முகத்தை இளமையாக்கும் பீட்ரூட்

beetroot beauty tips
- Advertisement -

தோற்றம் எப்படி இருந்தாலும் முகம் அழகாக இருந்தால் அவர்களை அழகானவர்கள் என்றுதான் கூறுவோம். தோற்றம் எவ்வளவு நாகரிகமாக இருந்தாலும் முகத்தில் ஒருவித அழகோ பொலிவோ இல்லை என்றால் அவர்களை அழகானவர்கள் என்று சொல்ல மாட்டோம் அல்லவா. அதற்காகத்தான் முகத்தை அழகாகவும் இளமையாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். இவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்கு வீட்டில் நாம் சமைத்து உண்ணக்கூடிய பீட்ரூட்டை வைத்து எந்த முறையில் இளமையான தோற்றத்தை பெறலாம் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பீட்ரூட்டில் பல சத்துக்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆன்ட்டிஆக்சைடு அதிகம் இருப்பதால் இதை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொண்டால் நாம் என்றும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க முடியும். அப்படிப்பட்ட பீட்ரூட்டை நம்முடைய முகத்தில் நாம் தடவும் பொழுது அந்த ஆன்ட்டி ஆக்சைடால் நம் முகமும் இளமையாகவே தோற்றமளிக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

பீட்ரூட்டை மட்டும் தடவுவதன் மூலம் நன்மைகள் ஏற்படுமா என்று கேட்டால் அந்த அளவிற்கு இருக்காது. இதனுடன் இன்னும் சில பொருட்களை சேர்க்கும் பொழுது அதன் பலன் மிகவும் அபரிவிதமாக இருக்கும். பீட்ரூட்டை நம்முடைய முகத்தில் நாம் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் அனைத்தும் நீங்கும்.

மேலும் ஓபன் போர்ஸ் என்று சொல்லக்கூடிய சரும துவாரங்களும் மூடி முகம் இறுகி இளமையான தோற்றத்தை பெரும். அதோடு மட்டுமல்லாமல் வெயிலில் சென்று வந்ததால் ஏற்படக்கூடிய கருமையும் நீங்கி பொலிவான முகத்தையும் நம்மால் பெற முடியும். சரி இப்பொழுது பீட்ரூட்டை பயன்படுத்தி எப்படி நம்மை அழகுப்படுத்திக் கொள்ளலாம் என்று பார்ப்போம்.

- Advertisement -

இரவு நேரத்தில் தான் இதை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான பலன் கிடைக்கும். ஒரு சிறிய அளவு பீட்ரூட்டை நறுக்கிக் கொள்ளுங்கள். அதில் ஒரு துண்டை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் இருக்கும் துண்டுகளை ஒரு கிண்ணத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு துண்டை மட்டும் தனியாக எடுத்து வைத்திருந்தோம் அல்லவா? அந்த துண்டை எடுத்து நம்முடைய முகத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு தேய்த்து விட்டு அப்படியே விட்டுவிடுங்கள் முகத்தை கழுவக்கூடாது.

ஒரு வேளை உங்களுடைய முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் இந்த பீட்ரூட்டை வெள்ளை சர்க்கரையில் தொட்டு ஸ்கிரப் செய்வதன் மூலம் இறந்த செல்கள் நீக்கப்படும். அரைமணி நேரம் கழித்து நாம் ஊற வைத்திருந்தோம் அல்லவா பீட்ரூட் அந்த தண்ணீரில் இருந்து இரண்டு ஸ்பூன் தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதனுடன் மூன்று ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த க்ரீன் தயாராகிவிட்டது. இந்த கிரீமை எடுத்து நம்முடைய முகம் கழுத்து பகுதிகளில் நன்றாக தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு படுக்கச் சென்று விடலாம்.

மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் எழுந்து முகத்தை கழுவிக் கொள்ளலாம். தினமும் இந்த முறையில் நாம் செய்து வர நம் முகத்தை நம்மாலே நம்ப முடியாத அளவிற்கு முகம் இளமையாகவும் பிரகாசமாகவும் தோற்றமளிக்கும். இந்த கிரீமை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: முடி உதிர்வதை தடுத்து நிறுத்தும் இலை.

அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை மட்டுமே பயன்படுத்தி நம்முடைய முகத்தின் இளமையும் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -