பதராத காரியம் சிதறாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். ஆனால் சில பேருக்கு பயம் காரணமாக நிறைய பதட்டம் இருக்கும். அந்த பதட்டத்திலேயே சில விஷயங்களை செய்ய துவங்குவார்கள். அவர்கள் செய்யக்கூடிய காரியம் நல்லபடியாக நடந்து முடியும் என்றாலும், அவர்களுடைய பதட்டமே அந்த காரியத்தை சரியாக செய்ய விடாது.
பயத்தில் சரியாக செய்ய வேண்டிய விஷயங்களை கூட, தப்பு தப்பாக செய்து வாழ்க்கையில் தோல்வி அடைவார்கள். வரும் நல்ல வாய்ப்புகளை எல்லாம் நழுவ விட்டு விடுவார்கள். இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால் இந்த துர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்காக மட்டும் தான். குறிப்பாக இதை பெண்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும்.
ஏனென்றால் சில பெண்களுக்கு வாழ்க்கையை நடத்திச் செல்வதில் மிகவும் பதட்டம் இருக்கும். தாங்கள் எடுக்கக்கூடிய முடிவு சரிதானா, தவறுதானா என்று பலமுறை சிந்தித்து, அவர்களுக்கு அவர்களே தண்டனையை கொடுத்துக் கொள்வார்கள். மனம் பதட்டத்தில் இருக்கும் போது எவ்வளவு சிந்தித்து ஒரு முடிவு எடுத்தாலும் அது தவறாகத்தான் இருக்கும்.
நிதானத்தில் எடுக்கக்கூடிய முடிவு தான் நமக்கு நன்மையை செய்யும். அதற்காகத்தான் இந்த வழிபாடு பெண்களுக்காக என்று குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. ஆண்களும் இந்த ஆன்மீகம் வழிபாட்டை செய்யலாம். தவறு ஒன்றும் கிடையாது.
மனபயம் போக்கும் துர்க்கை வழிபாடு
வீட்டில் எப்போதும் போல வெள்ளிக்கிழமை பூஜையை செய்து முடித்து விடுங்கள். ஒரே 1 விரலி மஞ்சள் மட்டும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த துர்க்கை அம்பாளை மனதில் நிறுத்து கொள்ளவும். நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடரில் துர்க்கை அம்மனை ஆவாகனம் செய்யுங்கள். அந்த தீபச்சுடர் தான் துர்க்கை அம்மன் என்று நினைத்து, ‘ஓம் தும் துர்காயை நமஹ’ என்ற இந்த மந்திரத்தை ஆழ் மனதில் 108 முறை சொல்லலாம்.
ஜெபமாலையை கையில் வைத்துக் கொண்டு, இந்த மந்திரத்தை சொல்லலாம், அல்லது கவுண்டிங் மெஷின் இருக்கிறது அதை வாங்கி வைத்து இந்த மந்திரத்தை சொல்லலாம். வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஒரு விரலி மஞ்சள் கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை சொல்லி, அந்த விரலி மஞ்சளுக்கு சக்தி கொடுக்க வேண்டும். நீங்கள் வெளியில் செல்லும்போது, முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது, சில முக்கியமான விஷயங்களை யோசனை செய்யும்போது, இந்த மஞ்சளை கையில் எடுத்துக் கொண்டு ‘துர்க்கை அம்பாளே நான் எடுக்கக்கூடிய முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டும்.
என்னுடைய முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும். தேவையற்ற மன பயமும் குழப்பமும் எனக்கு வரக்கூடாது’ என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அந்த சமயத்தில் உங்களுக்கு மன பதட்டமும் வராது. எந்த ஒரு குழப்பமும் வராது. எடுக்கக்கூடிய முடிவுகளில் நீங்கள் தீர்க்கமாகவும் தெளிவாகவும் இருப்பீர்கள். உங்களுடைய பேச்சிலும் செயலிலும் எந்த குழப்பமும் இருக்காது. அந்த 1 விரலில் மஞ்சள் 3 மாதமோ, 6 மாதமோ அப்படியே இருக்கும்.
அந்த மஞ்சள் கொஞ்சம் பூச்சி பிடிக்க தொடங்கிவிட்டது, ரொம்பவும் பழைய சாகிவிட்டது என்றால் பழைய மஞ்சள் எடுத்து போட்டுவிட்டு புதுமஞ்சளை பூஜை அறையில் வைத்து, வெள்ளிக்கிழமை தோறும் அந்த மஞ்சளை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு துர்க்கை அம்பாளை நினைத்து, துர்க்கை அம்மன் மந்திரத்தை சொல்லி சக்தியூட்டி வைத்துக்கொள்ள வேண்டும். (ஒரே ஒரு விரலி மஞ்சள் தான் துர்க்கை அம்மன் பாதத்தில், ஒரு சின்ன கிண்ணத்தில் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அந்த மஞ்சளை உள்ளங்கையில் வைத்து மந்திரத்தை சொல்லி மீண்டும் அந்த மஞ்சளை எடுத்து அம்பாள் பாதத்தில் வைத்து விட வேண்டும்).
இதையும் படிக்கலாமே: கோடீஸ்வர யோகம் தரும் சிவ மந்திரம்
தினமும் இந்த மஞ்சளை கையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான தருணங்கள் வரும்போது, முக்கியமான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது பதட்டமான சமயத்தில் மட்டும் இந்த மஞ்சளை கையில் வைத்துக் கொண்டாலும் போதுமான விஷயம்தான். நம்பிக்கை உள்ளவர்கள் துர்க்கை அம்மன் வழிபாட்டை செய்து பலன் பெறவும்.