கொத்து கொத்தாக கொட்டிக் கொண்டே இருக்கும் முடியை கூட, 1 வாரத்தில் நிறுத்த இந்த 3 பொருட்கள் ஒன்று சேர்ந்தால் போதும். முடி உதிர்வுக்கு பவர்ஃபுல்வான, பெஸ்ட் ஹேர் ஃபால் ரெமிடி.

hair9
- Advertisement -

சில பேருக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கும். கையில் தொட்டால் கூட முடி அப்படியே உதிர்ந்து வந்துவிடும். ரப்பர் பேண்டை கழட்டும்போது பத்து முடி, போடும்போதும் பத்து முடி கட்டாயம் உதிரும். தலைக்கு குளித்தால் வீடு முழுவதும் முடி தான். மூளை மூளைக்கு பறக்கும். இப்படி தலைமுடி உதிர்வு அதிகமாக இருப்பவர்கள் முடியை அடர்த்தியாக்க ஒரு சின்ன குறிப்பு. எளிமையான குறிப்பு தான்.

வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து, குறைந்த செலவில்லாமல் இந்த பேக்கை தயார் செய்யலாம். பேக் என்றதுமே பயப்பட வேண்டாம். இதை போட்டு அலசுவதற்கு கஷ்டமே இல்லை. சீரம் போல நாம் ஒரு லிக்விட் தயார் செய்யப் போகின்றோம். அதற்கு மூன்று பொருட்கள் இருந்தால் போதும். உங்கள் முடியை அழகாக்க போகும் அந்த அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

- Advertisement -

தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த ஹேர் சிரம்:
வேப்ப இலை மூன்று கொத்து, சின்ன வெங்காயம் தோல் உரித்தது 10 பல், கருஞ்சீரகம் 1 டேபிள் ஸ்பூன், அவ்வளவுதான். வேப்ப இலைகளை கழுவிக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள் போதும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து, அதில் கழுவிய வேப்ப இலைகளை உருவி போட்டுக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயங்களை போட்டு, கருஞ்சீரகம் போட்டு, தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். அப்படியே அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை ஒரு காட்டன் துணியை போட்டு பிழிந்து எடுத்தால் சாறு நமக்கு கிடைக்கும்.

அவ்வளவு தான். நமக்குத் தேவையான ஹேர் சீரம் தயார். இதோடு ஏதாவது ஒரு எண்ணெயை கலக்க வேண்டும். முடிக்கு ஷைனிங் தர போஷாக்கை தருவதற்கு பாதாம் ஆயில் கலப்பது சிறப்பு. அதை தனியாக வாங்க முடியாது என்பவர்கள் விளக்கெண்ணெய் கலக்கலாம். அதுவும் ஒத்து வராது என்பவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் 1 ஸ்பூன் அளவு கலந்து கொள்ளுங்கள். இந்த சீரம் ஜூஸியாக தான் இருக்கும். தலையில் தூசு ஒட்டிக் கொள்ளும், தலைக்கசக்க கஷ்டம் என்ற பிரச்சனையும் இருக்காது.

- Advertisement -

இந்த சீரமை ஒரு காட்டன் பஞ்சிலோ அல்லது காட்டன் துணியிலோ தொட்டு உங்களுடைய தலை முடியில், ஸ்கேல்பில் படும்படி தேய்க்க வேண்டும். முடியை பாகம் பாகங்களாக பிரித்து நன்றாக இந்த சீரம் வேர்க்கால்களில் படும்படி தேய்த்துக் கொள்ளுங்கள். 15 லிருந்து 20 நிமிடம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை அலசி கொள்ளலாம். வாரத்தில் 3 நாட்கள் கட்டாயம் இதை பின்பற்றி வர வேண்டும். ஒரு மாதத்தில் உங்களுடைய முடி உதிர்வில் நல்ல வித்தியாசம் தெரியும். படிப்படியாக முடி உதிர்வது குறையும். மூன்று மாதம் பயன்படுத்தி பாருங்கள். படிப்படியாக உங்களுடைய தலைமுடி நன்றாக வளர தொடங்கும்.

எல்லா ஹாட் பேக்கும் எல்லோருக்கும் ஒத்துவரும் என்று சொல்லிவிட முடியாது. வாரத்தில் மூன்று நாள் இதை போடும்போதே உங்களுக்கு ரிசல்ட் என்ன என்பது தெரியும். முடி வழக்கத்தை விட குறைவாக கொட்டுதா, வழக்கத்தை விட அதிகமாக கொட்டுதா அப்படின்னு பாருங்க. ஒரு வேலை வழக்கத்தை விட அதிகமாக கொட்டுவது போல தோன்றினால் குறிப்பை உடனடியாக நிறுத்தி விடலாம். இதன் மூலம் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படப்போவது கிடையாது.

- Advertisement -

முடி உதிர்வது குறைவது போல உங்களுக்கு தெரியும் பட்சத்தில் குறிப்பை விடாமல் ட்ரை பண்ணுங்க. நிச்சயமா உங்களுக்கும் அடர்த்தியான முடி கிடைக்கும். இந்த டிப்ஸ், இந்த ஹேர் பேக் மட்டும் கிடையாது. புதுசாக நீங்கள் எதை முயற்சி செய்தாலும் தலை முடி போக்கை சரியாக கவனிக்க வேண்டும். வழக்கத்தை விட ரொம்பவும் முடி உதிர்வில் வித்தியாசம் தெரிந்தால், அந்த பொருள் உங்களுக்கு செட்டாகவில்லை அதை நிறுத்துவது தான் நல்லது என்று அர்த்தம்.

இதையும் படிக்கலாமே: ஒரு கைப்பிடி பாசுமதி அரிசி இருந்தால் போதும். உங்களுடைய சருமம் மேக்கப் எதுவும் போடாமலேயே இப்படி கொரியன் ஸ்கின் போல பளபளப்பாக ஜம்முனு மாறிவிடும்.

தலைக்கு குளித்து முடித்த பின்பு ஈரத்தலையில் இருக்கும் முடியை துண்டை போட்டு நரநரவென தேய்ப்பது, முடியை கீழே கவிழ்த்து போட்டு துண்டை வைத்து அடித்து உதறி காய வைப்பது போன்ற தவறுகளை செய்யாதீர்கள். தலையில் தண்ணீர் ஊற்றியவுடன் வேர்க்கால்கள் எல்லாம் சாப்டாக மாறிவிடும். அந்த சமயத்தில் முடியை முரட்டுத்தனமாக கையாண்டால் முடி அதிகமாக தான் கொட்டும். அதையும் கொஞ்சம் பார்த்து செய்யுங்கள்.

- Advertisement -