கை படாமல் உங்கள் வீட்டு பாத்ரூமில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்ய இது ஒரு சூப்பர் டிப்ஸ். இல்லத்தரசிகள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

toilet-soap-bar
- Advertisement -

பாத்ரூமை கழுவுவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகின்றோம். லிக்வீடுகளை ஊற்றி பிரஷ் போட்டு தேய்த்து தேய்த்து கழுவினாலும் அதை அவ்வளவு சுலபமாக சுத்தம் செய்யவே முடியாது. வாரத்தில் இரண்டு நாட்கள் பெரிய போராட்டமே நடக்கும் இல்லத்தரசிகளுக்கு. ஆனால் பின் சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றி பார்த்தால் உங்களுடைய கஷ்டத்தில் கொஞ்சமாவது நிச்சயம் குறையும். அந்த அளவிற்கு ஒரு குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதேசமயம் மாச பட்ஜெட்டில் ஒரு செலவும் குறையும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பாத்ரூமில் சுத்தம் செய்ய இன்றைக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் சர்ஃப் எக்செல் சோப். துணிக்கு பயன்படுத்தக் கூடிய சர்ஃப் எக்ஸெல் (surf Excel) சோப்பை வாங்கி கொஞ்சம் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட இந்த சோப்பை தான் பயன்படுத்த வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. உங்களுடைய வீட்டில் துணி துவைக்க பயன்படுத்தும் வேறு எந்த சோப்பை வேண்டும் என்றாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த சோப்பை பயன்படுத்தும் போது அழுக்கு சுத்தமாவதில் நிச்சயம் நல்ல வித்தியாசம் தெரியும். (பாத்ரூம் கழுவுவதற்கும் டாய்லெட் கழுவுவதற்கும் ஒரு பாட்டில் லிக்விடை கடையிலிருந்து காசு கொடுத்து வாங்கினால் 100 ரூபாய்க்கு மேல் செலவு ஆகும். ஆனால் இதற்கு அவ்வளவு செலவு ஆகாது.)

- Advertisement -

துருவிய இந்த சோப்பை ஒரு பிளாஸ்டிக் கப்பல் போட்டுக் கொள்ளுங்கள். இதோடு 1 கைப்பிடி அளவு கல் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் லைசால் அல்லது ஹேர் பிக், ஒரு பெரிய எலுமிச்சம்பழத்தின் சாறு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு 1/4 கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து கரைத்து விடுங்கள். இதை அப்படியே காலியான ஒரு பிளாஸ்டிக் வாட்டர் கேனில் ஊற்றி, மூடி போட்டுக் கொள்ளுங்கள். வாட்டர் கேன் மூடியில் சின்ன சின்ன ஓட்டை போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த தண்ணீரை குளியலறை, கழிவறை எல்லா இடங்களிலும் அப்படியே ஸ்ப்ரே செய்து விட்டு விடுங்கள். 10 லிருந்து 15 நிமிடங்கள் இந்த தண்ணீரில் உங்களுடைய பாத்ரூம் நன்றாக ஊரட்டும். ஊறி இருக்கும் போதே அங்கு படிந்திருக்கும் அழுக்கு கறைகள் மொத்தமாக நீங்கி வருவதை பார்க்கலாம். அதன் பின்பு லேசாக தண்ணீரை ஊற்றி விட்டாலே அழுக்கு நீங்கிவிடும். நமக்கு மனசு நிச்சயம் அடையாது. ஒரு தொடப்பத்தை போட்டு லேசாக தேய்த்து கழுவி விடுங்கள். மொத்த அழுக்கும் காணாமல் போய்விடும்.

- Advertisement -

பாத்ரூமில் இருக்கும் அழுக்கை மட்டும் தான் இந்த லிக்விடை கொண்டு நீக்க முடியும். நீண்ட நாட்களாக படிந்திருக்கும் உப்பு கறை நிச்சயமாக நீங்காது. உப்பு கறை படிந்திருந்தால் அதற்கு நீங்கள் உப்பு காகிதத்தை வாங்கி தான், உப்பு கறை படிந்திருக்கும் இடத்தை தேய்க்க வேண்டும். ஈரமாக இருக்கும் போது உப்பு காகிதத்தை கொண்டு டயல்ஸில் செய்தால் காகிதம் கிழிந்து போகும். உப்பு தண்ணீர் கறை நீங்காது. பாத்ரூம் நன்றாக காய்ந்திருக்கும் போது உப்பு காகிதத்தை வாங்கி அந்த கறையின் மீது தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாக உப்பு கறையும் சுத்தமாக நீங்கிவிடும்.

லிட்டர் லிட்டராக ஹேர் பிக்கை ஊற்றி கழுவிய பாத்ரூம் கூட சுத்தமாகாது. ஆனால் இந்த லிக்விடை ஊற்றி ஊற வைத்து பிறகு பாத்ரூமை சுத்தம் செய்து பாருங்கள். பளிச்சென்று உங்க பாத்ரூம் மாறிடும். கையும் வலிக்காது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. வித்தியாசத்தை உணர்வீர்கள். பிடிச்சிருந்தா இதையே பாத்ரூம் கழுவ கண்டினியூ பண்ணுங்க.

- Advertisement -