அட! இது தெரியாம இத்தனை நாள் விலை மலிவா கிடைச்ச இந்த பொருளை வாங்காமல் விட்டுட்டோமேன்னு கண்டிப்பா பீல் பண்ணுவீங்க. இது இருந்தா போதும் உங்க பாத்ரூம், சிங்க் எல்லாம் எப்பவுமே பளிச்சுன்னு நறுமணத்துடன் இருக்கும்.

cleaning toilet sink
- Advertisement -

வீட்டில் பாத்ரூம் சிங்க் போன்றவற்றை சுத்தம் செய்ய நாம் இதுவரை நிறைய குறிப்புகளை படித்திருப்போம். அதில் இந்த குறிப்பு கொஞ்சம் வித்தியாசமாக அதுவும் இந்த பொருளை வைத்து பண்ண முடியுமா? என்று யோசிக்கும் படியான ஒரு அருமையான குறிப்பை பற்றி தான் இந்த வீட்டு குறிப்பு பதிவு நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாகவே நாம் ரேஷனில் கிடைக்கும் அனைத்து பொருள்களையும் வாங்குவது கிடையாது. அதிலும் இந்த டீத்தூளை பெரும்பாலானோர் வாங்குவது கிடையாது. ஏனென்றால் அது அதிக நிறத்தை தராது. அது மட்டும் இன்றி அதன் சுவையும் பெரும்பாலோனருக்கு பிடிப்பதில்லை. ஆனால் அந்த டீ தூளை வைத்து நம் வீட்டில் பாத்ரூம் சிங்க் போன்றவற்றையெல்லாம் சுத்தப்படுத்துவது எப்படி என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இதற்கு முதலில் ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் கப் போன்ற ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் சிறிதளவு டீத்தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதன் மேல் கொஞ்சம் கல் உப்பை சேர்த்து விடுங்கள். மறுபடியும் கொஞ்சம் டீத்தூளை சேர்த்து அதன் மேல் கொஞ்சம் கல்லுப்பை சேர்த்து விடுங்கள். இதே போல மூன்று லேயர் டீத்தூளும் மூன்று லேயர் கல் உப்பையும் சேர்த்த பிறகு கடைசியாக அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாறை மேலே ஊற்றி விடுங்கள்.

இப்போது இந்த பாட்டில் அல்லது பீங்கான் மேல் ஒரு டேப்பை அதாவது உள்ளிருக்கும் பொருள் வெளியே தெரிவது போன்ற டேப்பை இறுக்கமாக ஒட்டி விடுங்கள். அதில் குண்டூசி வைத்து சின்ன சின்ன துளைகளை போட்ட பிறகு இந்த கப் அல்லது பீங்கானை உங்கள் டாய்லெட்டில் வைத்து விடுங்கள். டாய்லெட்டில் இருந்து வரும் துர்நாற்றம் அனைத்தையும் இது வராமல் தடுத்து விடும். இனி டாய்லெட் நறுமணத்துடன் இருக்க அதிக விலை கொடுத்து எந்த ஒரு பொருளையும் கடையில் வாங்கவே வேண்டாம்.

- Advertisement -

இப்போது பிழிந்து வைத்த எலுமிச்சை தோலுடன் கொஞ்சமாக டீ தூளை சேர்த்து நம்முடைய சிங்க் எல்லாம் லேசாக தேய்த்து விடுங்கள். அதில் ஒட்டி இருக்கும் விடாப்பிடியான கறை, உப்பு கறை போன்றவை எல்லாம் எளிதில் நீக்கி விடும். இதற்கும் நம் சுத்தம் செய்வதற்கு தனியாக எந்த ஒரு கெமிக்கல் கலந்த லிக்விடையும் பணம் கொடுத்து வாங்க வேண்டியது கிடையாது.

அதே போல் இரவில் உறங்கச் செல்லும் முன் இந்த டாய்லெட்டில் கொஞ்சமாக டீத்தூளை மேலே தூவி விட்டு அப்படியே மூடி வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் பிரஷ் வைத்து லேசாக தேய்த்து விட்டால் போதும். டாய்லெட் எல்லாம் சுத்தமாவதுடன் டாய்லெட்டில் இருந்து வரும் கெட்ட வாடையும் அறவே வராது.

இதையும் படிக்கலாமே: வீடு துடைக்கும் தண்ணீரில் இதை மட்டும் சேர்த்து துடைத்து பாருங்க உங்க தரை பளப்பளன்னு கண்ணாடி போல இருக்கும். ஒரு பைசா செலவில்லாம உங்க தரைய புது வீட்டு தரை போல மாத்திடலாம்.

இந்த டீத்தூளை வைத்து இத்தனை விஷயங்களை செய்ய முடியுமா என்பது நிச்சயம் ஆச்சரியமாக தான் இருக்கும். இனி மேலும் ரேஷன் கடையில் கிடைக்கும் இந்த பொருளை வீணாக்காமல் வாங்கி உங்கள் வீட்டு கிச்சன், பாத்ரூம் என இரண்டையுமே நல்ல நறுமணத்துடனும், பளிச்சென்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -