பாத்ரூமை சுத்தம் செய்ய எளிய வீட்டு குறிப்பு

bathroom
- Advertisement -

இல்லத்தரசிகளுக்கு இந்த பாத்ரூமையும் டாய்லெட்டையும் சுத்தம் செய்வது பெரிய வேலை. கை வலிக்க வலிக்க தேய்த்து கழுவினாலும் மிஞ்சி இருப்பது உப்பு கறை. பாத்ரூமை சுத்தம் செய்த பிறகு பார்த்தாலும், சுத்தம் செய்யாதது போலத்தான் இருக்கும். உங்க வீட்டு பாத்ரூமில் அழுக்கும் உப்பு கறைகளும் அதிகமாக இருக்கிறதா. இதோ சுலபமான வீட்டு குறிப்பு உங்களுக்காக.

பாத்ரூமில் சுத்தம் செய்ய டிப்ஸ்

உங்கள் பாத்ரூமை சுத்தம் செய்வதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் பார்த்து விடுவோம். துருவிய துணி சோப் 5 டேபிள் ஸ்பூன், ஆப்ப சோடா 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு 2 டேபிள் ஸ்பூன், பாத்திரம் தேய்க்கும் லிக்விட் 2 ஸ்பூன், கல் உப்பு 2 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்கள் எல்லாம் தேவை.

- Advertisement -

துணி துவைக்கும் சோப்பை நன்றாக நசுக்கி தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் ஒரு கிரேட்டரில் துருவியும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு பெரிய எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் இந்த பொருட்களை எல்லாம் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி கரைக்க வேண்டும். 200 ml அளவு தண்ணீர் ஊற்றுங்கள்.

கூடுதலாக லிக்விட் தேவை என்றால் மேலே சொன்ன பொருட்களை எல்லாம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு வாட்டர் கேனில் ஊற்றிக் கொள்ளவும். வாட்டர் கேன் மேலே இருக்கும் மூடியில் சின்ன சின்ன ஓட்டைகளை போட்டால், ஸ்பிரே பாட்டில் போல அதை பயன்படுத்தலாம்.

- Advertisement -

காய்ந்து இருக்கும் உங்களுடைய பாத்ரூமில் இந்த தயார் செய்து இருக்கும் லிக்விடை ஸ்பிரே செய்து விடுங்கள். 20 நிமிடம் கறைகள் எல்லாம் இந்த தண்ணீரில் நன்றாக ஊறிய பிறகு, ஒரு பிரஷை வைத்து கறைகளை லேசாக தேய்த்துக் கொடுத்தாலே போதும். உங்களுடைய பாத்ரூம் சீக்கிரமாகவே சுத்தமாகிவிடும்.

இப்போது எல்லாம் பாத்ரூமை தேய்த்து சுத்தம் செய்வதற்கு கைப்பிடி வைத்த படியே பிரஷ் கடைகளில் கிடைக்கின்றது. அதை வாங்கி பயன்படுத்துங்கள். இல்லை ஸ்டீல் நாரை கொண்டு தேய்க்க போகிறீர்கள் என்றால், உங்களுடைய கையில் ஒரு கிளவுஸ் போட்டுக் கொண்டு தேய்த்து பாத்ரூமில் சுத்தம் செய்து கழுவி விட்டால் போதும்.

- Advertisement -

உங்களுடைய பாத்ரூமில் இருக்கும் ஒட்டுமொத்த அழுக்கும் நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. பாத்ரூம் கதவுக்கு பின்னால் அதிகமாக உப்பு கறை இருந்தால் அந்த கதவின் மேலும் இந்த லிக்விடை ஊற்றி ஊற வைத்து தேய்த்து விடுங்கள் சுலபமாக சுத்தம் ஆகிவிடும். 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த முறையில் பாத்ரூமில் கழுவி வந்தால் பாத்ரூம் எப்போதும் சுத்தமாக இருக்கும்.

அதற்காக தினமும் பாத்ரூமில் கழுவாமல் விடக்கூடாது. சாதாரணமாக துணி துவைக்கும் பவுடரை போட்டு லேசாக கழுவி சுத்தம் செய்து கொண்டே இருங்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை இப்படி டீப் கிளீனிங் செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மிக்ஸியை எளிமையாக சுத்தம் செய்யும் முறை

இல்லத்தரசிகளுக்கு சொல்லப்பட்டிருக்கும் இந்த வீட்டு குறிப்பு நிச்சயம் பயனுள்ள படி அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதிகமாக செலவு செய்து பாத்ரூம் சுத்தம் செய்ய நீங்கள் ஏதாவது லிக்விட் வாங்குறீங்கன்னா, குறைந்த செலவில் இதை பயன்படுத்தி பாருங்க நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -