பளன்னு மாத்த இதோ இந்த சூப்பர் ஐடியாவை ட்ரை பண்ணுங்க.

kari piditha pathiram
- Advertisement -

பொதுவாக எல்லோர் வீட்டு பரண் மேலையும் நம் வீட்டு பெரியவர்கள் பயன்படுத்திய பழைய பாத்திரங்கள் அல்லது நாமே பயன்படுத்தி பழைய பாத்திரங்கள் என்று சிலவற்றை தூக்கி போட்டு வைத்திருப்போம். ஒரு சில பாத்திரங்கள் அதிகமாக கரிப்பிடித்து பயன்படுத்தவே முடியாது போனாலும் அவர்கள் பயன்படுத்திய அந்த பாத்திரத்தை தூக்கி போடவும் மனது வராது. அப்படி வைத்திருக்கும் பாத்திரங்களை எல்லாம் இந்த முறையில் சுத்தப்படுத்தி பாருங்கள் சட்டுன்னு பளப்பளப்பாக மாற்றி விடலாம். இப்போது இந்த முறையில் அடுப்பில் வைத்து கறியாக்கிய பாத்திரங்களை எப்படி சுத்தம் செய்வது என்று இந்த வீட்டு குறிப்பு குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பாத்திரங்கள் எல்லாம் பெரும்பாலும் நாம் அடுப்பில் வைத்து சமைக்கும் போது அதில் அடி பிடித்து கறுப்பானவையாகவே இருக்கும். இதில் மற்றவை எல்லாம் லேசாக நிறம் மாறி கறுத்து போய் இருக்கும். இதை சுத்தம் செய்வதற்கு முதலில் அடிபிடித்த பாத்திரத்தை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். அந்தத் தண்ணீரில் துணி துவைக்கும் சலவைத்தோடு ஒரு ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ரெண்டு டீஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு மேலும் இத்துடன் இரண்டு டீஸ்பூன் சமையல் சோடா அனைத்தையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

இவையெல்லாம் சேர்த்த பின்பு தண்ணீர் கொதித்து நுரையாக மேலே பொங்கி வரும். அந்த சமயத்தில் அடுப்பை மிதமான தீக்கு முதல் அதிக தீக்கு மாற்றி மாற்றி வைத்து ஐந்து நிமிடம் இப்படி கொதிக்க விடுங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு தண்ணீரை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பிறகு, அடி பிடித்த பாத்திரத்தை இரும்பு நார் கொண்டு தேய்த்து விடுங்கள். இந்த முறையிலே பாத்திரம் பெரும்பாலும் கறைகள் நீங்கி இருக்கும். அதன் பிறகு கொஞ்சமாக டூத் பேஸ்ட்டை பாத்திரத்தில் சேர்த்து மீண்டும் கம்பி நார் வைத்து ஒரு முறை நன்றாக தேய்த்து விட்டால் போதும். பாத்திரத்தில் இருக்கும் அடிபிடித்த கறை முழுவதுமாக நீங்கி விடும்.

அடுத்து இந்த பாத்திரம் புதிது போல பளப்பளக்க மீண்டும் கொஞ்சமாக வினிகர் சமையல் சோடா சேர்த்து ஒரு முறை கம்பி நார் வைத்து உள்புறம் வெளிப்புறம் என அனைத்தையும் தேய்த்த பிறகு எப்பொழுதும் போல பாத்திரம் தேய்க்கும் சோப்பு வைத்து இந்த பாத்திரத்தை சுத்தம் செய்து பாருங்கள். அப்போது தான் நீங்கள் புதிதாக வாங்கிய பாத்திரம் போல பளிச்சென்று மாறி விடும்.

- Advertisement -

ஒரு வேளை உங்களிடம் அடி பிடித்த பாத்திரம் இல்லை ஆனால் பாத்திரம் பழையதாகி இருக்கிறது அதை புதிதாக மாற்ற வேண்டும் எனில் சாதாரணமாக பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இந்த சோப்பு பவுடர், வினிகர், பேக்கிங் சோடா எல்லாம் சேர்த்த தண்ணீரைக் கொண்டு பாத்திரத்தை சுத்தம் செய்து பாருங்கள் பளிச்சென்று மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: கறுத்துப் போன பழைய வெள்ளி கொலுசை பத்து நிமிசத்துல புதுசு போல மாத்துற இந்த டிப்ஸ் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா போதும். ஒரு முறை வாங்குன கொலுசை உங்க வாழ்நாள்ல மாத்தவே மாட்டீங்க.

இனி எவ்வளவு பழைய பாத்திரமாக இருந்தாலும் சரி கறிப்பிடித்த பாத்திரமாக இருந்தாலும் சரி தூக்கி போடாமல் புதிதாக மாற்றி பயன்படுத்த இந்த முறை உங்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும். அது மட்டும் இன்றி இதனால் பெரும் அளவு பணமும் மிச்சமாகும் நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -