- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇனி உங்க முகத்திற்கு ஏற்ற சரியான சோப்பைத் தேடி அலைய வேண்டாம். எந்த சோப்பாக இருந்தாலும்...

இனி உங்க முகத்திற்கு ஏற்ற சரியான சோப்பைத் தேடி அலைய வேண்டாம். எந்த சோப்பாக இருந்தாலும் அதை இப்படி பயன்படுத்துங்கள். உங்கள் முகம் பளிச்சென்று பால் போல பிரகாசமாக மாறி விடும்.

- Advertisement -

சோப்பை பொறுத்த வரையில் ஒவ்வொருவரின் சருமத்திற்கும் ஒவ்வொரு வகையான சோப்பு செட்டாகும். சிலருக்கு எண்ணெய் வடியும் சருமமாக இருக்கும். அப்படியானவர்கள் ஒரு வகையான சோப்பையும், வறட்சி சருமம் கொண்டவர்களுக்கு ஒரு வகையான சோப்பு என ஒவ்வொரு சருமத்திற்கென தனித்தனியான சோப்புகள் உள்ளது. இந்த சோப்புகளின் வகைகளை பட்டியல் எடுத்தாலே பல்லாயிர கணக்கில் வரும்.

இந்த சூழ்நிலையில் நாம் ஒரு சோப்பை பயன்படுத்தும் பொழுது அது செட் ஆகாத போது உடனே வேற சோப்பை மாற்றி பயன்படுத்துவோம். அந்த சோப்பும் சரி வரவில்லை என்றால் வேறு, இப்படி மாற்றிக் கொண்டே சென்றால் சோப்பு முகத்திற்கு செட்டாகதோ இல்லையோ இதனால் முகத்தில் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். அப்படி ஆகாமல் இருக்க எந்த வகையான சோப்பாக இருந்தாலும் இப்படி செய்து பயன்படுத்தினால் உங்கள் சருமம் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருக்கும். வாங்க அது என்ன என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த சோப்பை தயாரிக்க நீங்கள் பயன்படுத்தும் சோப்பில் இருந்து பாதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பாதி சோப்பை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அல்லது காய் சீவும் சீவலில் வைத்து சோப்பை துருவி இதை அடிகனமான ஒரு சில்வர் கிண்ணத்தில் போட்டு எடுத்து கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் துருவி வைத்துள்ள சோப்பு கிண்ணத்தை வைத்து விட்டு, இதில் நாம் வீட்டில் காய்ச்சி வைத்திருக்கும் பாலில் இருந்து கால் டம்ளர் பாலை மட்டும் இதில் ஊற்றுங்கள். இப்போது பாலில் இந்த சோப்பு கரைந்து நல்ல கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு வர வேண்டும். ஒரு வேளை உங்களுக்கு சோப்பு கரைவதற்குள்ளாகவே பால் தீர்ந்து விட்டால் இன்னும் கொஞ்சம் கூட சேர்த்துக் கொள்ளலாம் தவறில்லை.

- Advertisement -

சோப்பு பாலில் நன்றாக கரைந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆறிய பின் ஒரு டேபிள் ஸ்பூன் நல்ல சுத்தமான தேனை இந்த பேஸ்ட்டில் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் பிளாஸ்டிக் டப்பா அல்லது சோப்பு தயாரிக்க பயன்படுத்தும் மோல்டு எது இருந்தாலும் அதில் ஆற வைத்த இந்த பேஸ்ட்டை ஊற்றி ஃப்ரீசரில் ஐந்து மணி நேரம் வைக்க வேண்டும்.

ஐந்து மணி நேரம் கழித்து இதை வெளியில் எடுத்து பயன்படுத்துங்கள். ஒரு அருமையான சருமத்திற்கு எந்த பாதிப்பு இல்லாத சோப்பு தயாராகி விடும். நாம் பயன்படுத்தும் சோப்பில் பிஎச் அளவு ஆனது அதிகமாக இருந்தால் சருமத்தில் எரிச்சல், சருமம் வறண்டு போவது, சில நேரங்களில் சருமத்தில் அரிப்பு, புண் போன்றவை கூட வந்து விடும். இந்த முறையில் சோப்பை பயன்படுத்தினால் அது போன்று பிரச்சனைகள் வராமல் தடுத்து விடும்.

இதையும் படிக்கலாமே: முகத்தில் இருக்கும் கருத்திட்டுகள் அனைத்தும் மாயமாய் மறைந்து பொலிவை பெற பாதி தக்காளி பழம் இருந்தால் அதை இப்படி பயன்படுத்துங்கள் போதும். அப்புறம் பாருங்க கருந்திட்டுன்னா என்னன்னு கேப்பீங்க.

அதுமட்டுமின்றி எல்லா வகையான சருமத்தினருக்கும் இந்த சோப்பை பயன்படுத்தலாம். இதில் பால், தேன் போன்ற இயற்கையாகவே நிறத்தை கூட்டி கொடுக்கும் பொருட்களை சேர்த்து இருப்பதால் முகமும் நல்ல நிறத்துடன் பொலிவாக இருக்கும். இந்த பதிவில் உள்ள குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்