கனவு காண்பதால் ஏற்படும் அற்புத பலன்கள்

பொதுவாக நாம் உறங்கும் பொழுது கனவு வந்தால் அந்தக் கனவிற்கு ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும். என்று பெரியவர்கள் கூறுவார்கள். அந்த கனவுகள் எந்த நேரத்தில் வருகிறதோ, அதற்கு உண்டான பலன்களை பற்றி இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம்.

Dream

அதன்படி, இரவு ஒரு மணிக்கு நமக்கு கனவு வந்தால் அது ஒரு வருடம் கழித்து நமக்கு நடக்கும் என்ற ஒரு ஐதீகம் உள்ளது. அதே போன்று இரண்டு மணிக்கு வந்தால் அது மூன்று மாதத்திற்குள் நடக்கும் என்றும் மேலும் நாம் அதிகாலை காணும் கனவு அப்போதே நிறைவேறும் என்றும் ஒரு அதிகம் உள்ளது. ஒரு குளம் முழுக்க நீர் இருப்பது போன்று நாம் கனவு காணுங்கள் நாம் நினைத்தது நிறைவேறும். மேலும் நமக்கு நண்பர் வட்டாரம் மற்றும் காதல் கை கூடும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. மேலும் நீரூற்று வெற்றிகரமாக நமக்கு கனவு ஏற்பட்டால் நமக்கு ஏதோ தீங்கு அல்லது நம்மை விட்டு ஒருவர் பிரிவது போன்ற நிகழ்வுகள் நமக்கு ஏற்படும்.

தாமரைப் பூ போன்று நாம் ஒரு மலரை பார்க்கும் கனவு வந்தால் நமக்கு பண வரவு அதிகமாகும். மேலும், நமக்கு கடன் பிரச்சினைகளும் முழுவதுமாக தீரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. நாம் தாமரைமலர் பார்த்த அதே குளத்தில் காலை அழுவது போன்று கனவு வந்தால் நம் கடன்கள் அனைத்தும் நீங்கும். மேலும், நம் நிதிப் பற்றாக் குறைகள் அனைத்தும் தீர்வை அடைந்து நமக்கு பணவரவு அதிகரிக்கும். வீட்டைச் சுற்றி தண்ணீர் இருப்பது போல் கனவு கண்டால் பொருளாதார பிரச்சினைகள் நீங்கும். இருப்பினும் அக்கம்பக்கத்தினர் இடையே பிரச்சனைகளும் நமக்கு வரும். நம்முடைய நெருங்கிய உறவினர்களான நம்முடைய மூதாதையர்கள் நம் கனவில் வந்தால் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் அவர்கள் மூலம் விருத்தியாகும். குடும்பத்தின் உறவினர்களான நபர்கள் இறந்த பின் நமது கனவில் வந்தால் அவர்கள் நம்முடன் இருந்து நம் பிரச்சனைகள் தீர்ப்பார்கள். மேலும் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு மற்றும் சண்டை சச்சரவு ஆகிய அனைத்தும் நீங்கி உறவுக்குள் ஒரு புதிய இணைப்பு உண்டாகும்.

dream

அதேபோன்று நம்முடைய இறந்த மூதாதையர்கள் நம்முடன் உணவு அருந்துவது போன்று இருந்தால். சுபச்செய்தி வந்து அடையும். மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பது போன்று கனவு வந்தால் எந்த ஒரு கெட்ட பிரச்சனைகளும் அண்டாது. நீங்கள் கிழிந்த பழைய உடையை அணிந்தாலும் உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள் என்று அர்த்தம். அதேபோன்று, புத்தாடை உடுத்தினால் உங்களுக்கு புதியதாக ஒரு பிரச்சனையும் ஒரு சிக்கலான நிலைமையில் ஏற்படும் என்று அர்த்தம். மேலும் அந்தப் பிரச்சினையை நீங்கள் உங்களிடம் செல்வாக்காக பழகும் நபர்கள் மூலம் அந்த பிரச்சனையை எளிதாக கடந்து வருவீர்கள் என்று அர்த்தம்.கனவில் நகைகளை அடகு வைப்பது போல கனவு கண்டால் சொத்து பிரச்சனைகள் தீரும். யாராவது ஒருவர் இறப்பதுபோல கனவு கண்டால் அவர்களின் ஆயுள் கூடும்.

இதையும் படிக்கலாமே:
கோவிலுக்கு செல்லும் பொழுது கவனிக்கவேண்டியவை

English Overview:
Here we have benefits of a dream in Tamil. we have details of the benefits of dream too.