அழுக்கு படிந்த பாத்ரூமை இப்படியும் கூட சுலபமாக சுத்தம் செய்யலாமா? இதற்கு ஒரு நியூஸ் பேப்பர் இருந்தால் போதும்.

bathroom
- Advertisement -

கறை படிந்த பாத்ரூம் டைல்சை சுத்தம் செய்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. நிறைய கிளீனிங் சொல்யூஷனை முயற்சி செய்து பார்த்திருப்போம். கறை படிந்த இடத்தில் கிளீனிங் சொல்யூஷனை ஊற்றி ஊற வைத்து அதன் பின்பு ஸ்கிரப்பரை போட்டு என்னதான் தேய்த்தாலும் கறை நீங்காது. நீங்கள் உங்கள் வீட்டு பாத்ரூமில் எந்த பொருட்களை எல்லாம் வைத்து சுத்தம் செய்வீர்களோ அதே பொருட்களை வைத்து சுத்தம் செய்யுங்கள். ஆனால் அதில் ஒரு சிம்பிள் ஐடியாவை சேர்க்க போகின்றோம். அவ்வளவு தான். வழக்கம் போல கைவலிக்க தேய்க்காமல் சுலபமாக கறைகளை சுத்தம் செய்ய இந்த ஐடியா எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.

முதலில் இந்த குறிப்புக்கு பாத்ரூமை சுத்தம் செய்ய ஒரு லிக்விடை நாம் தயார் செய்ய வேண்டும். ஒரு சிறிய கப்பில் வினிகர் – 1/4 கப், பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன், கல் உப்பு – 1 டேபிள் ஸ்பூன், ஹேர் பிக் – 2 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதில் 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி கலந்து சொல்யூஷன் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த லிக்விடை தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

- Advertisement -

இதற்கு பதில் துணி துவைக்கும் சோப்பு, லைசால் அல்லது பாத்ரூம் கழுவக்கூடிய வேறு ஏதாவது லிக்விடை கூட தண்ணீரில் ஊற்றி கறை நீக்க ஒரு சொல்யூஷனை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய விருப்பம் தான். இப்படி நாம் தயார் செய்த இந்த லிக்விடை பாத்ரூம் டயல்ஸில் ஸ்பிரே செய்து விட்டால் கூட, அந்த லிக்விட் சுவற்றை விட்டு கீழே வடிந்து விடுகிறது. அப்படி இல்லை என்றால் காற்றில் காய்ந்து விடும். லிக்விட் கறைகளில் நன்றாக ஊறிப் பிடிக்க வாய்ப்பே இருப்பதில்லை.

இதற்கு தான் ஒரு சின்ன ஐடியா. தயார் செய்து வைத்திருக்கும் இந்த லிக்விடில் பேப்பரை நனைத்து கொள்ளுங்கள். ஏதாவது ஒரு பேப்பரை இதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பேப்பரை தண்ணீரில் நனைத்தால் கிழிந்து விடும் என்ற பயம் வேண்டாம். தண்ணீரில் ஊற வைக்காமல், நாம் தயார் செய்து வைத்திருக்கும் சொல்யூஷனில் பேப்பரை போட்டு உடனடியாக எடுத்து அந்த பேப்பரை அப்படியே கறையுள்ள டயல்ஸில் ஒட்டி விடுங்கள். கொஞ்சம் பெரிய பேப்பராக எடுத்து பயன்படுத்தலாம். சிறிய பேப்பர் தான் இருக்கிறது என்றால் நான்கு ஐந்து பேப்பரை எடுத்து கிளீனிங் சொல்யூஷனில் நனைத்து பாத்ரூம் டைல்ஸ்சில் அப்படியே ஒட்டி பத்து நிமிடங்கள் விட்டு விடுங்கள்.

- Advertisement -

பேப்பரில் இருக்கும் டிடர்ஜென்ட் தண்ணீர் நன்றாக சுவரில் உள்ள கறையில் மீது செயல்பட்டு ஊறிவிடும். பத்து நிமிடங்கள் கழித்து பேப்பரை எடுத்து விட்டு ஒரு ஸ்டீல் ஸ்க்ரப்பரில் டயல்ஸை லேசாக தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். ஏற்கனவே நீங்கள் தயார் செய்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா கிளீனிங் சொல்யூஷன் அந்த தண்ணீரை தொட்டு தொட்டு டயல்ஸை லேசாக தேய்த்துக் கொடுத்தாலே டைல்ஸில் இருக்கும் அத்தனை கறையும் சுலபமாக நீங்கி வந்துவிடும்.

பாத்ரூம் கறைகளை சுத்தம் செய்ய கை வலிக்காமல் இருக்க இது ஒரு ஸ்மார்ட் டிப்ஸ் என்று கூட வைத்துக் கொள்ளலாம். பெரிய நியூஸ் பேப்பரை கூட இந்த குறிப்புக்கு நீங்கள் பயன்படுத்தலாம். அகலமான டப்பில் சொல்யூஷனை ஊற்றிவிட்டு, அதில் நியூஸ் பேப்பரை நினைத்து சுவற்றில் ஒட்டிக் கொள்ளுங்கள். தரையில் உள்ள கறைகளைப் போக்குவதற்கு கூட இதே போல குறிப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பாத்ரூம் தரையில் நியூஸ் பேப்பரை வைத்துவிட்டு அதன் மேலே கிளீனிங் சொல்யூஷனை தெளிக்க விட்டு, 15 நிமிடங்கள் ஊறவைத்து விட்டு நியூஸ் பேப்பரை எடுத்துவிட்டு அதன் பின்பு தரையை சுத்தம் செய்து பாருங்கள்.

ஆனால் இந்த குறிப்பை பயன்படுத்தும் போது சுவற்றில் உள்ள டயல்சிலோ தரையிலோ ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -