முருகனை வணங்குவதால் என்னவெல்லாம் பெறலாம் தெரியுமா ?

murugan-manthiram1-1

தமிழ் கடவுளான முருகனை மக்கள் எப்போதிருந்து வழிபட தொடங்கினார்கள் என்று யாராலும் அறுதியிட்டு கூறவே முடியாது. உலகின் முதல் மொழியான தமிழ் மொழியை உலகிற்கு தந்தவர் முருகனே. பல யூகங்களை கடந்து தன்னுடைய பக்தர்களுக்கு தொடர்ந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானை வணங்குவதால் என்ன பலன் கிடைக்கும் என்று பாப்போம் வாருங்கள்.

murugan

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் மனிதப்பிறவியில் சில துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அத்தகைய விதியை மாற்றி எழுதும் சக்தி பெற்றவர் முருக பெருமான்.

முருகனை தினமும் வழிபாடுபவர்களிடம் பில்லி சூனியம் ஏவல் போன்ற எந்த தீய சக்தியும் அண்ட முடியாது.

பாம்பு, பிசாசு, கொடிய பூதம், இயற்கைச் சீற்றமான வெள்ளம் மற்றும் பகைவர்கள் மூலமாக ஏற்படும் பிரச்சனைகள் போன்றவை முருக பக்தர்களை நெருங்க முடியாது.

எத்தகைய கொடிய நோயில் இருந்தும் விடுவித்து பக்தர்களுடைய மனதில் இருந்து மரண பயத்தை விரட்டும் தன்மை முருகனுக்கு உண்டு.