பல வருட டைல்ஸ் கறை கூட கைவலிக்க தேய்க்காமல் பத்து நிமிஷத்தில் மறைந்து பளிச்சின்னு மாற இது இருந்தாலே போதும். இப்படி செஞ்சா டைல்ஸில் மறுபடி உப்புக்கறை படியவே படியாது.

tiles clean neilpolish
- Advertisement -

வீட்டில் நாம் பல இடங்களில் டயல்ஸை பயன்படுத்தி வந்தாலும் இந்த கிச்சனின் சிங்க அருகே இருக்கும் டைல்ஸும் பாத்ரூமில் இருக்கும் டைல்ஸும் எப்போதும் கறையாகவே இருக்கும். இதற்குக் காரணம் உப்பு தண்ணீர் மட்டுமே. இந்த உப்பு கறையை எளிதில் போக்குவதற்கு ஒரு சூப்பரான டிப்ஸை இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். அதோடு டைல்ஸில் மறுபடியும் உப்பு கறை படியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

டைல்ஸில் படிந்திருக்கும் உப்பு கறை போக
இந்த உப்பு கறையை போக்க முதலில் ஒரு பவுலில் சிறிதளவு கல் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் வீட்டில் படிந்துள்ள கறைகளின் அளவை பொறுத்து கூட, குறைய எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை முழுவதுமாக பிழிந்து விடுங்கள். அதன் பிறகு துணி துவைக்க பயன்படுத்தும் சோப்புத் தூள் ஒரு ஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இத்துடன் துணிகளை வெளுக்க பயன்படுத்தும் சோடா உப்பை கால் ஸ்பூன் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இவையெல்லாம் சேர்த்த பிறகு இதை கலக்குவதற்கு வினிகர் இருந்தால் ஊற்றிக் கொள்ளுங்கள். அது இல்லாத பட்சத்தில் தண்ணீர் மட்டும் ஊற்றி நல்ல ஒரு பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். இப்போது இந்த பேஸ்ட்டை உப்புக்கறை படிந்திருக்கும் டைல்ஸில் எல்லாம் கொஞ்சமாக எடுத்து தேய்த்து விடுங்கள்.

இது ஒரு பத்து நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். அதன் பிறகு பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் இரும்பு நாரை கொண்டு லேசாக தேய்த்தாலே போதும் பல வருடம் பிடித்திருந்த விடாப்பிடியான கறைகள் கூட உடனடியாக நீங்கி விடும். இதே முறையில் பாத்ரூம் டைல்ஸில் படிந்திருக்கும் உப்பு கறையை கூட நீக்கி விடலாம்.

- Advertisement -

இதையெல்லாம் செய்து டைல்ஸ் நன்றாக காய்ந்த பிறகு ஒரு காட்டன் துணியில் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அந்தத் துணியை வைத்து டைல்ஸில் தண்ணீர் படும் இடங்களில் எல்லாம் ஒரு முறை நன்றாக துடைத்து விட்டால் உப்புத் தண்ணீர் மறுபடியும் டைல்ஸில் பட்டு கறை படியாது. இது போல தேங்காய் எண்ணெய் தொட்டு டைல்ஸை வாரத்திற்கு ஒரு முறை மட்டும் துடைத்து விடுங்கள் போதும்.

அதே போல் எல்லோர் வீட்டிலும் விதவிதமான நெயில் பாலிஷ்களை வாங்கி அடுக்கி வைத்து விடுவோம். அது வாங்கிய சிறிது நாட்களுக்குள்ளே கெட்டிப்பட்டு பயன்படுத்த முடியாமல் வீணாகி விடும். இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பின் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது அந்த கொதிக்கும் நீரில் கெட்டியான நெயில் பாலிஷை சிறிது நேரம் போட்டு எடுத்து விட்டால் போதும். நெயில் பாலிஷ் நன்றாக இளகி கைகளில் வைக்க ஏதுவாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: அட! இது தெரியாம இத்தனை நாள் விலை மலிவா கிடைச்ச இந்த பொருளை வாங்காமல் விட்டுட்டோமேன்னு கண்டிப்பா பீல் பண்ணுவீங்க. இது இருந்தா போதும் உங்க பாத்ரூம், சிங்க் எல்லாம் எப்பவுமே பளிச்சுன்னு நறுமணத்துடன் இருக்கும்.

இந்தப் பதிவில் உள்ள குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தோன்றினால் நீங்களும் இந்த குறிப்புகளை உங்கள் வீட்டில் இதை பயன்படுத்தி பலன் அடையலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -