முறையாக குளிப்பதன் மூலம் கூட தோஷங்கள் குறைய வாய்ப்பு உள்ளதா? சித்தர்கள் கூறியிருக்கும் ரகசியம்.

நாம் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் ஒரு செயல் தான் குளியல். எல்லோரும் தான் தினம்தோறும் குளிக்கிறோம். ஆனால் முறைப்படி குளிக்கிறோமா? குளிப்பதற்கு எல்லாம் முறை இருக்கிறதா? என்று சிந்திக்காதீர்கள். தினசரி செய்யப்படும் எல்லா வேலைகளுமே காரண காரியங்களோடு பின்னிப் பிணைந்து தான் இருக்கின்றது. நம்முடைய வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ்வதற்கு நம் முன்னோர்கள் வரையறை யோடு தான் எல்லாவற்றையும் நமக்காக சொல்லி விட்டு சென்றுள்ளார்கள். காலப்போக்கில் இவையெல்லாம் சற்று மறைந்து வந்து கொண்டே இருக்கிறதே தவிர, எதுவும் அழியவில்லை. இப்படிப்பட்ட நல்ல, சில குறிப்புகளை எல்லாம் தெரிந்து கொண்டு நம் வாழ்க்கையில் முறையாக பயன்படுத்துவதன் மூலம் நம்மால் நிச்சயமாக நல்ல பலனை அடைய முடியும். சித்தர்களால் நமக்காக விட்டுச் செல்லப்பட்ட, ஒரு நல்ல குறிப்பை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bathing

நமக்கு இருக்கும் தோஷங்களை அவிழ்க்கும் ஒரு சிறிய முறைதான் இது. நீங்கள் அன்றாடம் குளிக்கும் போது இந்த முறையை பயன்படுத்தி குளிப்பது நல்ல பலனை தரும். தினம்தோறும் உங்களது குளியலறையில் உங்கள் குளியலை முடித்த பின்பு, அதாவது சோப்பு போட்டு சுத்தமாக குளித்து முடித்து விட்டீர்கள். அதன் பின்பு தண்ணீர் ஊற்றி உங்களது உடலையும் தூய்மைப் படுத்தி விட்டீர்கள். குளியலின் இறுதி கட்டமாக, உங்களுடைய வலது கையில் ஒரு கப் தண்ணீர் எடுத்து, தொப்புளுக்கு கீழ்ப்பகுதியான அடி வயிற்றில் ஊற்றிக் கொண்டே, உங்களது இடது கையால் லேசாக நீவி விட வேண்டும். இப்படியாக 3 முறை தண்ணீரை ஊற்றி அழுத்தம் தராமல் லேசாக கீழ்பக்கமாக நோக்கி தடவி விட்டுக் கொள்ளுங்கள்.

இந்த தொப்புள் அடிவயிற்று பகுதியை நாபிக்கமலம் என்று சொல்லுவார்கள். நாபிக்கமல பகுதி என்பது எப்போதும் பாரமாக இருக்க கூடாது. இதில் பாரங்கள் நிறைந்து இருக்குமேயானால், வாழ்க்கை நிம்மதியாக இருக்காது என்பது சித்தர்களின் கூற்று. தோஷங்களை நீக்கும் புனிதமான தண்ணீரை அடிவைற்றில் ஊற்றி, லேசாக நீவி விட படும் இந்த முறையானது, நம் நாபிக்கமலத்தில் இருக்கும் பாரத்தை குறைகின்றது. இதன் மூலம் உங்களுக்கு இருக்கும் தோஷங்கள் குறைய, பரிகாரங்கள் செய்தால் கூட, அது எளிதாக பலன் அளிக்கும் என்றும் சித்தர்களால் கூறப்பட்டுள்ளது.

siddhargal

நீங்கள் அறுவை சிகிச்சை செய்தவராக இருந்தாலும், வயிற்றில் உபாதைகள் இருப்பவராக இருந்தாலும் இந்த முறையை பின்பற்றி குளிக்க கூடாது. வயிற்றுப் பகுதியில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாதவர்கள் இந்த முறையை பின்பற்றுவது நல்லது. இறை வழிபாடும், பூஜைகளும், புனஸ்காரங்களும் வேண்டாம் என்று சொல்லப்படவில்லை. இந்த முறையில் குளித்தால், நாம் செய்யும் பரிகாரமும், இறைவழிபாடும் நல்ல பலனை விரைவாக தரும் என்பதுதான் இதன் அர்த்தம்.

- Advertisement -

அடுத்ததாக சிலருக்கு குளித்து முடித்த பின்பு அந்த தண்ணீரில் வாயைக் கொப்பளிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இந்த பழக்கம் தவறானது என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் உடலை தூய்மை செய்த தண்ணீரை நீங்கள் அவமானப்படுத்தியதாக அர்த்தம் ஆகி விடுமாம். காரண காரியங்கள் இல்லாமல் எதையும் நம் சித்தர்கள் சொல்ல மாட்டார்கள் என்பதை நீங்கள் நம்புவதாக இருந்தால், இனி இந்த தவறை செய்யாமல் இருந்து கொள்ளலாமே.

oil pulling

குளிப்பதற்கு முன்பாகவே உங்களது வாயை சுத்தம் செய்துகொள்ளலாம். இதேபோல் நீங்கள் குளித்து முடித்து விட்டு, மீதம் இருக்கும் தண்ணீரில் அடுத்தவர்கள் குளிப்பது தவறு. உங்களுக்கு இருக்கும் தோஷங்கள் மற்றவர்களையும் தாக்கிவிடும். இதனால் மீதமுள்ள தண்ணீரை கீழே கொட்டி விடுவது தான் நல்ல முறை. சித்தர்களால் சொல்லப்பட்ட இந்தக் குளியல் முறையை இத்தனை நாட்கள் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. தினம்தோறும் இந்த முறையை பயன்படுத்தி குளிப்பது நல்ல பலனை தரும்.

நம்மில் பல பேர் குளித்து முடித்துவிட்டு முதலில் நம் முகத்தைத்தான் துடைப்போம். ஆனால் அப்படி துடைக்கக் கூடாது. முதலில் முதுகுப் பகுதியை தான் துடைப்பது நல்லது என்று நம்முடைய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது முதலில் மூதேவி வெளியே செல்வதா? ஸ்ரீதேவி வெளியே செல்வதா? என்ற ஒரு போட்டி நிலவும். நீங்கள் முதலில் முகத்தை துடைத்து விட்டால் முகத்தில் இருக்கும் ஸ்ரீதேவி வெளியேறிவிடுவாள். முதலில் முதுகை துடைத்துதீர்கள் என்றால், முதுகுப் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் மூதேவியானவள் வெளியே சென்று விடுவாள். இதுதான் அதற்கு அர்த்தம்.

bathing

மூதேவியும் ஸ்ரீ தேவியும் அக்கா-தங்கை தான். நம்முடைய உடம்பில் முதுகுப் பக்கத்தில் குடியிருப்பவள் மூதேவி என்றும், முகத்தில் குடியிருப்பவள் ஸ்ரீதேவி என்றும் நம்முடைய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, இனி நீங்கள் குளித்து முடித்துவிட்டு முதலில், எந்த பகுதியை துடைக்க போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய வீட்டை இந்த 4 பொருட்கள் சேர்த்து, இப்படி துடைத்து சுத்தம் செய்தால் தான், நீங்கள் செய்யும் பூஜைக்கு கூட முழுமையான பலன் கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Dosham in tamil astrology. Dosham neenga pariharam. Dosham in Tamil. Bathing astrology. Dosham tamil.