தொப்பையை குறைக்க பட்டினி கிடந்து இனி கஷ்டப்பட வேண்டாம். உடல் எடையை குறைக்க இந்த கசாயத்தை 10 நாள் ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

thoppai
- Advertisement -

கரைக்கவே முடியாத தொப்பையை கஷ்டப்பட்டு, சாப்பிடாமல் கரைக்க முயற்சி செய்து வருகிறீர்களா. அந்த கஷ்டம் இனி உங்களுக்கு தேவையில்லை. வயிற்றுப் பகுதிகளில் இருக்கும், இடுப்புப் பகுதிகளில் இருக்கும் தேவையற்ற சதைகளை குறைக்க இயற்கையான ஒரு கசாய ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தினமும் ஒரு டம்ளர் அளவு இந்த கசாயத்தை குடித்து வந்தாலே போதும். நம்முடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் வெளியேற்றப்பட்டு, தேவையற்ற சதைகள் படிப்படியாக குறையத் தொடங்கும். சரி வாங்க அந்த கசாய ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

kasayam

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் மீடியம் சைஸ் டம்ளரில் 2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவேண்டும். தண்ணீர் கொதி வந்ததும், சுக்குப்பொடி – 1/2 ஸ்பூன், ஓமம் – 1 ஸ்பூன், பட்டை பொடி – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். 8 லிருந்து 10 நிமிடம் போல மிதமான தீயில் இந்த தண்ணீர் கொதிக்க விட வேண்டும். 2 டம்ளர் தண்ணீர், 1 டம்ளர் தண்ணீர் அளவு சுண்டி வரும்.

- Advertisement -

கொதித்த இந்த தண்ணீரை ஒரு வடிகட்டி யின் மூலம் நன்றாக வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். கசாயம் குடிப்பதற்கு மிதமான சூடு வந்தவுடன் இதில் 1 ஸ்பூன் அளவு தேன் கலந்து குடிக்க வேண்டியது தான். சர்க்கரை தண்ணீர் சேர்க்காத சுத்தமான தேனாக இருக்கவேண்டும். தினமும் காலையில், காலை உணவு சாப்பிட்ட பின்பு இந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.

சாதாரண பட்டையில் இருந்து எடுக்கப்பட்ட பொடியை பயன்படுத்தக்கூடாது. சுருள் பட்டை என்று சொல்லப்படும் பட்டையை இந்த கசாயத்திற்க்கு பொடி செய்து வைத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. 10 நாட்கள் தொடர்ந்து, 1 கப் அளவு காலையில் இந்த கசாயத்தை குடித்து வாருங்கள்.

- Advertisement -

தொடர்ந்து தினம்தோறும் இந்த கசாயத்தை குடித்து வந்தால் படிப்படியாக வயிற்றுப் பகுதிகளில் இருக்கக்கூடிய தொப்பை, இடுப்பில் இருக்கக்கூடிய சதை, தொடை பகுதியில் அதிகமாக இருக்கக்கூடிய சதை அனைத்தும் கரையத் தொடங்கும். இந்த கசாயத்தை குடித்து வருவதால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்பட்டு விடுமோ என்ற எந்த பயமும் தேவையில்லை.

thoppai2

இதை சாப்பிட வேண்டும். இதை சாப்பிடக்கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது. எண்ணெயில் பொறித்த பண்டங்கள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். நிறைய பச்சைக் காய்கறிகளை சாப்பிட்டு வரவேண்டும். இதோடு சேர்த்து இந்த வெயிட் லாஸ் கஷாயத்தையும் குடித்து வாருங்கள். நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -