உங்க வாழ்நாளில் பீட்ரூட் பொரியலை இவ்வளவு சுவையாக எங்கேயுமே சாப்பிட்டு இருக்க முடியாது. ஒரு ஸ்பெஷல் மசாலா அரவை சேர்த்த பீட்ரூட் பொரியல் ரெசிபி.

beetroot-poriyal_tamil
- Advertisement -

பீட்ரூட் பொரியல் என்றாலே ஒரு கிலோ மீட்டர் தூரம் நம் வீட்டில் இருப்பவர்கள் ஓடிவிடுவார்கள். பீட்ரூட் பொரியலா, எனக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் பீட்ரூட் பொரியலையும் சுவையாக சமைக்க முடியும். அதற்கும் ஒரு சில ஐடியாக்கள் உள்ளது. இந்த மசாலாவை அரைத்து போட்டு பீட்ரூட் பொரியல் செய்தால் ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும். பீட்ரூடில் எப்பவும் இருக்கும் அந்த இனிப்பு சுவை தெரியாமல், மிக மிக சுவையாக பீட்ரூட் பொரியலை செய்வதற்கு ஒரு சூப்பரான சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக இந்த பதிவில்.

செய்முறை

இரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு மீடியம் சைஸில் இருக்கும் பீட்ரூட்டை எடுத்து தோல் சீவி கொஞ்சம் பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பீட்ரூட்டை முழுசாக கழுவி விட்டு பிறகு தோல் சீவி நறுக்கவும். நறுக்கிய பிறகு பீட்ரூட்டை தண்ணீரில் போட்டு அலசக்கூடாது.

- Advertisement -

இதற்கு தேவையான ஒரு ஸ்பெஷல் மசாலா அரவையை அரைக்க போகின்றோம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோலுரித்த பூண்டு பல் 4, தோல் உரித்த சின்ன வெங்காயம் 10 பல், வர மிளகாய் 2, இந்த மூன்று பொருட்களையும் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் கொரகொரப்பாக பல்ஸ் மோடில் அரைத்து வைத்துக் கொள்ளவும். உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாயின் அளவை தேவைப்பட்டால் இன்னும் ஒன்று கூட வைத்துக் கொள்ளலாம்.

அரைத்த இந்த விழுது அப்படியே இருக்கட்டும். அடுத்து ஒரு கடாயில் நறுக்கி வைத்திருக்கும் பீட்ரூட்டை போட்டு, பீட்ரூடுக்கு தேவையான அளவு உப்பு, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் தூவி, கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கலந்து விட்டு ஒரு மூடி போட்டு பீட்ரூட்டை பூப்போல வேகவைத்து கொள்ளவும். வேகவைத்த பீட்ரூட்டும் தனியாக இருக்கட்டும். தண்ணீர் சுண்டி பீட்ரூட் பக்குவமாக வெந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு 1/2 ஸ்பூன், தாளித்து கருவேப்பிலை ஒரு கொத்து, போட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை இந்த எண்ணெயில் போட்டு பச்சை வாடை நீங்க வதக்க வேண்டும். சின்ன வெங்காயத்தின் பச்சை வாடை போன பிறகு இந்த மசாலாவுக்கு மட்டும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு, வேக வைத்திருக்கும் பீட்ரூட்டை இதில் கொட்டி நன்றாக கலந்து விடுங்கள். இரண்டு நிமிடம் போல இந்த பீட்ரூட்டும் அந்த மசாலாவும் ஒன்றாக சேரட்டும்.

இதையும் படிக்கலாமே: இட்லி, தோசைக்கு தொட்டுக்க தக்காளி வேண்டாம் வெங்காயமும், வேர்கடலையும் வச்சு அருமையான சட்னி ரெசிபி இப்படியும் செய்யலாமே!

இறுதியாக தேங்காய் துருவலை பூ போல இதன் மேலே தூவி லேசாக சூடு செய்து அடுப்பை அணைத்து விட்டால் மணமணக்கம் பீட்ரூட் பொரியல் தயார். சுலபமாக செய்யக்கூடிய இந்த ரெசிபியில் சத்து ரொம்ப ரொம்ப அதிகம். அது மட்டும் இல்லாமல் இதனுடைய ருசி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்குங்க. மிஸ் பண்ணாம உங்க வீட்ல பீட்ரூட் பொரியலை ரெசிபி இப்படி ஒரு முறை செய்து பார்க்கவும்.

- Advertisement -