பாத்ரூம் கதவில் படிந்திருக்கும் உப்பு கரையை சுலபமாக நீக்க, இதை விட ஈஸியா ஒரு டிப்ஸ் இருக்கவே முடியாது.

door-cleaning
- Advertisement -

எல்லார் வீட்டு பாத்ரூம் கதவுக்கு பின்பக்கமும், குறிப்பாக கதவுக்கு கீழ் பக்கம் வெள்ளைத் திட்டுக்கள் படிந்திருக்கும். அதை என்னதான் தேய்த்து சுத்தம் செய்தாலும் அந்த கரையை நீக்குவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. உங்க வீட்ல பாத்ரூம் கதவு இப்படி அழுக்கா இருந்தா, ஒரு முறை இந்த சின்ன டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும். கஷ்டப்பட வேண்டாம். காசு கொடுத்து நிறைய பொருட்களை வாங்க வேண்டாம். வினிகர் பேக்கிங் சோடா எதுவுமே வேண்டாம். சரி சஸ்பென்ஸ் வைக்காம குறிப்பை பார்த்து விடலாம்.

கதவில் இருக்கும் உப்பு பூத்த இந்த கரையை நீக்க உங்கள் வீட்டில் இருக்கும் விம் ஜெல் போதும். பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் விம் ஜெல் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜெல்லை கரை உள்ள இடங்களில் எல்லாம் பூசி விடவேண்டும். முக்கியமான விஷயம் இந்த ஜெல்லை கதவின் மேல் தடவி விடும் போது, கதவில் சுத்தமாக ஈரம் இருக்கக் கூடாது. நன்றாக காய்ந்து இருக்க வேண்டும். ஒருவேளை கதவு ஈரமாக இருந்தால் ஒரு காட்டன் துணியை வைத்து துடைத்துவிட்டு, அதன் பின்பு விம் ஜெல் அப்ளை பண்ணி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். நன்றாக ஊறட்டும்.

- Advertisement -

அதன் பின்பு ஒரு ஸ்டீல் நாரைக் கொண்டு கரை படிந்த இடத்தை நன்றாக தேய்க்க வேண்டும். ஸ்டீல் நாரை ஒருமுறை லேசாக தண்ணீரில் நனைத்துக் கொண்டு, கொஞ்சம் அழுத்தம் கொடுத்து தேய்த்தால், கதவில் இருக்கும் கரை எல்லாம் நீங்கிவிடும். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி சுத்தமாக கழுவி விடுங்கள். கழுவிய தோடு மட்டுமில்லாமல் ஒரு காட்டன் துணியை வைத்து கதவை சுத்தமாக துடைத்து விடுங்கள்.

இப்படி துடைக்கும்போது மிச்சம் மீதி ஒட்டியிருக்கும் கரையும் நமக்கு சுத்தமாக நீங்கி விடும். அதன் பின்பு கொஞ்சமாக தேங்காய் எண்ணெயை ஸ்பாஞ்சில் தொட்டு கதவில் தடவி விட்டு விடுங்கள். இப்படி செய்தால் மீண்டும் கதவு வெள்ளை நிறத்திற்கு மாறாமல் இருக்கும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் கதவில் தேங்காய் எண்ணெய் இருப்பதால், நீங்கள் குளிக்கும் போது தண்ணீர் சிதறினாலும் அது கதவில் ஒட்டாது. கதவு சில நாட்களுக்கு கரைபிடிக்காமல் புத்தம் புதுசு போலவே இருக்கும்.

ஓரளவுக்கு மீடியமாக கரை படிந்திருந்தால் இந்த டிப்ஸ் நிச்சயம் ஒர்க்அவுட் ஆகும். ஒருவேளை வருடக்கணக்கில் உங்களுடைய பாத்ரூம் கதவை கழுவாமல் வைத்திருந்தால், வாரத்தில் ஒருமுறை இப்படி கழுவிக்கொண்டு வாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உப்பு கரை குறைய தொடங்கும். சில நாட்களிலேயே உப்பு கரை காணாமல் போய்விடும்.

- Advertisement -