பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் தல வரலாறு

Siva-lingam

தான்தோன்றீஸ்வரர்

தமிழகத்தில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது, அர்ஜுனன் சேலம் மாவட்டம், பேளூரில் உள்ள தீர்த்தமலைக்கு வருகை தந்தார். தீர்த்தத்தை வேண்டி வந்த அர்ஜுனனுக்கு, சிவபெருமான் காட்சி தந்து, ‘உனது பாணத்தை இப்பகுதியில் செலுத்துவாயாக’ என்று கூறினார். சிவபெருமானை மனதில் நினைத்து, அர்ஜுனனும் தனது பிறை வடிவிலான பாணத்திலிருந்து வில்லினை மலை அடிவாரத்தில் செலுத்தினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், தன் கட்டுப்பாட்டில் உள்ள கங்கை நதியில் பத்தில் ஒரு பங்கு நீரை அந்த அம்பு பாய்ந்த இடத்தில்  பாயும் என்று கூறினார். இந்த நதி ‘வெள்ளாறு’ என்ற பெயரில் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இந்த ஊர் ‘வேல்வியூர்’ என பெயர் பெற்றது. காலப்போக்கில் பேளூர் என மாற்றப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சித்திரை 3ஆம் தேதி முதல் பத்தாம் தேதி வரை சூரியனின் கதிர்கள் தான்தோன்றீஸ்வரர் மீது விழுவது சிறப்பாகக் கூறப்படுகிறது. மா, பலா, இலுப்பை இந்த மூன்று மரமும் சேர்ந்து ஒரே மரமாக காட்சியளிக்கிறது. கோவிலின் தலவிருட்சமான இந்த மரம் கோவிலுக்கு மற்றொரு சிறப்பு.

belur-temple

தல வரலாறு

பல வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில், மிளகு வியாபாரம் செய்து கொண்டிருந்த மாணிக்கம் செட்டியார், அவரது மிளகு வியாபாரத்திற்காக தினமும் மிளகு மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று சந்தையில் விற்று வருவார். ஒரு நாள் கலைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓய்வு எடுத்தார். அப்போது சமையல் செய்ய சுண்டைக் காய்களை ஒரு கல்லில் நறுக்கும் போது ஒரு குரலானது அவருக்கு கேட்டது. ‘எனக்கு கல்லடி பட்டு தலை வலிக்கிறது, உன் மிளகை அரைத்து பற்று போடு’ என்றபடி குரல் ஒலித்தது. மனிதர்களே இல்லாத இடத்தில் குரல் மட்டும் வருவதை கேட்டு பயந்த அந்த வியாபாரி, பயத்தில் ‘என்னிடம் மிளகு இல்லை உளுந்து தான் இருக்கின்றது’ என்று கூறிவிட்டு ஊருக்கு திரும்பி விட்டார். வீட்டிற்கு வந்ததும் மிளகு மூட்டைகளை திறந்து பார்த்தால் அதிர்ச்சி அடைந்தார். மிளகு முழுவதும் உளுந்தாக மாறி இருந்தது.

அதிர்ச்சி அடைந்த அந்த வியாபாரி மீண்டும் அந்தக் குரல் ஒலித்த இடத்திற்கே சென்று இறைவனை வேண்டினார். அப்பொழுது மறுபடியும் அந்த குரல் ஒலித்தது. ‘நீ சுண்டக்காய் நறுக்கிய இடத்திலிருந்து மண்ணை எடுத்து உளுந்தின் மீது தூவு’ என்று கூறியது அந்த குரல். இதன் படி செய்ய உளுந்து மீண்டும் மிளகாக மாறியது. இதன் பிறகு தான் அந்த வியாபாரி, தான் சுண்டக்காய் நறுக்கிய கல்லை உற்று நோக்கினார். அது ஒரு சுயம்பு வடிவமான லிங்கம் என்று தெரியவந்தது. இதன் காரணமாகத் தான் அந்த மிளகு செட்டியார் இந்த கோயிலை கட்டியதாக ஒரு வரலாறு கூறுகிறது. இன்றளவும் அந்த மலையில் உள்ள மண் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

- Advertisement -

belur-temple

பலன்கள்

இந்தக் கோவிலில் கல்யாண விநாயகர் என்று அழைக்கப்படும் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என இரட்டை விநாயகர்கள் உள்ளனர். சங்கட சதுர்த்தி அன்று இந்த இரட்டை விநாயகரை அருகம்புல் அல்லது வெள்ளெருக்கு மாலை சூட்டி வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த விநாயகர் சன்னதி முன்பாகவே திருமணங்கள் நடைபெறும். இந்த கோவிலில் வசிஷ்டரும், அருந்ததியும் நேரடியாக இருந்து ஆசிர்வாதம் செய்வதால், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு இங்கு கிடையாது.

belur-temple

செல்லும் வழி

சேலத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், வாழப்பாடியில் இருந்த இருந்து வடக்கு பகுதியில் 6 கிலோமீட்டர் தூரத்திலும், பேளூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

தரிசன நேரம்:

காலை 6AM -1 மணி வரை
மாலை 4.30PM – 8 மணி வரை.

முகவரி:

26, அயோத்தியாபட்டினம்,
பேளூர் கீழக்காடு ரோடு,
பேளூர்,
பாரதி நகர்,
சேலம் மாவட்டம்.
தமிழ்நாடு 63 61 04
தொலைபேசி எண்:
+91-9865809768, 9787709742.

இதையும் படிக்கலாமே
அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தல வரலாறு

English Overview:
Here we have Belur temple history in Tamil. Belur thanthondreeswarar temple timings. Thanthondreeswarar temple history in Tamil.