கோவிலுக்கு செல்லும் பொழுது கவனிக்கவேண்டியவை

temple

அனைவரும் வாழ்வில் பல நன்மைகள் கிடைத்திடவும், நமக்கு உண்டான தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்க்காகவும், இறைவனை நாடி செல்கின்றோம். இருந்தபோதிலும் நம் பிராத்தனைகள் சில சமயங்களில் நிறைவேறாமல் போகின்றது. இதற்கு காரணம் நாம் பிராத்தனை செய்யும் பொழுது சில தவறுகள் நம்மை அறியாமலே செய்துவிடுகிறோம். அத்தவறுகள் என்னவென்றும் அதை சரி செய்யும், வழிமுறைகளைப் இப்பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

MathuraKaliamman Temple

நாம் அன்றாடம் கோவிலுக்கு செல்லும்பொழுது குளித்துவிட்டு செல்ல வேண்டும். முடிந்தவரை பூ அல்லது பழம் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். கோவில் உள்ளே நுழையும் பொழுது முதலில் கோபுரத்தை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். விநாயகரை வணங்கிய பிறகுதான் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும். நீங்கள் பெருமாள் சன்னதி அல்லது சிவன் சன்னதிக்கு செல்லும் பொழுது துளசி இலைகளை கொண்டு சுவாமியை வழிபடவேண்டும்.

நமது வேண்டுதல்களை எல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். அப்போது சிவநாமம், நாராயணநாமம் மட்டுமே கூறவேண்டும். ஆலயத்திற்குள் நுழையும் பொழுது மற்றவர்களை எந்த காரணம் கொண்டும் மற்றவர்களை வணங்கக்கூடாது. சனி பகவானை வணங்கும் பொழுது நேருக்குநேர் நின்று வணங்கக்கூடாது. சற்று ஒதுக்கு புறமாக நின்று சனி பகவானை வணங்கக்கூடாது. கோவில் வளாகத்திற்குள் நுழையும்பொழுது கோவிலை அசுத்தம் செய்யவோ குப்பைகளை போடவோ கூடாது.

கோவிலின் உள்ளே நுழையும் போது பிரசாதம் தவிர வேறு எதையும் எடுத்து செல்லக்கூடாது. சண்டிகேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும்போது சன்னதிக்கு உள்ளே சத்தம் போடக்கூடாது. பின்பு நீங்கள் எடுத்து வந்த பிரசாதத்தை வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து வணங்கிய பின் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிரசாதத்தை தரவேண்டும். இவ்வாறு செய்தால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே:
புரட்டாசி மாத ராசி பலன் – 2019

English Overview:
Here we have puratasi month rasi palan in tamil. We have details of rasi palan too.