முடி உதிர்வதை தடுத்து நிறுத்தும் இலை.

murungai hair pack
- Advertisement -

முடி உதிர்தல் என்பது சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனையாக இன்றைய காலத்தில் திகழ்கிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் முதன்மையான காரணமாக திகழ்வது போதுமான சக்தி இல்லாததுதான். முடி பலவீனம் அடைவதால் தான் முடி உதிர்தல் பிரச்சனை என்பதே ஆரம்பிக்கிறது. முடியை வலுப்படுத்துவதற்கு தேவையான விட்டமின்களை நாம் உட்கொள்ளாமல் விடுவதாலும் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் தலைமுடியில் ஏற்படக்கூடிய சில பிரச்சினைகளாலும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படலாம். இவை அனைத்தையும் சரி செய்ய உதவக்கூடிய இலையைப் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

முடி உதிர்தல் பிரச்சனையை தீர்ப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. இயற்கையிலேயே பல பொருட்கள் நம்முடைய இல்லங்களிலேயே இருக்கிறது. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக நாம் பயன்படுத்தும் பொழுது முடி உதிர்தல் பிரச்சினை என்பது நீங்கும். இதில் பொதுவான ஒரு கருத்து என்னவென்றால் இப்படி நாம் வீட்டில் தயாரிக்கக்கூடிய ஹேர் பேக்குகளை பயன்படுத்தினால் சளி பிடிக்கும் என்பதும்தான். சைனஸ் பிரச்சினை இருப்பவர்களால் அதை உபயோகப்படுத்த முடியாது சூழ்நிலையும் உண்டாகும். அனைவராலும் உபயோகப்படுத்தக் கூடிய எளிமையான ஒரு ஹேர்பேக்கை பற்றி நான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

நம்முடைய உணவாக நாம் எடுத்துக் கொள்ளும் பல சத்துக்கள் மிகுந்த மருத்துவ குணம் மிகுந்த பொருட்களை நம்முடைய தலைமுடிக்கு நாம் உபயோகப்படுத்தும் பொழுது அதில் இருக்கக்கூடிய அனைத்து விதமான சத்துக்களும் நம் தலைமுடியில் வந்து சேரும். இப்படி சேரும்பொழுது நம்முடைய தலைமுடி வலுவாகி உதிர்தல் பிரச்சனை என்பது நீங்கும். அதோடு இரத்த ஓட்டமும் அதிகரித்து தலையில் புதிதாக முடிகளும் வளர ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட இலை தான் முருங்கை இலை.

பொதுவாக தினந்தோறும் முருங்கை இலையை நாம் சாப்பிட்டு வந்தோம் என்றால் நம் உடலில் எந்த வித பிரச்சினையும் ஏற்படாது என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. அவ்வளவு மருத்துவ குணம் மிகுந்த முருங்கை இலையை வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற வீதம் நம்முடைய தலைக்கு நாம் தடவுவதால் தலைமுடி உதிர்தல் பிரச்சனை முற்றிலும் நீங்கி புதிய முடிகள் வலுவாக வளர ஆரம்பிக்கும். இந்த முருங்கை இலை ஹேர் பாக் எப்படி போடுவது என்று பார்ப்போம்.

- Advertisement -

முதலில் நம்முடைய தலைமுடிக்கு ஏற்றவாறு முருங்கை இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களாக இருக்கும் பட்சத்தில் இரண்டிலிருந்து மூன்று கைப்பிடி அவர்களின் முடியும் நீளத்திற்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்களாக இருக்கும் பட்சத்தில் ஒரு கைப்பிடி முருங்கை இலை எடுத்துக் கொண்டால் போதும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த இந்த விழுதை வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி சாறை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த சாறுடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு நாம் எப்பொழுதும் தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சாறு வெதுவெதுப்பாக சூடு ஏறும் வரை டபுள் பாய்லிங் மெத்தடில் வைத்துக் கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான பிறகு இதை எடுத்து அப்படியே நம்முடைய தலையின் வேர்க்கால்களில் நன்றாக படும் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு செய்வதன் மூலம் முருங்கைக்கீரையில் இருக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் நம்முடைய தலைமுடிக்கு வந்து சேரும். அதோடு வெதுவெதுப்பாக இருப்பதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஒரு மணி நேரம் இதை அப்படியே விட்டுவிட்டு பிறகு தலைக்கு குளித்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: அழகிற்கு அழகு சேர்க்கும் கஸ்தூரி மஞ்சள்

மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய முருங்கை இலையை வைத்து இப்படி நாம் ஹேர் மாஸ் இப்படி நம்முடைய தலைக்கு தடவுவதன் மூலம் நம்முடைய தலைமுடி என்றென்றைக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.

- Advertisement -