உங்கள் முகம் டல்லா இருக்கா? கருமை நிறம் நீங்கி, உங்கள் முகம் பளிச் பளிச்சுனு பொலிவு பெற இதை செய்யலாம்.

mugam palichida
- Advertisement -

பொதுவாக பெண்கள் தங்கள் முக அழகை மேம்படுத்திக் கொள்வதற்கு சலிப்பதில்லை. சிறு வயது பெண் குழந்தைகள் கூட மேக்கப் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். பெண்களின் முகமானது வறண்ட சருமம், எண்ணெய் படிந்த சருமம் என பிரித்தெடுக்கலாம். வறண்ட சருமம் பொதுவாக உடலில் நீர்ச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. எண்ணெய் படிந்த சருமம் என்பது எண்ணெய் பொருட்களை அதிக அளவில் உட்கொள்வதால் ஏற்படுகிறது. வீட்டில் உள்ள பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் என்று அனைவருமே வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் வீட்டிலேயே செய்து கொள்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் காய்கறிகளைக் கொண்டு சமைப்பதோடு மட்டுமல்லாமல், அதை வீணாக்காமல் தங்கள் அழகையும் மேம்படுத்த பயன்படுத்தி கொள்கின்றனர். வெளியே வெயிலில் சென்று வந்த உடன் கை, கால்கள் மற்றும் முகம் கருமை நிறம் படிந்து காணப்படுகிறது. எனவே முகம் டல்லாகவே இருக்கும். கைகளில் வாட்ச், மோதிரம் அணிந்திருந்த தடத்தையும், மேலும் கால்களில் செருப்பு மற்றும் கொலுசுகளை பயன்படுத்துவதால் ஏற்பட்ட தடத்தையும் சரி செய்வதற்கு மற்றும் வறண்ட சருமம், எண்ணெய் சருமம் என எந்த முகமாக இருந்தாலும் பளிச்! பளிச்! என்று பொலிவு பெற, ஈஸியான டிப்ஸ் என்னவென்று? இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 200 கிராம், துருவிய பீட்ரூட் – 1, தக்காளி பழம் – 1.

முதலில் பச்சரிசியை 200g எடுத்துக் கொண்டு அதை நன்கு சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அது ஊறிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு பீட்ரூட்டை எடுத்து துருவிக் கொள்ளவும். துருவிய பீட்ரூட்டை சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பச்சரிசி ஊறிய பிறகு, மிக்சர் ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

- Advertisement -

இப்பொழுது அந்த பச்சரிசி மாவை ஒரு கடாயில் வைத்து கொதிக்க விடவும். பச்சரிசியானது கெட்டியான பதத்திற்கு வந்து விடும். அந்த சமயத்தில் துருவிய பீட்ரூட்டின் சாற்றை நன்கு கலந்து விடவும். பீட்ரூட்டை சேர்த்தவுடன் நல்ல சிவந்த நிறத்துடன் காணப்படும். அது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன், சிறிய கிண்ணத்தில் ஊற்றி நன்கு ஆற வைத்து ஒரு தக்காளி பழத்தின் சாறை எடுத்து அதில் கலந்து கொள்ளவும்.

நாம் குளிப்பதற்கு ஒரு பத்து நிமிடத்திற்கு முன் இதை உடல் முழுவதும் அப்ளை செய்து பத்து நிமிடம் ஊறிய பிறகு குளித்து விட்டு வரலாம். பச்சரிசி மாவையும், பீட்ரூட் சாறையும் கலந்து ஆற வைத்த பேஸ்டை தனியாக பிரிட்ஜில் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம், இது கெட்டுப் போகாது. தேவைப்படும் பொழுது மட்டும் தக்காளி பழச்சாறை சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம். இது தினமும் செய்தால் நல்ல பலனை கொடுக்கும்.

- Advertisement -