அட உங்க பாத்ரூம் கதவுக்கு பின்னால் இவ்வளவு உப்பு கரை படிந்து இருக்கிறதா? அப்பொழுது உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ் அவசியம் தேவைப்படும்

bathroom
- Advertisement -

வீட்டு வேலைகளிலேயே மிகவும் பெரிய வேலையும் கஷ்டமான வேலையும் எதுவென்றால் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது தான். அதிலும் சமையலறை, பாத்ரூம் மற்றும் தண்ணீர் உபயோகப்படுத்தும் அனைத்து பகுதியிலும் இருக்கும் விடாப்பிடியான கரைகளை அகற்றுவதென்பது மிகவும் கடினமான வேலையாக இருக்கும். ஆனால் அதனையும் முயற்சி செய்தால் சற்று எளிமையான முறையில் ஈசியாக சுத்தம் செய்துவிடலாம். அவ்வாறு பலரது வீட்டிலும் பாத்ரூம் கதவுக்கு பின்னால் படிந்திருக்கும் விடாப்பிடியான உப்பு கரையை எவ்வாறு சுத்தம் செய்வது என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bath-room-cleaner1

பலரது வீட்டிலும் பாத்ரூம் கதவுக்கு பின்னாலும் உப்பு கரை படிந்திருக்கும். குளிக்கும் பொழுது சோப்பு நுரைகள் கதவின் மீது விழுவதாலும், ஷவரில் இருந்து வரும் தண்ணீர் நேரடியாக கதவின் மீது படுவதாலும் கதவின் பின்புறத்தின் கீழ்பகுதியில் மட்டும் மிகவும் அதிகமான உப்பு கறைகள் படிந்திருக்கும். இவற்றை லேசாக தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவினால் அந்த நேரத்திற்கு சற்று சுத்தமானது போல் தோற்றமளிக்கும். ஆனால் விடாப்பிடியான கரைகள் அப்படியே ஒட்டிக்கொண்டு தான் இருக்குமே தவிர முழுமையாக சுத்தமாகிவிடாது.

- Advertisement -

இதனாலேயே வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகள் நம் வீட்டு பாத்ரூமை பயன்படுத்த போகிறார்கள் என்றால் நமக்கு சற்று அசௌகரியமாக இருக்கும். இவர்கள் பாத்ரூமிற்கு சென்று பாத்ரூம் கதவுக்கு பின்னால் இருக்கும் கரையை பார்த்துவிட்டார்கள் என்றால் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் தோன்றி விடும்.
இப்படியெல்லாம் யோசிக்கும் அளவிற்கு இந்த பிரச்சினை ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது. இங்கு கூறப்பட்டுள்ள இந்த டிப்ஸை பயன்படுத்தி நீங்களும் உங்கள் வீட்டு பாத்ரூம் கதவை சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.

bathroom-shower

இவ்வளவு விடாப்பிடியான கரையை எளிதில் சுத்தம் செய்ய ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் துணி துவைக்க பயன்படுத்தும் டிடர்ஜென்ட் பவுடர் இரண்டு ஸ்பூன், ஆப்ப சோடா மாவு ஒரு ஸ்பூன், எலுமிச்சை பழத்தின் சாறு இரண்டு ஸ்பூன், சமையலுக்கு பயன்படுத்தும் வினிகர் சிறிதளவு, பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்ட் 2 ஸ்பூன் மற்றும் இவற்றுடன் இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்தக் கலவையை ஒரு ஸ்கரப்பர் பயன்படுத்தி லேசாக தொட்டு கதவின் மீது எங்கு விடாப்பிடியான கரைகள் அதிகமாக இருக்கிறதோ அந்த பகுதி முழுவதும் லேசாக தடவி விட வேண்டும். பிறகு ஒரு பத்து நிமிடம் அவற்றை அப்படியே ஊற வைக்க வேண்டும்.

-clean

நன்றாக ஊறிய பின்னர் மிகவும் விடாப்பிடியான கறையாக இருந்தால் அவற்றை தேய்த்து சுத்தப் படுத்துவதற்காக ஒரு இரும்புத் ஸ்கரப்பரை எடுத்துக் கொண்டு அதனை வைத்து கதவு முழுவதும் வலது பக்கமும் இடது பக்கமுமாக வட்டவடிவில் மாறி மாறி தேய்க்க வேண்டும். இவ்வாறு ஒரு ஐந்து நிமிடம் சற்று அழுத்தம் கொடுத்து தேய்த்த பின்னர் தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவ வேண்டும்.

door-cleaning

இப்பொழுது பார்த்தோமென்றால் கதவின் பின்புறம் முழுவதுமாக உப்புகரைகள் சுத்தமாகி புதிய கதவு போன்று மாறி இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தாலே போதும். உங்கள் கதவு அழுக்கு படிந்து இருக்காமல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

- Advertisement -