உங்கள் வீட்டில் பீரோவை திறந்த உடன் துர்நாற்றம் வீசுகிறதா?  பீரோவுக்கு உள்ளே இருக்கும் துணிகள் கூட எப்போதும் கமகம வாசத்துடன் இருக்க, செலவே இல்லாமல் சூப்பர் டிப்ஸ்.

dress

நம்முடைய வீட்டு பீரோவை என்னதான் சுத்தம் செய்து பராமரித்து வந்தாலும், பீரோவில் அடுக்கி வைத்திருக்கும் துணிகளை நீண்ட நாட்கள் உடுத்தாமல் துவைக்காமல் அப்படியே விட்டு வைத்திருந்தால், பீரோவிலிருந்து ஒரு கெட்ட வாடை வீச தொடங்கும். நீண்ட நாட்களாக அப்படியே வைத்திருந்த புடவைகளை எடுத்து கட்டும் போது சில சமயம் அந்த வாசனையை நாம் நன்றாக உணர்ந்திருப்போம். அடுத்தவர்கள் கட்டி வரும் புடவையில் கூட அந்த வாசம் நமக்கு வீசி இருக்கும். அதாவது வருடக்கணக்கில் கட்டாத புடவையை அப்படியே மடித்து பீரோவில் வைத்து இருந்தால் வரும் வாடை அது. உங்களுடைய வீட்டு பீரோவில் இந்த வாடை வீசுமா. அந்த கெட்ட வாடையை சரி செய்ய சுலபமான முறையில் செலவே இல்லாமல் ஒரு டிப்ஸை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sambirani

உங்களுடைய வீட்டில் பூஜை அறையில் இருக்கும் கம்ப்யூட்டர் சாம்பிராணி, சந்தன பொடி, சமையலறையில் சமையலுக்கு பயன்படுத்தும் சோடா உப்பு இந்த 3 பொருட்களும் போதுமே. உங்கள் பீரோவை வாசமாக வைக்க. சரி இந்த வாசனை கலவையை எப்படி தயார் செய்வது.

முதலில் கம்ப்யூட்டர் சாம்பிராணியையும், சந்தன வில்லைகளையும், தூளாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கவரில் வைத்து, கல்லை கொண்டு இடுத்துக் கொண்டாலும் சரி அல்லது சிறிய உரல் இருந்தால் அதில் போட்டு இந்த இரண்டு பொருட்களையும் பவுடராக பொடி செய்து கொண்டாலும் சரி சாம்பிராணி பொடி சந்தனப் பொடி இந்த இரண்டு தூளையும் முதலில் நன்றாக கலந்து விடுங்கள். இதோடு ஒரு ஸ்பூன் சோடா உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விட  வேண்டும்.

sandhanam

இந்தக் கலவையை ஒரு சிறிய டம்ளர் அல்லது பிளாஸ்டிக் கப் எதில் வேண்டுமென்றாலும் வாசனை மிகுந்த பொடியை நிரப்பிக் கொள்ளுங்கள். இந்தப்பொடி கீழே சிந்தாமல் இருக்க மேலே ஒரு பேப்பரைப் போட்டு அதன் மேலே ஒரு ரப்பரையும் போட்டு விடுங்கள். அந்த பேப்பரின் மேல் பக்கத்தில் சிறிய ஓட்டைகளைப் போட்டு விட வேண்டும். அவ்வளவு தான், நம் கையால் தயாரித்த சென்ட் ரெடி. இதை உங்களுடைய வீட்டு பீரோவில் ஒரு பக்கமாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

மிகவும் உயரமான டம்ளரில் இந்த வாசனை மிகுந்த கலவையை போட வேண்டாம். வாசனை வெளிவருதில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். உயரம் குறைந்த ஒரு கப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதில் இருந்து வெளிவரக்கூடிய நல்ல நறுமணம் உங்கள் வீட்டு பீரோ முழுவதும் நிறைந்திருக்கும். இந்த நறுமணம் தான் உங்கள் வீட்டு பீரோவில் இருக்கும் துணியிலும் வீசும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

uthuvathi

உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் சாம்பிராணி வைத்து இல்லை என்றாலும் பரவாயில்லை. சாதாரண ஊதுவத்தி இருந்தால் கூட அதை கவருடன் வைத்து ஒரு கல்லை வைத்து தட்டினால் குச்சியின் மேலே இருக்கும் கருப்பு நிற வாசனை மிகுந்த ஊதுவத்தி துகள்கள் தனியாக உங்களுக்கு வந்துவிடும். அதை எடுத்து நசுக்கி தூளாக மாற்றியும் இந்த கலவையை தயார் செய்து வைத்துக்கொள்ளலாம்.

cup

இதோடு சேர்த்து உங்களுக்கு ஜவ்வாது, மரிக்கொழுந்து, ரோஜா இப்படியாக எந்த வாசம் பிடிக்கிறதோ அந்த வாசத்தின் பொடி கூட கொஞ்சமாக இந்த கலவையோடு சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம். ஆனால் வாசனை நிறைந்த எஸன்ஸை இதற்கு பயன்படுத்தக்கூடாது. கலவை சீக்கிரமே கெட்டுப் போய்விடும். நாம தயார் செய்து வைத்திருக்கும் கலவையை ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இல்லை. ட்ரை பண்ணி பாருங்க. இந்த வாசனை ரொம்ப சூப்பரா இருக்கும்.