மனிதர்களுக்கு பிரச்சனைகள் அதிகமாகும் போது தான், சிந்தனையும் அதிகமாகும். என்ன பரிகாரம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று தேடித்தேடி ஓடுவார்கள். ஆனால் பிரச்சனை வருவதற்கு முன்பே நாம் செய்யக்கூடிய இறை வழிபாடு, நமக்கு மனநிறைவான வாழ்க்கையை கொடுக்கும் என்பது சில பேருக்கு தெரியாது. உங்களுக்கு கஷ்டம் வரும்போது மட்டும் கோவிலுக்கு செல்லாதீர்கள்.
சந்தோஷம் வரும் போதும் கோவிலுக்கு சென்று இறைவனுக்கு நன்றி தெரிவித்து பாருங்கள். உங்களுடைய வாழ்க்கை பிரகாசமாகும். மேலும் மேலும் கஷ்டம் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு உண்டான வழிகள் கிடைக்கும். செல்வ வளத்தில் உயர, பண பிரச்சனை தீர, சீரான பணப்புழக்கத்தை பெற, தேவையான அளவு பணம் சம்பாதிக்க, கடன் சுமையிலிருந்து படிப்படியாக வெளியே வர, வெள்ளிக்கிழமை அன்று சிவன் கோவிலில் அமர்ந்து உச்சரிக்க வேண்டிய ஒரு வரி மந்திரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
சிவனை கும்பிட்டால் பணம் வராது. கஷ்டம் தான் வரும் என்று சிலர் சொல்லுவார்கள். அதையெல்லாம் நம்பாதீர்கள். சிவபெருமான் வழிபாடு உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும். ஏனென்றால் ஐஸ்வர்யேஸ்வரர் தான் குபேரருக்கே பணம் கொடுத்தவர் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திர நூல்கள். இதன் அடிப்படையில் தான் இன்றைய பரிகாரம் உங்களுக்காக சொல்லப்பட்டுள்ளது.
பணம் தரும் சிவன் மந்திரம்
இதற்கு காலை 6:00 மணிக்கு முன்பாகவே சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். முடியாதவர்கள் மாலை 6:00 மணிக்கு மேல் சூரியன் அஸ்தமான மானத்திற்கு பிறகு சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். சிவபெருமானுக்கு உங்கள் கையால் வில்வ இலைகளை வாங்கி அர்ச்சனை செய்ய வேண்டும். சிவன் கோவிலில் இருக்கும் சக்தி தேவிக்கு மல்லிகை பூ வாங்கி கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்.
உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து சிவபெருமானை மூன்று முறை வலம் வந்து, நந்தி தேவரிடமும் சிவபெருமானே வழிபாடு செய்ய சின்ன அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள். சிவன் கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். ஒரு ஓரமாக, அடுத்த பக்தர்களுக்கு சிரமம் கொடுக்காத வகையில் நீங்கள் அமர்ந்து கொண்டு, கண்களை மூடிக்கொண்டு ‘சிவ சிவ வசி வசி கோடீஸ்வர யோகம் தர, வர வர ஸ்வாஹா !’ என்ற இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள். கணக்கு வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
எத்தனை முறை வேண்டுமென்றாலும் இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லலாம். சிவன் கோவிலில் அமர்ந்து ஒரு லட்சம் முறை இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லி முடிக்கும் போது உங்களுடைய பணப் பிரச்சனைகள் அன்றோடு தீரிந்து விடும். ஒரே நாளில் சாதாரண மனிதர்களால் இந்த மந்திரத்தை இலட்சமுறை சொல்ல முடியாது. வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று, ஒரு 20 நிமிடமோ அல்லது 30 நிமிடமோ ஒதுக்கி அந்த சிவன் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.
இதையும் படிக்கலாமே: காரிய தடை நீக்கும் கால பைரவர் மந்திரம்
அந்த கடவுளுக்கே கணக்கு தெரியும். விடாமல் தொடர்ந்து எவர் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று இந்த மந்திரத்தை உச்சரிக்க தொடங்குகிறீர்களோ, அந்த நாளிலிருந்து பலனை நீங்கள் கை மேல் பெற முடியும். நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு மட்டும்தான் பலன் உண்டு என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றோம். உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் நாளை முதல் இந்த பரிகாரத்தை துவங்குங்கள். சிவனின் ஆசியோடு அழகாக வாழ்க்கையை நடத்திச் செல்லலாம்.