வீட்டின் படுக்கை அறை எப்படி இருந்தால் நன்மை – வாஸ்து சாஸ்திரம்

bedroom-vastu

வீடு என்பது கற்களால் கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தை மட்டுமே குறிக்கும். மனிதர்கள் அதில் வாழும் போது மட்டுமே வீடு இல்லம் என அழைக்கப்படுகிறது. நாம் அனைவரும் நமக்கான தனிப்பட்ட தேவைகளுக்கும், வசிப்பதற்கும் வீடு அவசியம் ஆகிறது. வாழும் வீடுகளில் மற்ற அறைகளை போல படுக்கையறை ஒரு முக்கியமான பகுதியாகும். அந்த படுக்கை அறை பற்றிய சில வாஸ்து விதிமுறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

bedroom

மனிதர்களாக பிறந்த அனைவருமே வாழ்க்கைக்கு தேவையான செல்வம் ஈட்ட உழைக்கின்றனர். இப்படி உழைக்கின்ற அனைவருக்குமே உடல் மற்றும் மன ஓய்வு அவசியமாகும். இத்தகைய ஓய்வை மனிதனின் அத்தியவசிய தேவையில் ஒன்றாக இருக்கும் தூக்கம் தருகிறது. தினமும் வீட்டின் ஒரு பகுதியில் உறங்கும் இடம் தான் படுக்கை அறை. இந்த படுக்கை அறை வாஸ்து படி எப்படி அமைத்து கொண்டால் நமக்கு நன்மைகள் ஏற்படும் என இங்கு தெரிந்து கொள்ளலாம். வடமேற்கு திசையில் இருக்கும் படுக்கை அறைகளில் திருமண வயதை அடைந்தும் திருமணம் காலதாமதமாகும் பெண்கள் படுத்து உறங்கலாம்.

ஒரு வீட்டில் கணவன் – மனைவி படுத்து உறங்கும் அறையை, வீட்டின் தென்மேற்குப் பகுதியில் மட்டுமே அமைப்பது நல்லது. வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் தம்பதிகள் உறங்கும் படுக்கையறை கட்டாயம் அமைக்கக் கூடாது. வீட்டின் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வடகிழக்குப் பகுதியில் படுக்கையறை அமைத்து பயந்துபடுத்துவது நல்லது.படுக்கையறையில் கட்டில் மற்றும் மெத்தை, படுக்கையைத் தென்மேற்கு மூலையில் போட்டு படுக்கும் வகையில் அமைத்து கொள்ள வேண்டும்.

bed vastu

ஸ்லாப் எனப்படும் உத்திரங்கள் கீழாக கட்டில், மெத்தை அமைத்து அதில் உறங்க கூடாது. இக்காலத்தில் பலரும் அட்டாச்டு பாத்ரூம் எனப்படும் படுக்கை அறையிலேயே குளியலறை,கழிவறை போன்றவற்றை அமைக்கின்றனர். இப்படி குளியல், கழிவறை கட்ட விரும்பும் நபர்கள் படுக்கை அறையின் வடமேற்கு மூலையில் தான் கழிவறை அமைக்க வேண்டும். எந்த இடத்தில் படுக்கை அறை இருந்தாலும், படுத்து உறங்கும் போது வடக்கு திசையில் கட்டாயம் தலை வைத்து உறங்கக் கூடாது.

இதையும் படிக்கலாமே:
காலி வீட்டு மனை பற்றிய வாஸ்து

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Bedroom vastu in Tamil. It is also called as Padukai arai in Tamil or Bedroom vastu kurippugal in Tamil or Bedroom vastu tips in Tamil or Padukkai arai vastu in Tamil.