அழகான பேரழகை பெற இந்த ஒரு குளியல் பொடி போதும். பெண்களின் சருமத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் கூட, சீக்கிரத்தில் நிரந்தரமாக உதிர, ரகசிய பொருட்கள் இந்த பொடியோடு சேர்க்கப்பட்டுள்ளது.

bath-powder
- Advertisement -

சோப்பு போட்டு குளிப்பதை விட, இப்படி இயற்கையாக பொடிகளை அரைத்து நாம் பயன்படுத்துவது ரொம்ப ரொம்ப நல்லது. கொஞ்சம் வேலை அதிகம் தான். ஆனால் அழகான அழகை நிரந்தரமாக பெற வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமப்பட்டு தானே ஆகவேண்டும். சிரமப்படாமல் நமக்கு கிடைக்கும் அழகு பொருட்களில் முழுமையான ஆரோக்கியம் இல்லை. முழுமையாக ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்றால், நிச்சயம் அதில் ஒரு சிரமம் இருக்கத்தான் செய்யும். அந்த வரிசையில் இயற்கையான முறையில் ஒரு குளியல் பொடி எப்படி தயார் செய்வது என்பதை பற்றிய அழகு குறிப்பு இதோ உங்களுக்காக. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து இந்த பொடி போட்டு குளிப்பாட்டி பாருங்கள். அவர்கள் வளர வளர அவர்களுடைய சருமம் அத்தனை அழகாக இருக்கும்.

பாரம்பரிய முறையில் குளியல் பொடி தயாரிக்கும் முறை:
இந்த குளியல் பொடி செய்ய தேவையான பொருட்களை முதலில் பார்த்து விடுவோம். காய்ந்த ரோஜா இதழ்கள் – 100 கிராம், பச்சைப்பயிறு – 1/2 கிலோ, வெட்டிவேர் – 100 கிராம், மகிழம்பூ – 100 கிராம், கார்போகரிசி – 100 கிராம், பூலாங்கிழங்கு – 100 கிராம், கோரைக்கிழங்கு – 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம், வசம்பு – 100 கிராம், எலுமிச்சை பழத்தோல் அல்லது ஆரஞ்சு பழத்தோல் – 1 கைப்பிடி அளவு, காய்ந்தது அதிமதுரம் – 100 கிராம். (இதில் பூலாங்கிழங்கு கோரைக்கிழங்கு கஸ்தூரி மஞ்சள் எல்லாம் தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்க செய்யும் தன்மை கொண்டது.)

- Advertisement -

இதில் மேலே சொன்ன எல்லா பொருட்களுமே காய்ந்த பொருட்களாக நாட்டு மருந்து கடைகளில் நமக்கு கிடைக்கும். அவைகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். எலுமிச்சை பழ தோல் அல்லது ஆரஞ்சு பழத்தோலை உங்களுடைய வீட்டிலேயே சேகரித்து வைத்து நன்றாக வெயிலில் காய வைத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ட்ரையாக கடையில் இருந்து வாங்கினால் கூட, ஒரு அகலமான பேப்பரில் இந்த பொருட்களை எல்லாம் கொட்டி வெயிலில் இரண்டு மணி நேரம் காய வைக்க வேண்டும். அதன் பின்பு காய்ந்த பக்கெட்டில் இந்த பொருட்களை எல்லாம் கொட்டி ரைஸ் மில்லில் கொடுத்து நைசாக அரைத்து தரச் சொல்லுங்கள். மிளகாய் தூள் போடும் மெஷினில் கொடுத்து இதை அரைக்க கூடாது. கவனமாக அரைத்து வாருங்கள்.

- Advertisement -

அரைத்த இந்த பொடியை தனியாக ஒரு பேப்பரில் கொட்டி நன்றாக ஆற வைத்து சூடு போனதும் காத்து போகாத டப்பியில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஆறு மாதத்திற்கு மேல் கூட இந்த பொடி கெட்டுப் போகாது. ஆனால் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் பயன்பாட்டிற்கு சின்ன பாட்டிலில் கொஞ்சம் போட்டு வச்சுக்கோங்க.

இந்த பொடியை குளிக்கும் போது உங்களுடைய உடல் முழுவதும் பூசி குளிக்க வேண்டும். சின்ன கிண்ணத்தில் தேவையான அளவு பொடி போட்டு தண்ணீர், பன்னீர், பால், தயிர், இப்படி உங்கள் விருப்பம் போல எதை வேண்டுமென்றாலும் இதில் ஊற்றி கலந்து தேய்த்து குளிக்கலாம். உடம்பு முழுவதும் இந்த நைசான விழுதை போட்டு தேய்த்து குளிக்கும் போது, நம்முடைய சருமம் பொலிவு பெறுவதோடு சருமத்தில் இன்பெக்சன் ஏற்படாமலும் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கொத்து கொத்தாக கொட்டிக் கொண்டே இருக்கும் முடியை கூட, 1 வாரத்தில் நிறுத்த இந்த 3 பொருட்கள் ஒன்று சேர்ந்தால் போதும். முடி உதிர்வுக்கு பவர்ஃபுல்வான, பெஸ்ட் ஹேர் ஃபால் ரெமிடி.

இந்த பொடியை பயன்படுத்தும் போது சோப்பு போட்டு குளிக்க கூடாது. இதிலிருந்தே உங்களுக்கு நல்ல நறுமணம் கிடைக்கும். உங்களுடைய சருமத்தில் குறுகுறுவாக அல்லது சரும பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் இந்த குளியல் பொடியோடு ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை போட்டு கூட அரைத்துக் கொள்ளலாம். அது இன்னும் கூடுதல் பலனை கொடுக்கும். ஆரோக்கியம் நிறைந்த அழகை கொடுக்கக்கூடிய இந்த குளியல் பொடி ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா சிரமம் பார்க்காமல் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் இந்த பொடியை தயார் செய்து பயன்படுத்துங்கள்.

- Advertisement -