காலி வீட்டு மனை வாஸ்து விதிகள்

மனிதர்கள் அனைவருமே வசிப்பதற்கு வீடு தேவைப்படுகிறது. அப்படி வசிக்கும் வீடுகளும் நமது வசதிக்கேற்ப இருக்க வேண்டும் என மக்கள் விரும்புவது நியாயம் தான். நமது நாட்டில் இருக்கும் சூழ்நிலைகளால் பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படி சொந்த வீடு கட்டுவதற்கு காலி மனை வாங்க வேண்டியது அவசியம். வாஸ்து சாஸ்திரத்தின் படி எப்படி பட்ட மனைகளை வாங்குவது சிறந்தது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

புதிதாக வீடு அல்லது இன்ன பிற கட்டிடங்கள் கட்டுவதற்காக காலி மனைகளை நமது பொருளாதார வசதிக்கு ஏற்ற வாறே அமைகிறது. பண வசதி அதிகம் கொண்டவர்கள் எப்படிப்பட்ட காலி மனைகளையும் எந்த விலை கொடுத்தாவது வாங்கி விட முடிகிறது. ஆனால் தங்களின் வாழ்நாள் சேமிப்பு தொகை கொண்டு வீடு கட்ட விரும்பும் நடுத்தர மக்களுக்கு அவர்களின் பொருளாதார சக்திக்கேற்ப கிடைக்கும் காலி மனைகளை வாங்க வேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர். எது எப்படியாயினும் புதிதாக வீடு கட்டுவதற்காக வாங்கும் நில மனைகளை வாங்கும் போது வாஸ்து சாஸ்திர விதிககளை பின்பற்றுவதால் நலம் உண்டாகும். (மேலே உள்ளது சதுர மனையின் உதாரண படம் .)

நான்கு பக்கங்களும் சதுரமாக இருக்கும் வீட்டு மனை முதல் தரமான மனையாகும். இப்படிப்பட்ட மனைகளில் வீடு மற்றும் இன்ன பிற கட்டிடங்களை கட்டி அதில் வசிப்பவர்கள் எல்லாவிதமான நன்மைகளும் பெறுவார்கள். செவ்வக வடிவிலான வீட்டு மனை அவ்வளவு சிறப்பான மனை என்று கூற முடியாவிட்டாலும், பாதகமான பலன்களை தராது என்பது உறுதி. இத்தகைய செவ்வக மனைகளில் கட்டப்படும் வீடுகளில் அரசாங்க ஊழியர்கள், அரசியல்வாதிகள் போன்றோர்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தில் மக்கள் வசிப்பதற்கு சதுரம் மற்றும் செவ்வக வடிவிலான மனைகளே சிறந்தவை என கூறப்பட்டுள்ளது. செவ்வக வடிவத்தின் உதாரண அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீளம் அதிகமாகவும், அகலம் குறைவாகவும் இருக்கும் மனைகள் பாம்பு மனைகள் என அழைக்கப்படுகின்றன. பாம்பு மனைகளில் கட்டப்படும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு திடீர் விபத்துகள், திருடர்கள் தொல்லை, தீரா நோய்கள், வழக்குகள், திடீர் மரணம் போன்றவை ஏற்படும். இத்தகைய பாம்பு மனைகள் அமையப்பெற்று அதில் வீடு கட்டவேண்டிய நிர்பந்தங்களில் இருப்பவர்கள், மனையில் கட்டப்படும் கட்டிடங்களை செவ்வக வடிவமாகவோ அல்லது சதுர வடிவமாகவோ அமைத்து, மனையின் ஒரு பகுதியை காலியாக விட வேண்டும். அல்லது வீட்டின் தரை தளத்தை வாகனங்கள் நிறுத்துமிடமாக அமைத்து, முதல் தலத்தில் குடியிருக்க வீட்டை அமைத்து கொள்வதால் இத்தகைய மனையின் தீய தாக்கங்களை தவிர்க்கலாம்.

இதையும் படிக்கலாமே:
பழைய ஜன்னல், கதவு பற்றிய வாஸ்து குறிப்பு

இது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் குறிப்புகளை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Veetu manai vasthu in Tamil. It is also called Veedu kattum pothu in Tamil or Manai vasthu in Tamil or Veedu vasthu in Tamil or Gali manai vasthu or Veetin vasthu in Tamil.