நாம் தினமும் மூன்று வேளை சாப்பிட்டு, ஒருவேளை மட்டும் குளிப்பதற்கு யார் காரணம் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

bathing-eating-nandhi-siva
- Advertisement -

நாம் அன்றாட வாழ்க்கையில் தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறோம். அதைப் போல் ஒருவேளை மட்டும் குளித்து விடுகிறோம். ஆனால் இது சரியான முறை அல்ல. மனிதர்களுக்கு இறைவன் போதித்தது வேறு. இதை எம்பெருமான் சிவபெருமான் மனிதர்களுக்கு தலைகீழாக கூறியுள்ளார். அதாவது ஒரு மனிதன் மூன்று வேளை தினமும் குளிக்க வேண்டும். ஒருவேளை உணவருந்த வேண்டும். இது தான் சரியான முறை. இது தான் இறைவன் கூறிய முறையும் கூட. ஆனால் இந்த முறை எப்படி மாறியது? அதைப்பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

bathing-eating

மனிதன் தோன்றிய ஆதி காலத்தில், இப்போது சாப்பிடுவது போல் யாரும் சாதம் வடித்து, குழம்பு வைத்து, கூட்டு, பொரியல் எல்லாம் செய்து விதவிதமாக சாப்பிட மாட்டார்கள். அப்போதெல்லாம் வேட்டையாடி உணவை சாப்பிடுவார்கள். அல்லது மரம், செடி, கொடிகளில் இருக்கும் இயற்கை உணவுகளை அப்படியே சாப்பிட்டு உடம்பை வளர்ப்பார்கள். இதனால் அவர்கள் கிடைத்த போதெல்லாம் சாப்பிடும் நிலை ஏற்பட்டது. அப்போது வேலையும் இல்லை, எந்தக் கடனும் இல்லை. சாப்பிடுவதைத் தவிர வேறு வேலையே கிடையாது.

- Advertisement -

இதனை பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் மற்றும் தெய்வங்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். அப்போது எம்பெருமான் ஈசன் நந்தி தேவரை அழைத்து, மனிதர்களிடத்தில் போய், இப்போது நான் சொல்ல இருப்பதை தெளிவாக கூறி விட்டு வா.. என்று கட்டளையிட்டார். அப்படியே ஆகட்டும் இறைவா என்றார் நந்திதேவர்.

Sivan-God

ஈசன் கூறியது இது தான்:
இனி நீங்கள் தினமும் ஒரு நாளைக்கு மூன்று முறை குளிக்க வேண்டும், ஒருமுறை மட்டுமே உணவருந்த வேண்டும். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், போகப்போக உங்களுக்கு அது பழகிவிடும். இது இறைவன் இட்ட கட்டளை. இதை நீங்கள் நிறைவேற்றுவது உங்கள் கடமை. இதனால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப் பெறும் என்றார் ஈசன்.

- Advertisement -

இதனைக் கேட்ட நந்திதேவர் அப்படியே கூறி விடுவதாக சொல்லிவிட்டு, அங்கிருந்து பூலோகத்திற்கு புறப்பட்டார். ஈசன் இந்த செய்தியை கூறும் பொழுது நந்தி தேவர் எந்த மனநிலையில் இருந்தார் என்பது ரகசியமாகவே இருக்கிறது. ஏனென்றால் அவர் மனிதர்களிடம் சென்று, அப்படியே தலைகீழாக கூறிவிட்டார். இதனால் மனிதர்களிடத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் சொல்லில் அடங்காதவை.

Nanthi

பூலோகம் வந்தடைந்த நந்திதேவர் மனிதர்களிடத்தில் கூறியது:
மானிடரே, இனி நீங்கள் தினமும் ஒரு நாளைக்கு மூன்று முறை உணவருந்த வேண்டும், ஒருமுறை மட்டுமே குளிக்க வேண்டும். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், போகப் போக உங்களுக்கு அது பழகிவிடும். இது நமது இறைவன் இட்ட கட்டளை. இதை நீங்கள் நிறைவேற்றுவது உங்கள் கடமை. இதனால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப்பெறும் என்று எம்பெருமான் உங்களிடம் கூறும் படி, என்னை பணித்தார் என்று கூறினார்.

- Advertisement -

eating-food

இதனால் தான் இன்று வரை மனிதர்களாகிய நாம் நந்தி கூறியது போல் இப்படியே கடைபிடித்து வருகிறோம். இது எந்த அளவிற்கு சரியாக இருக்கிறது? என்பது யோசித்துப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம். ஒருவேலை ஈசன் கட்டளையிட்டபடி, நாம் ஒரு வேளை சாப்பிட்டு, மூன்று வேளை குளிப்பது வழக்கமாக கொண்டிருந்தால், இப்போது நிலைமையே வேறாக இருந்திருக்கும் அல்லவா? எனில் நாம் இப்போது எப்படி இருந்திருப்போம்? 3 வேளை குளித்தால் தண்ணீர் பஞ்சம் சீக்கிரமே வந்திருக்கும், 1 வேளை சாப்பிட்டால் கஷ்டங்கள் குறைந்திருக்கும், ஆரோக்கியம் நன்றாக இருந்திருக்கும். மேலும் இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறலாம்.

bathing

நந்தி தேவர் செய்த இந்த தவறினால், ஈசனுக்கு கோபம் வந்து விட்டது. நீ செய்த இந்த குழப்பத்தினால், மனிதர்களுக்கு மாடாக உழைத்து, வண்டி இழுத்து அவர்களுக்கு சேவகம் செய் என்று சாபம் கொடுத்து விட்டார். அதனால் தான் நந்திதேவர் காளையாக பூலோகத்தில் இன்று வரை மனிதர்களுக்கு உழைத்து சேவகம் செய்து வருகிறது. சொல்வதை சரியாக சொல்ல வேண்டும். ஒரு விஷயத்தை தலைகீழாக கூறுவதால் நேரும் விளைவுகளை இதைவிட சரியான உதாரணம் யாராலும் தந்துவிட முடியாது என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
பெண்கள் செய்யும் இந்த செயல்கள் குடும்பத்திற்கு தரித்திரத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -