இட்லி, தோசைக்கு தொட்டுக்க தக்காளி வேண்டாம் வெங்காயமும், வேர்கடலையும் வச்சு அருமையான சட்னி ரெசிபி இப்படியும் செய்யலாமே!

verkadalai-peanut-chutney_tamil
- Advertisement -

தக்காளி விற்கும் விலைக்கு தக்காளி சட்னி எல்லாம் செய்ய முடியாது என்பவர்கள் வித்தியாசமாக என்னவெல்லாம் செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அசத்தலான சுவையில், அருமையான மணத்தில் வெங்காயம் மற்றும் வேர்க்கடலை வைத்து கெட்டி சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக்க இப்படி கூட செய்யலாம். சுலபமாக செய்யக்கூடிய வெங்காய வேர்கடலை சட்னி நாமும் எப்படி செய்வது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

தேவையான பொருட்கள்

சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – ஆறு, பூண்டு – 15 பல், சின்ன வெங்காயம் – 20 பல், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, வெல்லம் – ஒரு சிறு துண்டு, வறுத்த வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவு, துருவிய தேங்காய் – ஒரு கைப்பிடி அளவு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

வெங்காயம் கொண்டு வேர்க்கடலை சட்னி செய்யும் போது அதன் ருசியை அலாதியானதாக இருக்கும் இதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வேர்க்கடலையை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து ஆரிய பின்பு தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை சேர்த்து லேசாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே எண்ணெயில் பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும். சிவக்க வறுபட்டதும் தோல் உரித்து வைத்துள்ள முழு சின்ன வெங்காயங்களை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

- Advertisement -

வெங்காயம் வதங்கி வரும் பொழுது ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை சேர்த்து அதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையும் போட்டு வதக்குங்கள். கொட்டைப்பாக்கு அளவிற்கு வெல்லத்தை சேர்த்தால் சட்னி ருசியாக இருக்கும். பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு வறுத்த வேர்க்கடலைகளை சேர்த்து வதக்குங்கள். இதே அளவிற்கு ஒரு கைப்பிடி துருவிய தேங்காயையும் சேர்த்து பிரட்டுங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒரு முறை நன்கு கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்த கட்லெட்டை செய்ய அடுப்பே பற்றவைக்க வேண்டாம். முழு ஆரோக்கியமும் கிடைக்க இப்படியும் ரெசிபி இருக்கு தெரிஞ்சுக்கோங்க.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் ஆறிய பொருட்களை சேர்த்து வறுத்து வைத்துள்ள வர மிளகாயையும் போட்டு ரொம்பவும் நைசாக இல்லாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த சட்னிக்கு ஒரு சிறு தாளிப்பு கொடுங்கள். தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கொஞ்சம் கடுகு, கருவேப்பிலை தாளித்து கொட்டுங்கள். அவ்வளவுதான், சூப்பரான வெங்காய வேர்கடலை சட்னி அருமையான ருசியில் ரெடி! நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -